தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 9 november 2014

ISIS தலைவரை தாக்கியது அமெரிக்கா குறி தப்பவில்லை ..


அபூபக்கர் அல் பஹாடி (ISIS) தீவிரவாதிகளின் தலைவர் இருக்கும் இடத்தை குறிவைத்து அமெரிக்கா பாரிய தாக்குதலை நடத்தியுள்ளது என அதிரும் செய்திகள் சற்று முன்னர் வெளியாகியுள்ளது. பல நாடுகளில் வியாபித்து இருக்கும் ISIS இயக்கத்தின் தலைவர் என்று அறியப்படுபவர், அபூபக்கர் ஆவார். இந்த விடையம் பலருக்கு தெரியாது. இவ்வியக்கம் தமது தலைமை பாதுகாப்பதற்காக வேறு முக்கிய நபர்களையே தமது தலைவர் என்று சொல்லி வருவது வழக்கம். இருப்பினும் சரியான தலைவரை கண்டு பிடித்தது மட்டுமல்லாது, அவர் தங்கியிருந்த பரம ரகசியமான இடத்தையும் அமெரிக்கா எப்படி கண்டுபிடித்தது என்பது பெரும் கேள்விக்குறியாக உள்ளது.
அல்- குவைம் என்னும் நகர், சிரியா மற்றும் ஈராக் எல்லையில் உள்ளது. இன் நகரில் இன்றைய தினம் அதி உயர் தலைவர்களின் சந்திப்பு ஒன்று நடந்துள்ளது. இச்சந்திப்பில் தலைவர் அபூபக்கர் மற்றும் முக்கியமான பலர் கலந்துகொண்டுள்ளார்கள். இந்த இடத்தை அமெரிக்கா துல்லியமாக அறிந்து தாக்குதல் நடத்தியுள்ளது. அமெரிக்காவின் 2 போர் விமானங்கள் நடத்திய பாரிய தாக்குதலில், அபூபக்கர் படுகாயமடைந்துள்ளார். அவரை ISIS தீவிரவாதிகள்உடனடியாக வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றுள்ளார்கள். இதேவேளை அவருக்கும் காயப்பட்ட மேலும் பலருக்கும் ரத்தம் தேவைப்பட்டுள்ளதால், அவர்கள் அந்த ஊரில் உள்ள மக்களை பிடித்துச் சென்று ரத்தத்தைப் பெற்றுள்ளார்கள் என்ற விடையத்தையும் அமெரிக்கா அறிந்து செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.
நாம் இச்செய்தியை எழுதும்வரை (இன் நேரம் வரை) ஐ.எஸ் ஐ.எஸ் இயக்கம் இத்தாக்குதல் தொடர்பாக எந்த ஒரு அறிவித்தலையும் இதுவரை வெளியிடவில்லை.


Geen opmerkingen:

Een reactie posten