[ வியாழக்கிழமை, 20 நவம்பர் 2014, 10:21.04 PM GMT ]
கனேடிய நாடாளுமன்றத்தில் கனடாவில் குழந்தைகளின் வறுமை குறித்து மோசன் எம்.534 கீழ் ஆற்றிய உரையில் அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கனேடிய அரசாங்கம் 25 ஆண்டுகளுக்கு முன்னர் குழந்தைகளின் வறுமை மற்றும் பட்டினியை அறவே ஒழித்து விட வேண்டும் என உறுதிப்பூண்டிருந்தது.
ஆயினும் இந்த உறுதியிணை இன்னும் கனேடிய அரசாங்கத்தினால் நிறைவேற்ற முடியாதுள்ளது.
ஒரு மில்லியன் கனேடிய குழந்தைகள் இன்னும் வறுமையில் வாடி வருகின்றனர்.
உலகில் செல்வந்த நாடுகளின் ஒன்றான எமது மகத்தான கனடா, நமது நாட்டில் முற்றாக வறுமை ஒழிக்கப்பட்டு விடும் என ஐ.நா சபையில் தெரிவித்திருந்தமை எம் எல்லோருக்கும் நினைவிருக்கலாம்.
இதன் முதல் கட்டமாக கனடாவில் வறுமையில் வாடி தவிக்கும் ஒரு மில்லியன் குழந்தைகளின் பட்டினியை போக்கி, அவர்களின் உணர்வினை அறிந்து அவர்களது வளர்ச்சிக்கு வழிகோல வேண்டியது கனேடிய அரசாங்கத்தின் மிகப் பெரிய கடமையல்லவா?.
பூனை தனது கண்களை மூடிக்கொண்டு உறங்கும் போது முழு உலகமே இருளாக இருக்கின்றது என்று எண்ணுவது போல் நமது அரசாங்கம் தனது கண்களை இறுக மூடிக்கொண்டு கனேடிய எல்லையெங்கும் வறுமையோ பட்டினியோ இல்லை என்று கூறுவதை போல் உள்ளது.
கடந்த 25 ஆண்டுகளாக குழந்தைகளின் வறுமை வீதம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே சென்றது என்பது ஒரு மறுக்க முடியாத உண்மையாகும்.
கனடாவில் வறுமை காரணமாக ஒரு மில்லியன் குழந்தைகள் போஷாக்கின்மையோடு வாழ்ந்து வருவதை நீங்கள் அறிந்துள்ளீர்கள்.
வறுமை என்பது எப்படி மறுக்க முடியாத உண்மையோ, வறுமை மற்றும் பட்டினி காரணமாக ஏற்பட்டுள்ள குழந்தைகளின் போஷாக்கின்மையும் உணவு பற்றாகுறை என்பனவும் மறுக்க முடியாத உண்மைகளாகும்.
யுனிசெப் அமைப்பு தனது ஆய்வறிக்கையில், கனடாவில் குழந்தைகளின் வறுமை மற்றும் போஷாக்கின்மை குறித்து விபரித்து எழுதியிருந்தது.
இதற்கு பதிலளித்த நமது கனேடிய அரசாங்கம் வறுமையை முற்றாக ஒழித்து விட முடியும் என கூறியிருந்தாலும் முக்கியமாக குழந்தைகளின் வறுமை, பட்டினி மற்றும் போஷாக்கின்மையை ஒழிக்க மேற்கொள்ளவிருக்கும் செயற்திட்டங்களை முழுவதுமாக நிறைவேற்றவில்லை என்பது நம் எல்லோராலும் அங்கீகரிக்கப்பட்ட ஒரு மறுக்க முடியாத உண்மையாகும்.
25 வருடங்களுக்கு முன்னர் கனேடிய குழந்தைகளின் வறுமை நிலைமையானது 13 சத வீதமாக மட்டுமே இருந்தது. எனினும் தற்போது அது 23 சத வீதத்தை எட்டியுள்ளது.
கனடாவை ஏனைய உலக நாடுகளுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது 23 சத வீதம் என்ற இந்த நிலைமையானது நமது நாட்டின் மதிப்பு உலக அரங்கில் எப்படி மதிக்கப்படும் என்பதை அவையாரின் கவனத்திற்கு கொண்டு வருகின்றேன்.
யுனிசெப் நிறுவனம், கனேடிய அரசாங்க நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், சர்வதேச நிறுவனங்கள் முன்வந்து தேவையான போதிளவு பொருளுதவிகளை உணவு வங்கி மூலமாக வழங்கி, கனடாவில் வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்ந்து வரும் குழந்தைகளை காபற்ற வேண்டியதன் அவசியத்தை அவையாரின் கவனத்திற்கு கொண்டு வருகின்றேன்.
