[ சனிக்கிழமை, 08 நவம்பர் 2014, 03:19.24 AM GMT ]
கடந்த இரண்டு வருடங்களாக ஐக்கிய அரபு இராச்சியத்தில் காத்திருந்த இலங்கை அகதிகளில் கடைசி தொகுதியினர், பிரேசிலுக்கு செல்கின்றனர்.
பிரேசிலில் புதிய வாழ்க்கை ஒன்றை ஏற்படுத்திக்கொள்வதற்காக எதிர்வரும் திங்கட்கிழமை அங்கு செல்லவுள்ளதாக, ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான சபை உறுதி செய்துள்ளது.
4 ஆண்கள், இரண்டு பெண்கள் மற்றும் ஒரு குழந்தை அடங்கலாக ஏழு பேர் பிரேசில் செல்லவுள்ளனர்.
இவர்களுக்கு ஐக்கிய நாடுகள் சபை நிரந்தர வீடு ஒன்றை வழங்கியுள்ளது.
சுமார் 45 இலங்கை அகதிகள் அடங்கிய படகு ஒன்று அவுஸ்திரேலியாவை நோக்கி புறப்பட்டு துபாய் நோக்கி சென்றுக்கொண்டிருக்கையில் சிங்கப்பூர் கப்பல் ஒன்றினால் காப்பாற்றப்பட்டனர்.
பின்னர் அவர்கள், ஜெபால் அலி விமானத்தளத்தில் தங்க வைக்கப்பட்டு ஐக்கிய நாடுகளின் அகதி அந்தஸ்தும் கிடைக்கப்பெற்றது.
இந்தநிலையில் கடந்த இரண்டு வருடங்களாக அவர்கள் அமெரிக்கா, பின்லாந்து போன்ற நாடுகளில் குடியேற்றப்பட்டனர்.
இந்தநிலையிலேயே கடைசியாக எஞ்சியிருந்த 7 இலங்கையர்களும் எதிர்வரும் திங்கட்கிழமை பிரேசிலுக்கு செல்லவுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmszBTcKXft2.html
இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் இலங்கையின் சொத்துக்கள்: சந்திரஹாசன்
[ சனிக்கிழமை, 08 நவம்பர் 2014, 03:08.52 AM GMT ]
அவர்கள் இலங்கைக்கான சொத்துக்கள் என்று இலங்கை அகதிகள் புனர்வாழ்வு அமைப்பு தெரிவித்துள்ளது.
அகதிகளின் அமைப்பின் தலைவர் எஸ் சி சந்திரஹாசன் இந்தக்கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த அவர் இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளில் 3500 பட்டதாரிகள் இருப்பதாக குறிப்பிட்டார்.
அவர்கள் இலங்கையை பொறுத்தவரை சொத்துக்கள் என்றும் அவர் கூறினார்.
இந்தநிலையில் அகதிகள் யாவரும் நாடு திரும்புவதற்கு தமது அமைப்பு உதவும் என்றும் சந்திரஹாசன் குறிப்பிட்டார்.
இதன்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஆற்றிய உரை ஒன்றில் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் நாடு திரும்பவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தமையை அவர் சுட்டிக்காட்டினார்.
இந்தியாவில் தற்போது சுமார் ஒரு லட்சம் அகதிகள் முகாம்களிலும் வெளியிடங்களிலும் தங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது
http://www.tamilwin.com/show-RUmszBTcKXft1.html
Geen opmerkingen:
Een reactie posten