[ சனிக்கிழமை, 08 நவம்பர் 2014, 04:52.36 AM GMT ]
அத்துடன், ரணில் விக்ரமசிங்க தலைமையிலான புதிய ஆட்சியில் இந்தியாவுடன் துறைமுகங்கள் தொடர்பாக புதிய உடன்படிக்கைகள் செய்து கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வரவு - செலவுத் திட்டம் மீதான நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள், கப்பற்துறை அபிவிருத்தி மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சுக்கள் தொடர்பான குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போதே ரவி கருணாநாயக எம்.பி. இவ்வாறு தெரிவித்தார்.
சபையில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
இலங்கையின் துறைமுகங்கள் அனைத்தையும் அரசு சீனாவுக்கு வழங்கி விட்டது.
கொழும்பு துறைமுகம் சவுத்போர்ட் திட்டத்தின் கீழ் சீனாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இன்று இத்துறைமுகத்திற்கு சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் வந்து போகிறது.
இதனால் இந்தியா எமது நாட்டை சந்தேகமாக நோக்குவதற்கான நிலை ஏற்பட்டுள்ளது.
அன்று ரணிலின் ஆட்சியில் இந்தியாவுடன் நெருங்கி இங்கு துறைமுகங்களை அபிவிருத்தி செய்வோம்.
இரு நாட்டு துறைமுகங்களூடாக வர்த்தக நடவடிக்கைகள் இடம்பெற்றன.
ஆனால், இன்று இலங்கை சீனாவின் தலைநகரமாக மாறி வருகின்றது. கொழும்பு துறைமுகம் உட்பட நாட்டின் துறைமுகங்கள் அனைத்தும் சீனாவுக்கு தாரைவார்க்கப்பட்டுள்ளது.
வெகுவிரைவில் ரணில் தலைமையில் ஆட்சி மலரும். அதன்போது இந்தியாவுடன் துறைமுகங்கள் தொடர்பாக உடன்படிக்கைகளை செய்து கொண்டு நட்புறவை பேணுவோம் என்றார்.
http://www.tamilwin.com/show-RUmszBTcKXft6.html
யாழில் குளிரூட்டப்பட்ட தயாரிப்புக்களுக்கு தீடீர் தடை: 15 ஆயிரம் வியாபாரிகள் பாதிப்பு
[ சனிக்கிழமை, 08 நவம்பர் 2014, 04:56.53 AM GMT ]
15 ஆயிரத்திற்கும் அதிகமான வியாபாரிகள் இந்த நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட உப உணவு மற்றும் குளிரூட்டப்பட்ட பொருட்கள் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் மு.உதயசிறி யாழ். ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
தங்களின் பிரச்சினை தொடர்பில் பூரணமாக எடுத்துக்கூறிய போதிலும், வட மாகாண சுகாதார அமைச்சு உடன் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmszBTcKXft7.html
முன்னாள் புலிப் போராளி ரி.ஐ.டியினரால் கைது
[ சனிக்கிழமை, 08 நவம்பர் 2014, 05:13.24 AM GMT ]
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளியாகவிருந்த இவர், புனர்வாழ்வு பெற்றிருக்கவில்லையென காரணம் கூறப்பட்டே கைது செய்யப்பட்டார்.
நேற்று நண்பகலளவில் இவரது வீட்டிற்கு சென்றிருந்த ரி.ஐ.டியினர் இவரைக் கைதுசெய்து வவுனியாவிலுள்ள ரி.ஐ.டியினர் முகாமிற்கு கொண்டு சென்றுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.
நேற்று நண்பகலளவில் இவரது வீட்டிற்கு சென்றிருந்த ரி.ஐ.டியினர் இவரைக் கைதுசெய்து வவுனியாவிலுள்ள ரி.ஐ.டியினர் முகாமிற்கு கொண்டு சென்றுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmszBTcKXfuy.html
Geen opmerkingen:
Een reactie posten