தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 22 november 2014

கிளிநொச்சி புளியம்பொக்கணை வீதியின் விதி!

ரணிலை பிரதமராக நியமிக்கும் புரிந்துணர்வு உடன்படிக்கை அடுத்த வாரம்
[ சனிக்கிழமை, 22 நவம்பர் 2014, 11:06.52 AM GMT ]
ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிடும் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்றால் அவரது அரசாங்கத்தின் பிரதமராக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை நியமிக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் இடையில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணக்கத்திற்கு அமைவான புரிந்துணர்வு உடன்படிக்கை அடுத்த வாரம் கையெழுத்திடப்பட உள்ளது.
அரசியல் கட்சிகள் மற்றும் பொது அமைப்புகள் உள்ளிட்ட 32 தரப்பினர் இந்த இணக்கப்பாட்டு உடன்படிக்கையில் கையெழுத்திட உள்ளனர்.
சகல தரப்பினரும் ஏற்றுக்கொள்ள கூடிய தேசிய கொள்கை ஒன்றின் மூலமாக நாட்டை வழிநடத்தி செல்வது இந்த இணக்கப்பாட்டு வேலைத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.
இதனடிப்படையில், நாடாளுமன்றத்திற்கு அதிகாரங்களை வழங்குதல், ஜனாதிபதியாக பதவியேற்று 100 தினங்களுக்குள் நிறைவேற்று அதிகாரத்தை ஒழித்தல், தேர்தல் முறையில் மாற்றம் செய்தல், 18வது அரசியல் அமைப்பு திருத்த சட்டத்தை இரத்து செய்து, 17வது திருத்த சட்டத்தை மீண்டும்அமுல்படுத்தல், ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்துதல் உட்பட பல யோசனைகளை செயற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszBRWKYgr0.html
அமைச்சர் மேர்வின் கட்சி தாவுகிறார்?: தற்போது பேச்சுவார்த்தையில்
[ சனிக்கிழமை, 22 நவம்பர் 2014, 11:33.06 AM GMT ]
அமைச்சர் மேர்வின் சில்வா ஆளுங்கட்சியிலிருந்து வெளியேறுவதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தெரியவந்துள்ளது.
தற்போதைக்கு தனது கட்சி தாவல் குறித்து அவர் எதிர்க்கட்சியின் முக்கிய பிரமுகர் ஒருவருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.
அண்மைக்காலமாக அமைச்சர் மேர்வின் சில்வா மற்றும் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ ஆகியோருக்கிடையில் ஏற்பட்டிருந்த முறுகல் நிலையே இந்த கட்சி தாவல் முயற்சிக்கான காரணம் என்று தெரிய வந்துள்ளது.
பெரும்பாலும் அமைச்சர் மேர்வின் சில்வா, பிரதியமைச்சர் திகாம்பரம் உள்ளிட்டவர்கள் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தலைமையில் இன்று செய்தியாளர் சந்திப்பொன்றை நடத்தவுள்ளதாகவும் குறித்த தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
http://www.tamilwin.com/show-RUmszBRWKYgr2.html
கிளிநொச்சி புளியம்பொக்கணை வீதியின் விதி
[ சனிக்கிழமை, 22 நவம்பர் 2014, 11:54.39 AM GMT ]
கிளிநொச்சி வட்டக்கச்சி சந்தைக்கு அருகாக புளியம்பொக்கணைக்கு செல்லும் பெரியகுளம் வீதி நெடுகலும் தற்போது பாரிய குண்டும் குழிகளும் ஏற்பட்டுள்ளன.
மக்களின் பிரதானமான சுமார் 8 கிலோ மீற்றர் வரையான இந்தப்பாதைக்கு வடக்கு அபிவிருத்தி பேசுகின்ற அரசும் அரசுசார்ந்தவர்களும் தேர்தல் காலத்தில் தடவிய பகட்டுத்தார் கரைந்து அதன் கேவலங்கள் வெளிப்பட்டு நிற்கின்றன.
வீதியெங்கும் சிதைவு ஏற்பட்டு குண்டு குழிகளில் நீர் நிரம்பி சல்லிக்கற்கள் சிதறிக்கிடக்க பயணிப்போர் படும்பாடோ பெரும்பாடு.
உறுதியற்று தரமற்ற இந்த வீதிகளை செப்பினிட்டது யார்?எவ்வளவு நிதி இந்த வீதி ஒப்பந்தம் மூலம் சுருட்டப்பட்டது?இதுதான் இந்த வீதியால் விழுந்தெழும்பி பயணிப்போரின் வினா?
http://www.tamilwin.com/show-RUmszBRWKYgr3.html

Geen opmerkingen:

Een reactie posten