[ திங்கட்கிழமை, 24 நவம்பர் 2014, 12:38.22 AM GMT ]
நாட்டில் சர்வாதிகார குடும்ப ஆட்சி முறை ஒன்றே முன்னெடுக்கப்படுகின்றது.
தனிப்பட்ட கருத்துக்களின் அடிப்படையிலேயே ஆட்சி நடத்தப்படுகின்றது. இது மிகவும் ஆபத்தான நிலைமையாகும்.
இந்த ஆட்சி முறைக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படாவிட்டால், நாடு ஆபத்துக்களை எதிர்நோக்குவதனை தடுக்க முடியாது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு எது தேவையோ அந்த விளக்கத்தை உச்ச நீதிமன்றிடமிருந்து பெற்றுக்கொண்டுள்ளார்.
சட்ட விளக்கம் பெற்றுக்கொள்ள நீதிமன்றில் விசாரணை நடத்தப்படவில்லை.
வாய்மொழி மூல அல்லது எழுத்து மூல வாதப் பிரதிவாதங்களை முன்வைக்க சந்தர்ப்பம் அளிக்கப்படவில்லை.
மிகவும் இரகசியமான முறையில் இந்த சட்ட விளக்கம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
தமக்கு எதிராக சமூகத்தில் எழும் குற்றச்சாட்டுக்களை அடக்குவதற்கு ஜனாதிபதி உச்ச நீதிமன்றினைப் பயன்படுத்திக்கொண்டார்.
ஜனாதிபதி மஹிந்த மூன்றாம் தவணைக்கு போட்டியிட முடியாது என சட்டத்தரணிகள், புத்திஜீவிகள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் அரசியல்வாதிகள் சுட்டிக்காட்டியிருந்தனர்.
அரசாங்க ஊடகங்கள் சட்ட விளக்கத்தை ஒர் நீதிமன்ற தீர்ப்பாகவே சித்தரிக்கின்றன.
உண்மையில் இது நீதிமன்றின் தீர்ப்பாக கருதப்பட முடியாது, இது உச்ச நீதிமன்றின் ஓர் நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் விளக்கம் மட்டுமேயாகும்.
எதிர்காலத்தில் இந்த விடயம் தொடர்பில் நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்பட முடியும் என ரில்வின் சில்வா சிங்கள பத்திரிகையொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBRYKYfp7.html
சொல்ஹெய்ம் புலிகளுக்கு நிதி உதவி வழங்கியமைக்கான ஆதாரங்கள் உண்டு!- ஜனாதிபதி
[ திங்கட்கிழமை, 24 நவம்பர் 2014, 12:13.27 AM GMT ]
மாத்தளை சந்தியில் நேற்று முன்தினம் நடைபெற்ற வீதி அபிவிருத்தித்திட்ட அங்குரார்ப்பண வைபவத்தில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பணம் வழங்கவில்லை என சொல்ஹெய்ம் மறுத்துள்ள போதிலும் பணம் வழங்கியமைக்கான ஆதாரங்கள் உள்ளன.
இது தொடர்பிலான புகைப்பட ஆதாரங்களையும் தேவையென்றால் சமர்ப்பிக்க முடியும்.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சொல்ஹெய்ம் பணம் வழங்கியமை உண்மையானது எனவும், தேவை ஏற்பட்டால் ஆதாரங்களை சமர்ப்பிக்க முடியும். எனினும், அந்த ஆதாரங்களை நான் சமர்ப்பிக்கப் போவதில்லை.
போர் இடம்பெற்ற காலத்தில் புலிகளுக்கு ஆயுதங்களையும், பணத்தையும் வழங்கி நாட்டை பிளவடையச் செய்ய பலர் முயற்சித்தனர்.
அவ்வாறான முயற்சிகள் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டன என அவர் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBRYKYfp5.html
Geen opmerkingen:
Een reactie posten