தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 4 november 2014

ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரம்! அரசநிறுவனங்களின் ஊடகவியலாளர்களுக்கு ஒரு லட்சம் அன்பளிப்பு

விபத்தில் சிக்கிய ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவு! இருவர் மரணம்
[ செவ்வாய்க்கிழமை, 04 நவம்பர் 2014, 04:19.33 PM GMT ]
ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவின் இரண்டு பாதுகாப்பு அதிகாரிகள் விபத்தில் சிக்கி மரணமடைந்துள்ளனர்.
இந்த விபத்து கடந்த வாரம் இடம்பெற்றுள்ள நிலையில் குறித்த அதிகாரிகளின் மரணத்தையடுத்து இது குறித்த செய்திகள் இன்று வெளியாகியுள்ளன.
கடந்த வாரம் வனாத்தமுல்லையில் தொடர்மாடி வீடமைப்புத்திட்டம் ஒன்று ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்டது. வைபவம் முடிந்து மீண்டும் அலரிமாளிகைக்கு ஜனாதிபதி திரும்பிக் கொண்டிருந்த போது இந்த விபத்து நடைபெற்றுள்ளது.
வனாத்தமுல்லையில் இருந்து பேஸ்லைன் வீதி ஊடாக அலரிமாளிகை செல்ல முயன்றபோது, வெலிக்கடை சிறைச்சாலை முன்பாக மோட்டார் சைக்கிள் படையணியின் இரண்டு வீரர்கள் விபத்தில் சிக்கியுள்ளனர்.
அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் மழை காரணமாக வழுக்கி, பல சுற்றுகள் கவிழ்ந்த நிலையில் இருவரும் படுகாயமடைந்துள்ளனர்.
எனினும் ஜனாதிபதியின் பாதுகாப்பு தொடரணி இவர்களை அப்படியே அம்போ என்று விட்டுச் சென்றுள்ளது.
இந்நிலையில் பொதுமக்கள் மற்றும் பொலிசாரால் மீட்கப்பட்ட இருவரும் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளனர்.
எனினும் சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்த நிலையில் இந்தத் தகவல் ஊடகங்களுக்கு தெரியவந்துள்ளது.
குறைந்த பட்சம் இந்த இருவரின் மரணம் குறித்து ஜனாதிபதி செயலகம் அனுதாபம் தெரிவிக்கவும் இல்லை என்றும் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
http://www.tamilwin.com/show-RUmszBTYKXhu4.html

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியிலிருந்து ஜனாதிபதித் தேர்தலுக்கு பொது வேட்பாளர்?
[ செவ்வாய்க்கிழமை, 04 நவம்பர் 2014, 04:25.24 PM GMT ]
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரை பொது வேட்பாளராக நிறுத்தும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதித் தேர்தலின் போது ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவுடன் பொதுவேட்பாளர் ஒருவரை முன்னிறுத்தும் முயற்சியில் பல்தரப்பினரும் ஈடுபட்டிருந்தனர். எனினும் ரணில் விக்கிரமசிங்க அக்கட்சியின் சார்பாக போட்டியிடுவதில் தீவிரமாக உள்ளார். இதன் காரணமாக அந்த முயற்சிகள் தற்போது கைவிடப்பட்டுள்ளன.
இந்நிலையில் சுதந்திரக் கட்சிக்குள்ளிருந்தே பொதுவேட்பாளர் ஒருவரை களமிறக்கும் முயற்சிகள் தற்போது தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன. முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் ஆதரவுடன் முன்னெடுக்கப்படும் இந்த முயற்சியில் ஜே.வி. பி மற்றும் மாதுளுவாவே சோபித தேரர் ஆகியோரின் ஆதரவும் கிடைத்துள்ளது.
மேலும் ஜனாதிபதி குடும்பத்தினரின் நடவடிக்கைகளால் அதிருப்தியுற்றுள்ள சுதந்திரக் கட்சி மூத்த தலைவர்களும் இந்த நடவடிக்கைக்கு ஆதரவளித்துள்ளனர்.
பெரும்பாலும் முன்னாள் பிரதமர் ரத்தினசிறி விக்கிரமநாயக்கவே இவ்வாறு பொது வேட்பாளராக முன்னிறுத்தப்படுவார் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
http://www.tamilwin.com/show-RUmszBTYKXhu5.html

ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரம்! அரசநிறுவனங்களின் ஊடகவியலாளர்களுக்கு ஒரு லட்சம் அன்பளிப்பு
[ செவ்வாய்க்கிழமை, 04 நவம்பர் 2014, 04:45.08 PM GMT ]
ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கெடுக்கும் வகையில் அரச நிறுவனங்களின் ஊடகவியலாளர்களுக்கு தலா ஒரு லட்சம் வீதம் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
அரச இலத்திரனியல் நிறுவனங்களின் ஊடகவியலாளர்களுக்கு முதலில் இந்த அன்பளிப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் இன்று சுயாதீன தொலைக்காட்சி மற்றும் லக்ஹண்ட ஊடகங்களின் பணியாளர்கள் இந்தக் கொடுப்பனவைப் பெற்றுள்ளனர்.
இவர்களுக்கு பணமாக 75 ஆயிரம் ரூபாவும், பரிசு வவுச்சராக 25 ஆயிரம் ரூபாவும் வழங்கப்பட்டுள்ளது.
தமது நிகழ்ச்சிகளில் ஜனாதிபதி தொடர்பான நல்லபிப்பிராயத்தை ஏற்படுத்தும் வகையில் மறைமுக பிரச்சாரங்களை முன்னெடுக்க வேண்டுமென்று இவர்கள் பணிக்கப்பட்டுள்ளனர்.அதனை ஊக்குவிக்கவே இந்தக் கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது.
எனினும் சுயாதீன தொலைக்காட்சியின் தமிழ்,முஸ்லிம் ஊழியர்கள் இந்தக் கொடுப்பனவு விடயத்தில் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
http://www.tamilwin.com/show-RUmszBTYKXhvz.html

Geen opmerkingen:

Een reactie posten