[ வெள்ளிக்கிழமை, 21 நவம்பர் 2014, 01:18.25 AM GMT ]
நிகழ்வு ஒன்றின் போது உரையாற்றிய அவர், ஐக்கிய தேசியக் கட்சியின் நிர்வாகத்தை கொண்டு செல்லக் கூடியவர் அவர் என்ற வகையில் இதனைக் கூறுவதாக குறிப்பிட்டுள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவை நியமிக்காது போனால் பல்வேறு வெளித்தரப்புக்களும் கரு ஜெயசூரியவை வேட்பாளராக நியமிக்குமாறு கோரும் சந்தர்ப்பங்கள் உள்ளன.
இது கட்சிக்கு அழுத்தத்தை ஏற்படுத்தும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBRVKYhq1.html
யுத்தத்திற்காக செலவழித்த பணம் அபிவிருத்திக்கு செலவழிக்கப்படுகின்றது!- அமைச்சர் மஹிந்த யாப்பா
[ வெள்ளிக்கிழமை, 21 நவம்பர் 2014, 12:10.17 AM GMT ]
மாத்தறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் அமைச்சர் யாப்பா இதனைத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர் யாப்பா, நாட்டில் தற்போது எங்கு திரும்பினாலும் அபிவிருத்திப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. ஆனால் முன்னொரு காலத்தில் நாட்டில் எங்கு பார்த்தாலும் யுத்தம் காரணமாக உயிரிழந்தவர்களின் மரண வீடுகள் தான் காணப்பட்டன.
இன்று ஜனாதிபதியின் ஆளுமையின் முன்னால் எதிர்க்கட்சிகள் தாக்குப்பிடிக்க முடியாமல் திணறி வருகின்றன. இதன் காரணமாக அவர்களால் இதுவரை ஒரு பொது வேட்பாளரைக் கூட தேடிக் கண்டுபிடித்துக் கொள்ள முடியவில்லை. தேர்தல் முடியும்வரை அவர்களால் பொது வேட்பாளரைத் தேடிக்கொள்வது சிரமமாகவே இருக்கும்.
எதிர்வரும் ஆண்டில் மாத்தறை முழுமையாக அபிவிருத்தி செய்யப்பட்ட மாவட்டமாக மாறிவிடும். அதற்கான காரணம் ஜனாதிபதியின் அபிவிருத்திப் பணிகள் தான்.
எனவே பொதுமக்கள் அவரது வெற்றியை உறுதிப்படுத்த முன்வரவேண்டும் என்றும் அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்
http://www.tamilwin.com/show-RUmszBRVKYhq0.html
Geen opmerkingen:
Een reactie posten