மகிந்தவுக்கு ஆதரவாக புதிய இடதுசாரி கட்சி உருவாக்கம்!- வெளிநாடுகளின் தூதுவர்களை சந்திக்க தயாராகும் ஜனாதிபதி
[ ஞாயிற்றுக்கிழமை, 09 நவம்பர் 2014, 06:12.51 AM GMT ]
இது சம்பந்தமாக இரண்டு சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன.
அரசாங்கத்துடன் கொள்கை ரீதியான முரண்பாடுகள் காரணமாக மோதல்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் கூட்டணி கட்சிகள், அந்த கட்சிகளில் இருக்கும் அரசாங்கத்திற்கு எதிரான அணிகளை அடக்கவும் அரசாங்கத்தில் உள்ள முற்போக்கான இடதுசாரி கட்சிகளின் விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையிலும் இந்த புதிய இடசாரி கட்சி உருவாக்கப்பட உள்ளதாக பேசப்படுகிறது.
முக்கிய அமைச்சர் ஒருவரின் ஆலோசனைக்கு அமைய ஜே.வி.பியின் கம்பஹா மவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிபால அமரசிங்க மற்றும் ஜே.வி.பியின் முன்னாள் உறுப்பினர்கள் இருவர் தலைமையில் இந்த புதிய கட்சி உருவாக்கப்பட உள்ளது.
இந்த கட்சியில் இணையும் நபர்களுக்கு பணத்தை வழங்க பல வர்த்தகர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
வெளிநாடுகளின் தூதுவர்களை சந்திக்க தயாராகும் ஜனாதிபதி
இலங்கையில் உள்ள வெளிநாடுகளின் தூதுவர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தயாராகி வருகிறார்.
இதற்கான ஏற்பாடுகளை துரிதமாக செய்யுமாறு ஜனாதிபதி வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த காலங்களில் நடந்தவைகள், எதிர்காலத்தில் நாட்டில் ஏற்பட போகும் அரசியல் மாற்றங்கள் மற்றும் இராஜதந்திர கொள்கைகள் தொடர்பில் இந்த பேச்சுவார்த்தையின் போது கவனம் செலுத்தப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் இலங்கையின் தற்போதைய அரசாங்கத்தை கவிழ்க்கும் சதித்திட்டத்தில் ஈடுபட்டு வருவதாக அரசாங்க தரப்பில் குற்றம் சுமத்தப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszBTdKXeo3.html
பிரபா கணேசன் அரசியல் தேவைகளுக்காக கூட்டமைப்பை விமர்சனம் செய்வதை தவிர்க்க வேண்டும்: அரியம் எம்.பி
[ ஞாயிற்றுக்கிழமை, 09 நவம்பர் 2014, 06:41.05 AM GMT ]
பாராளுமன்றம் கலையும் காலகட்டத்தில் இலங்கை அரசாங்கத்தின் 110வது அமைச்சராக பதவியேற்ற தொலைத்தொடர்பு தொழிநுட்ப பிரதி அமைச்சர் பிரபா கணேசன் மட்டக்களப்பிற்கு வருகை தந்தபோது கூறிய கருத்துத் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
த.தே.கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்றம் வருவது அங்குள்ள சிற்றூண்டிச்சாலையில் உணவு உண்பதற்கே என கூறியிருக்கின்றார்.
பிரபா கணேசனின் அரசியல் வரலாறு எப்படிப்பட்ட தென்பது எங்களுக்குத் தெரியும். ஆனால் த.தே.கூட்டமைப்பினைப் பற்றி, அதுவும் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்ட த.தே.கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களைப் பற்றி கதைப்பதற்கோ, விமர்சிப்பதற்கோ இவருக்கு எந்த அருகதையும் இல்லை.
இவர் உப்புச்சப்பு இல்லாத அமைச்சர் பதவியை வைத்துக் கொண்டு மட்டக்களப்பிற்கு வருகை தந்து உப்புச்சப்பு இல்லாத விடயங்களைக் கூறுவதென்பது, அவருக்கும், அவரது அரசாங்கத்திற்கு நல்லதாக இருக்கலாம். ஆனால் த.தே.கூட்டமைப்பினரைப் பற்றி கதைக்க வேண்டிய தேவை அவருக்கில்லை என்பதனை முதலில் அவர் புரிந்து கொள்ள வேண்டும்.
