தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 21 november 2014

சரத் பொன்சேகாவுக்கு குடியுரிமை வழங்க ஜனாதிபதி அதிரடி முடிவு?

அமைச்சரவையில் திடீர் மாற்றங்கள்? பிரதமர் பதவியிலும் மாற்றம்?
[ வெள்ளிக்கிழமை, 21 நவம்பர் 2014, 01:23.21 AM GMT ]
அமைச்சரவையில் தீடீர் மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஆளும் கட்சியில் நிலவி வரும் முரண்பாட்டு நிலைமைகளுக்கு தீர்வு காணும் வகையில் இவ்வாறு அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.
இதுவரையில் முக்கியத்துவம் வாய்ந்த அமைச்சுப் பதவிகள் வழங்கப்படாத ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய உறுப்பினர்களுக்கு வழங்கப்பட உள்ளது.
எதிர்க்கட்சியில் இணைந்து கொள்வதாக அச்சுறுத்தி வரும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பதவிகள் வழங்கப்பட உள்ளன.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் வகித்து வரும் பதவி, சம்பிக்க ரணவக்கவினால் கைவிடப்பட்ட பதவி ஆகியனவற்கு புதியவர்கள் நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமைச்சுப் பதவிகளில் மாற்றங்களையும், புதிய பிரதி அமைச்சர்களையும் எதிர்பார்க்க முடியும் என கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அமைச்சுப் பதவிகளில் மாற்றங்கள் செய்யப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, பிரதமர் பதவியிலும் பெரும்பாலும் மாற்றம் செய்யப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmszBRVKYhq2.html
நாடாளுமன்றில் இன்று அரசாங்கத்துக்கு அதிர்ச்சி வைத்தியம்! முக்கியஸ்தர்கள் கட்சி தாவத் தீர்மானம்?
[ வெள்ளிக்கிழமை, 21 நவம்பர் 2014, 02:00.18 AM GMT ]
ஆளுங்கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் இன்று நாடாளுமன்ற அமர்வின் போது கட்சி தாவி, அரசாங்கத்துக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கத் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்றைய தினம் வசந்த சேனநாயக்க ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டதையடுத்து, இன்று முக்கியமான கட்சி தாவல் நடவடிக்கைக்கு ஆளுங்கட்சியினர் தயாராகி வருகின்றனர்.
இதனை அறிந்து கொண்ட அரசாங்கத் தரப்பு உயர்மட்டத்தினர் , கட்சி தாவும் முடிவில் உள்ள ஆளுங்கட்சி முக்கியஸ்தர்களுடன் நேற்றிரவு பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளனர். முக்கியமான பதவிகள் தருவதாகவும் வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளது.
எனினும் அரசாங்கத்தின் உயர்மட்டத்தினர் மீதான அதிருப்தி காரணமாக இன்றைய தினம் மேற்கொள்ளப்படவுள்ள தமது கட்சி தாவல் தீர்மானத்தில் குறித்த முக்கியஸ்தர்கள் உறுதியாக இருப்பதாக தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து வரவு -செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பின் மீதான நாடாளுமன்ற அமர்வில் குழப்பங்களை ஏற்படுத்தி, நாடாளுமன்றக் கூட்டத்தொடரை ஒத்திவைக்கும் முடிவை அரசாங்கம் தற்போது பரிசீலித்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆளும் கட்சியின் மேலும் பலர் எதிர்க்கட்சிக்கு வரவுள்ளனர்
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர், ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்ளும் வகையிலான பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவின் வீட்டில் சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளனர் .
இந்தநிலையில் ஊடகங்களுக்கு அறிக்கை ஒன்றை விடுத்த பின்னர் குறித்த உறுப்பினர்கள் கட்சிமாறலை மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனைதவிர ஆளும்கட்சியின் அமைப்பாளர்கள் மற்றும் முக்கிய உள்ளுர் உறுப்பினர்களும் கட்சி மாறலுக்கு தயாராவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள், அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவுக்கு தமது ஆதரவை வெளியிட்டுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmszBRVKYhq5.html
பொதுவேட்பாளராக மைத்திரிபால சிறிசேன இன்று அறிவிக்கப்படுவார்? - மைத்திரிபால கட்சி தாவ மாட்டார்! கெஹலிய நம்பிக்கை
[ வெள்ளிக்கிழமை, 21 நவம்பர் 2014, 02:05.06 AM GMT ]
அரசாங்க, எதிர்க்கட்சி தரப்புக்களின் தகவல்களின்படி அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவே எதிர்க்கட்சிகளின் ஜனாதிபதி பொதுவேட்பாளராக தெரிவுசெய்யப்படவுள்ளார் என்று இலங்கையின் செய்தித்தாள் ஒன்று கூறுகிறது.
இதற்கான முடிவு இன்று வெளியிடப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதேவேளை ஐக்கிய தேசியக்கட்சியின் செயற்குழு இன்று மாலை கூடி இந்த விடயத்தில் முக்கிய முடிவை அறிவிக்கவுள்ளது.
இந்தநிலையில் மைத்திரிபால சிறிசேன, எதிர்க்கட்சிக்கு மாறுவார் என்ற தகவல் பெரும்பாலும் உறுதியாகியுள்ளதாக எதிர்க்கட்சியினர் குறிப்பிடுகின்றனர்.
