திருச்சி மத்திய சிறை முகாமில் இருந்து, இலங்கை தமிழர் சென்னை புழல் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. திருச்சி மத்திய சிறையில் உள்ள சிறப்பு முகாமில், பல்வேறு குற்ற வழக்குகள் அடிப்படையில் இலங்கை உட்பட வெளிநாடுகளை சேர்ந்த, 32 பேர் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள், தங்களை விடுவிக்க கோரி, கடந்த 15ம் திகதி உண்ணாவிரதம் இருந்தனர். அப்போது, தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றவர்களை, பொலிஸார் அழைத்து சென்று, திருச்சி அரச வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
இந்நிலையில், உண்ணாவிரதம் இருந்தவர்களை தற்கொலைக்கு தூண்டியதாகவும், அரசு அலுவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும், இலங்கையை சேர்ந்த ஈழநேரு, மலேசியாவை சேர்ந்த கருணைராஜ் ஆகிய இருவர் மீது, கே.கே., நகர் பொலிஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதில், ஈழநேருவை நேற்று அதிகாலை, சென்னை புழல் சிறையில் அடைப்பதற்காக பொலிஸார் அழைத்து சென்றனர். கருணைராஜூக்கு, திருச்சி அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.







http://www.jvpnews.com/srilanka/87660.html
Geen opmerkingen:
Een reactie posten