நாங்கள் எங்களுடைய பன்முகப்படுத்தப்பட்ட நிதியினை எங்கள் மக்களுக்காக ஒதுக்கி அதற்கான வேலைத்திட்டங்களை செய்து வருகின்றோம்.
அவ்வாறிருக்கையில், ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஒதுக்கப்படும் பன்முகப்படுத்தப்பட்ட நிதி மக்களுக்கு பயன்படுத்தப்படாமல் திரும்பிப் போவதாக கூறியிருக்கின்றார்.
ஆகவே எந்த வருடத்தில், எந்தப் பாராளுமன்ற உறுப்பினரது நிதி மக்களுக்கு பயன்படாமல் திரும்பிப் போயிருக்கின்றது என்பதனை அவர் தெளிவுபடுத்த வேண்டும்.
இவர் உடனடியாக மலையக மக்களின் இன்றைய தேவை என்ன என்பதனை அறிந்து, அது தொடர்பாக ஜனாதிபதியிடம் சென்று அந்த மக்களின் அவலங்கள் பற்றி எடுத்து கூறி அதனை தீர்ப்பதற்கான வழிவகைகளை மேற்கொள்ள வேண்டும் இதுவே இன்றைய தேவையாகும்.
எல்லோரும் த.தே.கூட்டமைப்பினரைப் பற்றி கதைக்கின்றார்கள் என்பதற்காக பிரபா கணேசனும் கதைப்பதென்பது பொருத்தமானதல்ல என்பதனை அவர் புரிந்து கொள்ளவேண்டும்.
ஆகவே தங்களின் சுயநல அரசியலுக்காக த.தே.கூட்டமைப்பினரை பற்றி கதைப்பதையோ, விமர்சிப்பதையோ 110வது அமைச்சராக இருக்கும் பிரபா கணேசன் தவிர்க்க வேண்டும் எனவும் கூறினார்.
http://www.tamilwin.com/show-RUmszBTdKXeo5.html
மக்களின் துயரத்தில் அரசியல் இலாபம் தேட முனையக்கூடாது
[ ஞாயிற்றுக்கிழமை, 09 நவம்பர் 2014, 06:54.49 AM GMT ]
மண்ணுக்குள் புதையுண்டவர்களை தேடி மீட்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் அதேவேளை, பாதிக்கப்பட்ட மக்கள் பூனாகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பாடசாலையில் சுமார் 200பேர் வரையில் தங்கியுள்ளனர்.
அதேவேளை இவர்களுக்குத் தேவையான உதவிகளை அனர்த்த முகாமைத்துவ அமைப்பின் கீழ் இயங்கும் நிலையமும், படையினரும் மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அதேவேளை, பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமூக தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள், பொது அமைப்புக்கள் எனப் பல்வேறு தரப்பினரும் நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றன.
மேலும் பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான நிவாரணங்களை நேரடியாகக் கையளிக்கும் வகையில் எடுத்துச் சென்ற போதிலும் அதற்கு அனுமதி வழங்கப்படவில்லை எனவும் பொதுவாகக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
எவ்வாறு இருந்த போதிலும் இம்மக்கள் உப்புச் சிரட்டை தொடக்கம் அனைத்து தேவைகளுக்கும் பிறரிடம் கையேந்த வேண்டிய அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
ஒருவகையில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் வீடு வாசல்கள், சொந்த பந்தங்கள் என்று அனைத்தையும் இழந்து எவ்வாறு சொல்லொணாத் துன்பங்களை எதிர்நோக்கினார்களோ அதே வகையிலேயே மீரியபெத்த மக்களும் இன்று அவலங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
தற்பொழுது பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பான இருப்பிட வசதி மற்றும் அடிப்படை வசதிகளை மேற்கொள்ள வேண்டியது அரசாங்கத்தின் கடப்பாடாகும்.
அந்த வகையில் மீண்டும் நிலச்சரிவு ஏற்படாத பிரதேசங்கள் சரியான வகையில் ஆராயப்பட்டு அங்கு வீடுகள் நிர்மாணிக்கப்படுவதுடன், குறித்த மக்களுக்குத் தேவையான பொருளாதார வசதிகளும் செய்து கொடுக்கப்பட வேண்டும்.
