தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 22 november 2014

இலங்கை மீனவர்களுக்கும் பொதுமன்னிப்பு வேண்டும்: ஜனாதிபதியின் சர்வதேச ஆலோசகர்

ஆளும் கட்சியின் சரிவுக்கு அமைய ஜே.வி.பியின் தீர்மானம் அமையும்: ரில்வின் சில்வா
[ சனிக்கிழமை, 22 நவம்பர் 2014, 12:21.46 PM GMT ]
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சரிவு தற்போது ஆரம்பமாகியுள்ளதால் அடுத்த சில தினங்களில் ஏற்படும் அரசியல் மாற்றங்களுக்கு அமைய ஜே.வி.பி. எடுக்கும் தீர்மானங்களிலும் மாற்றம் ஏற்படும் என அதன் பிரதான செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
நடக்க போகும் ஜனாதிபதித் தேர்தல் சட்டவிரோதமானது என்பது மட்டுமல்ல அரசியலமைப்புக்கு முரணானது என்பதால் அதனை நிறுத்துமாறு கோரி ஜே.வி.பி முன்னெடுக்கும் போராட்டத்தை தொடர்வதென தீர்மானிக்கப்பட்டுள்ளது எனவும் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
அதேவேளை ஜனாதிபதித் தேர்தல் சட்டவிரோதமானது என்பதை மக்களுக்கு தெளிவுப்படுத்தி வரும் அதேநேரம் கொழும்பில் ஜனாதிபதித் தேர்தலுக்கு எதிராக எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களையும் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது என ஜே.வி.பியின் மேல் மாகாண உறுப்பினர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBRWKYgr5.html
இந்தியாவுக்கு தங்கம் கடத்த முயற்சித்த ஒருவர் கைது
[ சனிக்கிழமை, 22 நவம்பர் 2014, 12:46.05 PM GMT ]
இந்தியாவுக்கு தங்கத்தை கடத்திச் செல்ல முயற்சித்த ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
400 கிராம் தங்கத்தை இவர் உடலில் மறைத்து எடுத்துச் செல்ல முயற்சித்துள்ளதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது. தங்கத்தை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதுடன் அதன் பெறுமதி 20 லட்சம் ரூபாவுக்கும் மேல் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலி கிங்தொட்ட பிரதேசத்தை சேர்ந்த 30 வயதான நபரே இந்தியாவுக்கு தங்கத்தை கடத்திச் செல்ல முயற்சித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBRWKYgr7.html
இலங்கை மீனவர்களுக்கும் பொதுமன்னிப்பு வேண்டும்: ஜனாதிபதியின் சர்வதேச ஆலோசகர்
[ சனிக்கிழமை, 22 நவம்பர் 2014, 12:49.58 PM GMT ]
போதைப்பொருள் குற்றச்சாட்டின்பேரில் இலங்கையில் மரண தண்டனை பெற்றுள்ள யாழ்ப்பாணத்தை சேர்ந்த மூன்று பேரும் விடுதலை செய்யப்படவேண்டும் என்று போரினால் காணாமல் போனோர் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் அமைக்கப்பட்ட சர்வதேச ஆலோசனைக்குழுவின் இந்திய உறுப்பினர் கோரியுள்ளார்
இந்திய மீனவர்களை மாத்திரம் விடுவித்து இலங்கையர்களை விடுவிக்காமல் விடும் தெரிவுசெய்யப்பட்ட விடுதலைத் தன்மை இந்த விடயத்தில் கூடாது என்று அவிடாஸ் கௌசால் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குறித்த 3 மீனவர்களையும் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யவேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்
இதுவரைக்கும் குறித்த இலங்கையர்கள் மாத்திரம் பொதுமன்னிப்பில் விடுவிக்கப்படாமையானது துரதிஸ்டவசமானது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இது ஒரு புறக்கணிப்பு என்றும் அவர் தெரிவித்துள்ளார்
http://www.tamilwin.com/show-RUmszBRWKYgsy.html

Geen opmerkingen:

Een reactie posten