தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 4 november 2014

காணாமல் போனவர்கள் தொடர்பாக 64 புதிய முறைப்பாடுகள்!

வரவு- செலவுத்திட்ட இறுதி வாக்கெடுப்பில் மு.கா. எதிர்த்து வாக்களிப்பு? (செய்தித் துளிகள்)
[ செவ்வாய்க்கிழமை, 04 நவம்பர் 2014, 04:06.34 PM GMT ]
வரவு செலவுத் திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எதிர்த்து வாக்களிக்கும் என்று மாகாண சபை உறுப்பினர் ஜெமீல் தெரிவித்துள்ளார்.
வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பின் மீது அரசாங்கத்துக்கு ஆதரவாக நாங்கள் வாக்களித்துள்ளோம்.
எனினும் அரசாங்கம் எங்களுக்கு அளித்த வாக்குறுதிகள் எதுவும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.
குறைந்த பட்சம் அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்களில் கூட எங்களது கட்சிக்கு போதுமான அளவில் நிதியொதுக்கப்படுவதில்லை.
எனவே இந்த நிலையை மாற்ற அரசாங்கம் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இல்லையேல் வரவு செலவுத் திட்டத்தில் இறுதி வாக்கெடுப்பில் எங்களது கட்சி அரசாங்கத்துக்கு எதிராக வாக்களிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வரவு செலவுத்திட்டம் நிறைவேற முன்னரே அரசாங்க செலவீனம் அதிகரிப்பு
அடுத்த வருடத்துக்கான வரவு செலவுத்திட்டம் நிறைவேற முன்னரே அரசாங்கத்தின் செலவினத் தொகை அதிகரிக்கப்பட்டு, திருத்தம் சேர்க்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் இன்று வரவு செலவுத்திட்டத்தின் மீதான உரையின் போது ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் இதனை சுட்டிக்காட்டியிருந்தனர்.
நாடாளுமன்ற உறுப்பினரும் பொருளாதார நிபுணருமான ஹர்சவே இதனை முதலில் கண்டுபிடித்திருந்தார்.
ஜனாதிபதி சமர்ப்பித்த வரவு செலவுத்திட்ட வரைவில் அரச செலவினங்களுக்காக 1812 கோடிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்தது.
எனினும் தற்போது அரசாங்கம் இதனை சத்தமில்லாமல் மாற்றி 2,168 கோடிகளாக அதிகரித்துக் கொண்டுள்ளது.
எனினும் இது தொடர்பில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கண்டனம் தெரிவித்து உரையாற்றிய போது ஆளுங்கட்சி உறுப்பினர்கள் யாரும் பதிலளிக்க முற்படவில்லை
http://www.tamilwin.com/show-RUmszBTYKXhu1.html
காணாமல் போனவர்கள் தொடர்பாக 64 புதிய முறைப்பாடுகள்
[ செவ்வாய்க்கிழமை, 04 நவம்பர் 2014, 04:12.08 PM GMT ]
காணாமல்போனவர்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு 64 புதிய முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
இது தொடர்பாக குறித்த ஆணைக்குழுவின செயலாளர் குணதாச ஊடகங்களுக்கு அறிவித்துள்ளார்.
தற்போது ஜனாதிபதி ஆணைக்குழு முல்லைத்தீவு பிரதேசத்தில் தனது விசாரணைகளை முன்னெடுத்துள்ளது. இந்நிலையில் அங்கு காணாமல் போனவர்கள் தொடர்பாக ஆணைக்குழுவுக்கு 64 புதிய முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் சாட்சி விசாரணைகளின் போது விபரங்கள் பெற வேண்டியிருப்பதால் விசாரணைகள் மந்த கதியிலேயே நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBTYKXhu2.html

Geen opmerkingen:

Een reactie posten