தற்பொழுது பல்வேறு அமைப்புக்களினாலும் நிறுவனங்களினாலும் வழங்கப்பட்டு வரும் நிவாரண உதவிகள் அவர்களுக்குத் தற்காலிக நிவாரணங்களாக அமையுமே தவிர நிரந்தர நிவாரணமாக அமைய மாட்டாது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
அந்த வகையில் அரசாங்கம் அவர்களுக்குப் பாதுகாப்பான குடியிருப்பு வசதிகளை மேற்கொள்வது மிகவும் இன்றியமையாததொன்றாகும். அது மாத்திரமன்றி, மண்சரிவு அபாயமுள்ள இதர பகுதிகளும் இணங்காணப்பட்டு அவர்களுக்கும் துரிதமாக வீடுகளை அமைத்துக் கொடுப்பது அவசியம்.
இதேவேளை, மீரியபெத்த தோட்ட மக்கள் கோரிக்கை ஒன்றையும் முன் வைத்துள்ளனர். அதாவது, எப்போதும் தாங்கள் காலாகாலமாக ஒன்றிணைந்து வாழ்ந்தது போல ஒற்றுமையாக வாழ வழி செய்யும் வகையில் பாதிக்கப்பட்ட மீரியபெத்த மக்களை ஓரிடத்தில் குடியமர்த்துமாறும் எக்காரணம் கொண்டும் தங்களை பிரித்து வேறு இடங்களில் குடியமர்த்த வேண்டாம் எனவும் வினயமாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதேவேளை, பாதிக்கப்பட்ட மக்களின் ஒரே ஏக்கம் தங்களுக்குத் துரிதமாக வீடு மனைகள் அமைத்து கொடுக்கப்படுமா? அல்லது அதிகாரிகள் வந்து பார்வையிட்டதோடு அனைத்தும் முற்றுப் பெற்று விடுமா? என்பதே ஆகும். அது மாத்திரமன்றி, எவ்வளவு காலத்திற்கு இவ்வாறு நிர்க்கதியான நிலையில் குறித்த பாடசாலையில் தங்கியிருப்பது என்றும் அவர்கள் வினா எழுப்பி வருகின்றனர். போதுமான அடிப்படை வசதி களற்ற நிலையில் முகாமிலுள்ள குறித்த மக்கள் மீண்டும் சகஜ வாழ்க்கை வாழ்வதற்கான சூழலை எதிர்பார்த்தவர்களாகக் காத் திருக்கின்றனர். அந்த வகையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேற்கொள்ள வேண்டிய பாரிய பொறுப்பு அரசாங்கத்தையும் குறித்த மக் களை பிரதிநிதித்துவ படுத்தும் அரசியல்வா திகளையும் சார்ந்ததா கும்.
அனர்த்தம் ஏற்பட்ட தினத்திலிருந்து அன்றாடம் பெரும் எண்ணிக்கையான அரசியல் தலைவர்கள் பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாகச் சென்று பார்வையிட்டு வருவதுடன், தம்மாலான நிவாரண உதவிகளையும் வழ ங்கி வருகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாகச் சென்று பார்வையிட்டு அவர்களுக்கு அனுதாபம் தெரிவிக்க வேண்டியது மனிதாபிமானமுள்ள அனைவரினதும் கடப்படாகும். இதில் இருவேறு கருத்துக்களுக்கு இடமிருக்க முடியாது.
அதேவேளை, இதனை அரசியலாக்கி அதில் ஆதாயம் தேடவும் மக்களை பிரித்து அதில் குளிர் காயவும் ஒருசில அரசியல்வாதிகள் முயல்வது மிகவும் விசனத்துக்குரியதாகும். அந்த வகையில் பாதிக்கப்பட்ட மக்களை வைத்து அரசியல் ஆதாயம் பெற எவ ரும் முயல்வார்களேயானால் அது எந்தவகையிலும் ஏற்றுக் கொள்ளவோ ஜீரணிக்கவோ கூடியதல்ல என்பதை நினைவில் கொள்வது அவசியமாகும்.
பல்வேறு சந்தர்ப்பங்களில் தங்கள் அரசி யல் நலனுக்காகவும் தங்கள் இருப்பை தக்கவைத்துக் கொள்ளும் வகையிலும் ஒருசில அரசியல்வாதிகள் மக்களை பிரித்தாளும் நட வடிக்கைகளை மிகவும் கச்சிதமாக மேற்கொண்டு வருகின்றனர்.