அவருக்கு ஆதரவாக ஆளும் கட்சியில் உள்ள சுமார் 15 நாடாளுமன்ற உறுப்பினர்களும் எதிர்க்கட்சியில் இணைந்து கொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக இறுதி நேரத்தில் பிரதமர் பதவி வழங்கப்பட்ட போதும் அதனை மைத்திரிபால ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை இலங்கையின் செய்தித்தாள்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
பொதுவேட்பாளராக மைத்திரிபால சிறிசேன இன்று அறிவிக்கப்படுவார்?
எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக அமைச்சர் மைத்திரிபால சிறிசேன அறிவிக்கப்படுவது உறுதியாகியுள்ளது.
நேற்று நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போது இந்த முடிவுக்கு அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஆதரவளித்துள்ளனர்.
மேலும் பொது வேட்பாளராக களமிறங்குவது குறித்து அமைச்சர் மைத்திரிபாலவும் உத்தரவாதமொன்றை நேற்று வழங்கியுள்ளார்.
இதனையடுத்து இன்று மாலை நடைபெறும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவரது பெயரை அறிவிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த தகவல் கிடைத்தவுடன் நேற்று நள்ளிரவு தொடக்கம் அலரி மாளிகை வட்டாரங்கள் கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே நேற்றிரவு அலரிமாளிகையிலிருந்து சில விசேட குழுக்கள் பொலன்னறுவைக்குப் புறப்பட்டுள்ளதாகவும், அமைச்சர் மைத்திரிபாலவுக்கு எதிராக கருத்துக்களை வெளியிடுவதற்கென சிலரை அழைத்து வருவது அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பணி என்றும் தெரிய வருகின்றது.
அமைச்சர் மைத்திரிபால சிறிசேன பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களில் அவருக்கு எதிரான கருத்துக்களை வெளியிட வைப்பதற்கு ஆளும் தரப்பு முடிவெடுத்துள்ளது.
மைத்திரிபால கட்சி தாவ மாட்டார்! கெஹலியவின் கடைசி நேர நம்பிக்கை
அமைச்சர் மைத்திரிபால சிறிசேன ஆளுங்கட்சியை விட்டு விலக மாட்டார் என்று அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கடைசி நேர நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
அமைச்சர் மைத்திரிபால சிறிசேன இன்று எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக அறிவிக்கப்பட இருப்பது தொடர்பில் அரசாங்கத்தின் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்லவை ஊடகங்கள் தற்போது தொடர்பு கொண்டு வருகின்றன.
இதன்போது எம்மிடம் கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் ரம்புக்வெல்ல, அமைச்சர் மைத்திரிபால சிறிசேன கட்சிதாவப் போவதாக வெளிவரும் செய்திகளை கடைசி வரை நம்ப முடியாது. ஏனெனில் அவர் ஆளுங்கட்சியின் பிரதான கட்சியான சுதந்திரக் கட்சி பொதுச் செயலாளர் பதவியை வகிக்கின்றார்.
மேலும் ஆளுங்கட்சியில் உள்ள அமைச்சர்களில் பிரதமருக்கு அடுத்தபடியாக சீனியாரிட்டி கொடுக்கப்படும் அமைச்சராகவும் மைத்திரிபால சிறிசேனவே காணப்படுகின்றார்.
இவ்வாறான நிலையில் அவர் எதிர்க்கட்சிக்குத் தாவி பொது வேட்பாளராக களமிறங்குவார் என்று எதிர்பார்க்கவே முடியாது. ஏனெனில் வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்தவின் செல்வாக்கை யாரும் அசைக்க முடியாது.
எனவே அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவின் கட்சி தாவல் குறித்து கடைசி வரை எதனையும் கூறமுடியாதுள்தாகவும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே ஆளுங்கட்சியின் சார்பில் இன்று மாலைக்குள் முக்கியமான ஊடகவியலாளர் சந்திப்பொன்றுக்கு ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மேலும் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBRVKYhq6.html
சரத் பொன்சேகாவுக்கு குடியுரிமை வழங்க ஜனாதிபதி அதிரடி முடிவு?
[ வெள்ளிக்கிழமை, 21 நவம்பர் 2014, 02:10.02 AM GMT ]
ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகாவுக்கு குடியுரிமை வழங்கும் அதிரடி முடிவொன்றை ஜனாதிபதி இன்று அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. 
நேற்றிரவு இது தொடர்பான நீண்டதொரு கலந்துரையாடல் அலரி மாளிகையில் நடைபெற்றுள்ளது.
இதன்போது சரத் பொன்சேகாவுக்கு வாக்களிக்கும் உரிமையுடன் குடியுரிமை மீண்டும் வழங்கப்படும் பட்சத்தில் எதிர்க்கட்சிகளை பிளவுபடுத்த ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும் என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
பதவி மோகம் கொண்ட சரத் பொன்சேகா மீண்டும் வாக்குரிமை பெற்றுக்கொள்ளும் பட்சத்தில் , ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளராக களமிறங்கும் முயற்சியில் ஈடுபடுவார் என்பது ஜனாதிபதி தரப்பு கணிப்பாகும்.
இதன் மூலம் எதிர்க்கட்சிகளின் பொதுக் கூட்டணி கனவை கலைத்துப் போடுவதுடன், வாக்குகளை சிதற வைக்கலாம் என்று அரசாங்கம் எதிர்பார்க்கின்றது.
எனினும் இந்த முடிவு குறித்து கோட்டாபய ராஜபக்ஷ கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளார். எதிர்க்கட்சிகளை பிளவுபடுத்தும் நோக்கத்தில் கூட சரத் பொன்சேகாவுக்கு எந்தவித நன்மை பயக்கும் தீர்மானங்களும் மேற்கொள்ளப்படக் கூடாது என்று அவர் கடுமையான தொனியில் வலியுறுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
http://www.tamilwin.com/show-RUmszBRVKYhq7.html

Geen opmerkingen:

Een reactie posten