கனேடிய அரசாங்கம் குழந்தைகளின் வறுமையையும் பட்டினியையும் போஷாக்கின்மையையும் ஒழிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை நான் முன்வைக்கின்றேன்.
கனேடிய அரசாங்கம், குழந்தைகளின் வளர்ச்சிக்காக வீட்டுத்திட்டங்கள், குழந்தை காப்பகங்கள், குழந்தைகளின் ஊட்டச்சத்து திட்டம் ஆகிய மூன்றையும் கவனத்தில் கொண்டு, பொருளாதார உதவிகள் செய்து மேற்கூறிய திட்டங்களை செயற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.
அவ்வாறு செயற்பட்டால், கனடாவில் குழந்தைகளின் வறுமை நிலைமையை படிப்படியாக குறைத்து, பின்னர் அதனை முற்றாக ஒழித்து விடலாம் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என ராதிகா சிற்சபேசன் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBRUKYhp7.html
ரஜரட்டையில் எதிர்க்கட்சி படுதோல்வியடையும்!- வடமத்திய மாகாண முதலமைச்சர்
[ வியாழக்கிழமை, 20 நவம்பர் 2014, 11:24.40 PM GMT ]
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியானவுடன் அநுராதபுர மாநகரில் தனது ஆதரவாளர்களுடன் பட்டாசு கொளுத்தி கொண்டாட்டங்களில் ஈடுபட்ட பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தபோது முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள முதலமைச்சர் ரஞ்சித் சமரக்கோன்,
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் சார்பில் யாரை முன்னிறுத்தினாலும் ரஜரட்டை மக்களின் பெரும்பான்மை வாக்குகள் ஜனாதிபதி மஹிந்தவுக்கே கிடைக்கும்.
ஜனாதிபதியின் வெற்றி சர்வ நிச்சயம். அதனை யாராலும் தடுக்க முடியாது.
எதிர்க்கட்சிகள் தங்களின் தோல்விப் பயத்தை மறைத்துக் கொள்ள ஒவ்வொரு கட்டுக்கதைகளை அவிழ்த்து விடுகின்றார்கள்.
எனினும் பொதுமக்கள் அவற்றுக்கு ஒருபோதும் ஏமாற மாட்டார்கள் என்றும் முதலமைச்சர் ரஞ்சித் சமரக்கோன் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBRUKYhqz.html
ஜனாதிபதியின் வெற்றிக்காக நாளை கண்டியில் பாதயாத்திரை மற்றும் ஆசிர்வாத பூஜை
[ வியாழக்கிழமை, 20 நவம்பர் 2014, 11:15.34 PM GMT ]
கண்டி தபால் நிலையம் அருகில் நாளை மாலை 2.00 மணியளவில் குறித்த பாதயாத்திரை ஆரம்பிக்கப்படவுள்ளது.பின்னர் ஊர்வலமாக தலதா மாளிகையை வந்தடையும் பாதயாத்திரைக் குழுவினர் அங்கு ஆசீர்வாத பூஜையொன்றை மேற்கொள்ளவுள்ளனர்.
இந்நிகழ்வில் அஸ்கிரி மற்றும் மல்வத்து மகாநாயக்கர்களுடன், அரசியல்வாதிகள், பொதுமக்கள் கலந்து கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை பிரதியமைச்சர் சரண குணவர்த்தன மேற்கொண்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBRUKYhqy.html
ஆசியாவின் தலைவர்கள் மாநாடு! இலங்கைக்கு முக்கிய பிரமுகர்கள் வருகை
[ வியாழக்கிழமை, 20 நவம்பர் 2014, 04:32.53 PM GMT ]
சீனாவின் பெய்ஜிங் நகரை முன்னிலைப்படுத்திய பொஆஓ பொருளாதார மாநாட்டின் முதலாவது அமர்வு நாளை கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் நடைபெறவுள்ளது.
சீன அரசாங்கத்தின் பொருளாதார மூலோபாய திட்டமான பட்டுப்பாதை திட்டம் குறித்து இந்த மாநாட்டில் கலந்துரையாடப்படவுள்ளது.
இதில் கலந்து கொள்வதற்கென சீனாவின் முன்னாள் துணைப்பிரதமர் செங்க் பெய்யேன் தலைமையிலான 40 பேர் அடங்கிய குழுவினர் இன்று மாலை விசேட விமானம் மூலம் கொழும்பை வந்தடைந்தனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்தின் பிரமுகர்கள் பகுதியில் இவர்களை ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் மிலிந்த மொரகொட அரசாங்கத்தின் சார்பில் வரவேற்றார்.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இந்த மாநாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளதுடன், ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் மிலிந்த மொரகொட மாநாட்டின் ஏற்பாட்டாளராக கடமையாற்றுகின்றார்.
http://www.tamilwin.com/show-RUmszBRUKYhp6.html
Geen opmerkingen:
Een reactie posten