[ ஞாயிற்றுக்கிழமை, 23 நவம்பர் 2014, 11:12.31 PM GMT ]
இதன் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக அவர் நள்ளிரவு தாண்டிய நேரத்திலும் தூக்கமின்மையால் அவதியுற்று வருவதாக அலரிமாளிகைத் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே இன்று நள்ளிரவு தாண்டிய நேரம் வரை ஜனாதிபதி தனது வாசஸ்தலமான ஜனாதிபதி மாளிகைக்குச் செல்லாமல் அலரிமாளிகை அலுவலகத்தில் தங்கியுள்ளார்.
அத்துடன் எதிர்க்கட்சிகளின் முக்கியஸ்தர்களான ஜோன் அமரதுங்க, சஜித் பிரேமதாச, சந்திராணி பண்டார, ரவி கருணாநாயக்க, புத்திக பதிரண, திஸ்ஸ அத்தநாயக்க ஆகியோருடன் மாறிமாறி ஜனாதிபதி தொலைபேசித் தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளார்.
இந்தத் தொலைபேசி அழைப்புகளின் பின்னர் ஜனாதிபதியின் முகத்தில் சற்று நிம்மதியான உணர்வு தோன்றியுள்ளதாகவும், அமைச்சர் பசில் ராஜபக்சவுடன் ஏதோ இரகசியமாகப் பேசிக் கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் நாளைக்குள் அமைச்சரவைப் பாதுகாப்புப் பிரிவினரில் இருந்து புதிதாக பதினைந்து பேர் மற்றும் மூன்று வாகனங்களை அலரிமாளிகைக்கு அனுப்பி வைக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக ஜனாதிபதி ஊவா மாகாண எதிர்க்கட்சித் தலைவர் ஹரின் பெர்னாண்டோவுக்கும் வலை வீசியுள்ளார். அமைச்சர் பதவி ஆசையைக் காட்டி ஹிருணிக்காவை சமாதானப்படுத்தியுள்ள அவர் மூலமே ஹரினுக்காக வலை வீசியுள்ளார். இது குறித்தும் இன்று ஹிருணிக்காவுடன் ஜனாதிபதி தொலைபேசி அழைப்பில் உரையாடியுள்ளார்.
ஹரின் அவ்வாறு கட்சி தாவ சம்மதிக்கும் பட்சத்தில் சஷீந்திரவை விலக்கி ஹரினுக்கு முதலமைச்சர் பதவி வழங்கவும் ஜனாதிபதி சம்மதம் தெரிவித்துள்ளார். அதன் பின்னர் சஷீந்திரவை நாடாளுமன்றத்துக்கு அழைத்து வருவது ஜனாதிபதியின் திட்டமாக உள்ளது.
நாளைய நாடாளுமன்ற அமர்வின் போது ஜனாதிபதியின் நேரடி முயற்சி காரணமாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆளுங்கட்சிக்குத் தாவும் நிகழ்வின் போது நாடு முழுவதும் பட்டாசு வெடித்துக் கொண்டாட்டங்களில் ஈடுபடவும் நாமல் ராஜபக்சவின் நில்பலகாய உறுப்பினர்கள் இரவோடு இரவாகத் தயார்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
இவ்வாறான அலுவல்களின் மத்தியில் ஞாயிறு நள்ளிரவு தாண்டிய நிலையிலும் அலரிமாளிகையில் கொண்டாட்டக்களை உருவாகியிருப்பதாக நம்பகமான தகவல் வட்டாரங்களிலிருந்து தெரிய வந்துள்ளது.
பாதுகாப்பு குறித்து பதற்றமடைய தேவையில்லை! மக்கள் பாதுகாப்பர்!- மைத்திரிபால
[ ஞாயிற்றுக்கிழமை, 23 நவம்பர் 2014, 11:55.15 PM GMT ]
நான், மக்களுடன் இருக்கின்றேன். யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்கள் என்னை பாதுகாப்பர் என்றும் அவர் தெரிவித்தார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை கோட்டை நாகவிகாரைக்கு சென்ற பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன குழுவினர், விகாராதிபதி மாதுலுவாவே சோபித தேரரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இதேவேளை, இன்று திங்கட்கிழமை அவர் கண்டிக்கு விஜயம் செய்யவிருக்கின்றார்.
அங்கு, ஸ்ரீ தலதா மாளிகையில் விசேட வழிபாடுகளை முடித்துக்கொண்டு அவர், அஸ்கிரிய மற்றும் மல்வத்து மகாநாயக்கர்களையும் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுக்கொள்ளவுள்ளார்.
இதேவேளை, மைத்திரியின் முகப்புத்தகம் (Face Book) கணக்கு கடந்த இரண்டு நாட்களுக்குள் 53 ஆயிரம் விருப்பங்களை கடந்தது.
அத்துடன் @MaithriNextPres என்ற பெயரில், அவர், டுவிட்டர் கணக்கொன்றையும் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBRXKYfp3.html
வரவுசெலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்டால் நாடாளுமன்றம் இயல்பாகவே கலையும்!
[ திங்கட்கிழமை, 24 நவம்பர் 2014, 12:55.44 AM GMT ]
இன்றைய வாக்கெடுப்பு மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது.
இதன்போது இரண்டு தரப்பிலும் கட்சிமாறல் சம்பவங்கள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிலவேளைகளில் வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்படுமானால் நாடாளுமன்றம் இயல்பாகவே கலைந்துவிடும் நிலை உள்ளது.
இதனையடுத்து ஜனாதிபதி தமக்கிருக்கும் அதிகாரத்தை கொண்டு நாடாளுமன்ற தேர்தலை நடத்துமாறு தேர்தல்கள் ஆணையாளருக்கு உத்தரவிடலாம்.
அண்மையில் அரசாங்கத்தில் இருந்து வெளியேறிய அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவுடன் நடத்திய செய்தியாளர் சந்திப்பின் போது முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க, வரவு செலவுத் திட்ட கடைசி நாளில் பலர் தம்பக்கம் வருவர் என்று தெரிவித்திருந்தார்.
1960ம் ஆண்டில் அப்போதைய பிரதமர் டட்லி சேனாநாயக்க, பதவி விலகி நாடாளுமன்றத்தை கலைத்தமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
இதேவேளை இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போது அரசாங்கக் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் இறுதிவரை சபையில் இருக்கவேண்டும் என்று அரசாங்கக்கட்சி பிரதம அமைப்பாளர் அறிவுறுத்தியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBRYKYfqy.html
Geen opmerkingen:
Een reactie posten