இதுவே தமிழ் சமூகத் தின் சாபக்கேடாக தொடர்ந்து வருகின்றது. அந்த வகையில் இந்த நாட்டில் தமிழ் மக்கள் எந்த திக்கில் பாதிக்கப்பட்டாலும் அவர்களுக்காகக் குரல் கொடுக்கவேண்டியது தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து தரப்பினரதும் கடப்பாடாகும்.
தமிழ் மக்களை பொறுத்தமட்டில் சகல வழிகளிலும் அவர்கள் மிகுந்த அரசியல் தெளிவு கொண்டவர்களாகவே காணப்படுகின்றனர். வெறுமனே அரசியல்வாதிகளின் முதலைக் கண்ணீருக்கும் பசப்பு வார்த்தைகளுக்கும் மதிமயங்கி ஏமாறும் நிலையில் அவர்கள் இல்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
குறித்த பிரதேசத்தில் மண்சரிவு அபாயம் ஏற்படுமென்று 2005 ஆம் ஆண்டும் 2011ஆம் ஆண்டும் அடுத்தடுத்து இரு தடவை கள் தேசிய கட்டட ஆய்வு மையமும், அனர்த்த முகாமைத்துவ அமை ச்சர் மஹிந்த அமரவீரவும் எச்சரிக்கை விடுத்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் மக்கள் பிரதிநிதிகள் எவரும் கருத்தில் கொண்டி ருந்தாலோ அன்றேல், குறித்த குடியிருப்புக்களை பாதுகாப்பான இடத்துக்கு மாற்றியமைக்க எவரும் நடவடிக்கைகள் எடுத்திருந்தாலோ இந்த உயிரிழப்புக்களைத் தடுத்திருக்க முடியும்.
பொதுவாகவே மலையகத்தில் காணப்படும் லயன் குடியிருப்புக்கள் பழைமை வாய்ந்தவை மாத்திரமன்றி, இயற்கையின் சீற்றங்களுக்கு பாதுகாப்பானவையும் அல்ல. எனினும், அதனை மாற்றியமைத்து தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு காணும் போக்குகளைக் காண முடியாத நிலைமைகளே தொடருகின்றன.
எவ்வாறெனினும் மீரியபெத்த அனர்த்தம் தோட்டத் தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பான இடங்களில் குடியிருப்புக்கள் நிர்மாணிக்கப்பட வேண்டும் என்ற அவசியத்தை மீண்டும் உயிரூட்டி உள்ளது என்றே கருத வேண்டியுள்ளது.
இதனிடையே பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான வீடுகளை அமைத்து கொடுக்க இந்தியா தயாராக இருப்பதாக கண்டிக்கான இந்தியப் பிரதித் தூதுவர் ஏ. நட்ராஜா தெரிவித்துள்ளார். அத்துடன் தாய், தந்தையரை இழந்துள்ள பிள்ளைகளுக்கு புலமைப் பரிசில் வழங்கி இந்தியாவுக்கு அனுப்பிவைக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பதுளை மாவட்டத்தில் இந்திய அரசு 2 ஆயிரம் வீடுகள் அமைத்து கொடுக்க இருப்பதாக முன்னர் தெரிவிக்கப்பட்டது. அந்த 2 ஆயிரம் வீட்டுத் திட்டத்தில் ஒரு பகுதியாக மீரியபெத்த மண் சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான வீடுகளை அமைத்து கொடுப்பது தொடர்பிலும் ஆராயப்படுமென அவர் தெரிவித்துள்ளார்.
எந்த வகையிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் துரிதமாக வீடுகளை அமைத்துக் கொடுக்க வேண்டிய பாரிய பொறுப்பு அரசாங்கத்தை சார்ந்ததாகும். எனவே, மேலும் காலத்தை நீடிக்காத வகையில் குறித்த மக்களின் துயரைத் துடைக்க நடவடிக்கை எடுப்பது அனைத்து தரப்பினரதும் கடமை என்பதை நினைவு படுத்த விரும்புகின்றோம்.
http://www.tamilwin.com/show-RUmszBTdKXeo6.html
Geen opmerkingen:
Een reactie posten