தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 4 november 2014

இத்தாலியில் சைக்கிள் கொள்ளை! இலங்கைச் சிறுவன் கைது

ஜனாதிபதி தனக்காகவே வரவு செலவுத்திட்டத்தை தயாரித்துள்ளார்!- கயந்த கருணாதிலக்க
[ செவ்வாய்க்கிழமை, 04 நவம்பர் 2014, 04:14.17 PM GMT ]
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனக்காகவே 2015ம் ஆண்டின் வரவு செலவுத்திட்டத்தை தயாரித்துக் கொண்டுள்ளதாக கயந்த கருணாதிலக்க குற்றம் சாட்டியுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் வைத்து ஐ.தே.க. வின் நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக இந்தக் குற்றச்சாட்டை முன்வைததுள்ளார்.
இந்த ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் 13909 கோடி ரூபாய் மருத்துவ வசதிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
இதனை இரண்டுகோடி இலங்கையருக்கு பங்கிட்டால் ஒருவருக்கு 5850 என்ற அளவில் வருகின்றது. இது ஜனாதிபதியின் இருபது செக்கனுக்கான செலவாகும்.
மண்சரிவு, வெள்ளப்பெருக்கு போன்ற தேசிய அனர்த்தங்களுக்காக வெறும் 314 கோடி ரூபா மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆனால் இதனை பங்கிட விமானம் மூலமாக சென்றுவர ஜனாதிபதிக்கு இந்தத் தொகை போன்று நூறு மடங்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இதுபோன்று வரவு செலவுத்திட்டத்தின் அனைதது அம்சங்களும் வெறும் இலக்க விளையாட்டுகள் தவிர பொதுமக்களுக்கு எதுவும் பயன்தரக்கூடியதாக இல்லை என்றும் கயந்த கருணாதிலக மேலும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBTYKXhu3.html

உயிரிழந்த மலையக உறவுகளுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவையில் மரியாதை வணக்கம் செலுத்தப்பட்டது!
[ செவ்வாய்க்கிழமை, 04 நவம்பர் 2014, 04:28.35 PM GMT ]
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாதாந்த அரசவைக் கூட்டத்தில், நிலச்சரிவில் உயிரிழந்த மலையக தமிழ் உறவுகளுக்கு, மரியாதை வணக்கம் செலுத்தப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப பரிவர்த்தனையூடாக இடம்பெறும் இவ்மாதாந்த அரசவைக் கூட்டத்தில், அவைத்தலைவர் தவேந்திரராஜா அவர்கள், மரியாதை வணகத்தினை அவையில் முன்வைத்திருந்தார்.
மரியாதை வணக்கத்தில் தெரிவிக்கப்பட்டதாவது,
பெரும் இயற்கை அனர்த்த்தினால் இலங்கைத்தீவின் பதுளை மாவட்டத்தின் கொஸ்லாந்தை பகுதியில் அமைந்துள்ள மீரியபத்த தோட்டக் கிராமத்தில் இடம் பெற்ற பாரிய நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த எமது சகோதர உறவுகளுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை தனது இரங்கலையும் மரியாதை வணக்கத்தினையும் செலுத்துகின்றது.
பாதிக்கப்பட்ட அனைத்துக் குடும்பங்களது கரங்களையும் இந்த அரசவை இறுகப்பற்றிக் கொள்கின்றது.
நெருக்கடிமிகுந்த சமூக அரசியல் சூழலுக்கு முகம் கொடுத்து நீண்டகாலமாக வாழ்ந்து வரும் மலையகத் தமிழ் மக்கள் சந்தித்துள்ள இந்த இயற்கைக் பெருஅழிவு அம்மக்களது வாழ்வியல் மேம்பாட்டின் அவசியத்தினை உணர்த்தி நிற்கின்றது.
புலம்பெயர் தமிழ்மக்கள் மத்தியில் இயங்கும் தொண்டு நிறுவனங்கள், தமிழ்ச் சமூக அமைப்புக்கள், மற்றும் வழிபாட்டு தளங்கள் போன்றவற்றன பாதிக்கப்பட்ட மக்களின் புனர்வாழ்வுப் பணிகட்கு பூரண ஆதரவினை வழங்குமாறு பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் வேண்டுதலையும் இந்த வேளையில் இந்த அரசவை நினைவுபடுத்திக் கொள்கின்றது எனத் மரியாதை வணக்கத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேண்டிய உதவிகளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உரிய அமைச்சுக்கள் மற்றும் பிரதிநிதிகள் செய்வதற்குரிய ஏதுநிலைகள் குறித்தும் கருத்துக்கள் பரிமாறப்பட்டிருந்தது.
http://www.tamilwin.com/show-RUmszBTYKXhu6.html

புத்தளத்தில் கடும் வெள்ளப்பெருக்கு! 500 குடும்பங்கள் இடம்பெயர்வு
[ செவ்வாய்க்கிழமை, 04 நவம்பர் 2014, 04:41.32 PM GMT ]
புத்தளத்தில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் முதல்கட்டமாக 500 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
புத்தளம் பகுதியின் மங்களஎலிய, ரந்தியகம,வேலாசிய,ஜயசிரிகம ஆகிய பகுதிகளில் வசித்தவர்களே இவ்வாறு வீடுகளை இழந்த நிலையில் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கடும் வெள்ளம் காரணமாக இப்பகுதிகளில் இருந்த வீடுகள் அனைத்தும் உடைமைகளுடன் நீரில் மூழ்கியிருப்பதாக பிரதேச செயலாளர் பிரேமசூரிய தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே பெருகிவரும் வெள்ளப்பெருக்கு காரணமாக எதிர்வரும் நாட்களில் மேலும் பல குடும்பங்கள் வீடுகளை இழக்கும் நிலை ஏற்படலாம் என்று அனர்த்த முகாமைத்துவ அமைச்சு எச்சரித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszBTYKXhvy.html

இத்தாலியில் சைக்கிள் கொள்ளை! இலங்கைச் சிறுவன் கைது
[ செவ்வாய்க்கிழமை, 04 நவம்பர் 2014, 04:37.40 PM GMT ]
இத்தாலி நாட்டில் சகவயதுச் சிறுவன் ஒருவனைத் தாக்கி சைக்கிள் ஒன்றைக் கொள்ளையிட்ட இலங்கை சிறுவன் கைதுசெய்யப்பட்டுள்ளான்.
இத்தாலியின் கைரோலி நகரில் இன்று இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
சம்பவத்தின் போது குறித்த சிறுவன் சைக்கிளில் வந்த சிறுவனின் முகத்தில் பலமாகத் தாக்கி விட்டு சைக்கிளை கொள்ளையடித்துச் சென்றுள்ளான்.
எனினும் தாக்குதலின் போது அவனது கையில் இருந்த மொபைல் போன் தவறி கீழே விழுந்துள்ளது.
சம்பவம் தொடர்பான முறைப்பாட்டை அடுத்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிசார், மொபைல் போனைக் கொண்டு குற்றவாளியான சிறுவனைக் கைதுசெய்துள்ளனர்.
15 வயதான சிறுவன் ஒருவனே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszBTYKXhu7.html

Geen opmerkingen:

Een reactie posten