[ வியாழக்கிழமை, 20 நவம்பர் 2014, 03:48.02 PM GMT ]
நேற்று மாத்தறை, திக்வெல்ல பிரதேசத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அங்கு உரையாற்றிய அவர், ஒரு காலத்தில் அதியுயர் பாதுகாப்பு வலயங்களில் ஒளிந்து கொண்டிருந்தவர்கள் எதிர்வரும் நாட்களில் உங்கள் முன்வந்து போலியான தகவல்களை கூறி உங்களை திசைதிருப்ப முயற்சிப்பார்கள்.
2005ம் ஆண்டுக்கு முன்னர் நவம்பர் மாதம் என்றாலே பிரபாகரனின் பிறந்த நாள் மட்டும்தான் பொதுமக்களுக்கு ஞாபகத்தில் வரும். மாவீரர் வாரம் வந்தாலே வீட்டை விட்டு வெளியில் வர பொதுமக்கள் அச்சம் கொண்டிருந்த காலம் அது. பிள்ளைகளை விட்டு தாயும், தகப்பனும் ஒன்றாக ரயில் அல்லது பஸ்ஸில் பயணம் செல்வதில்லை. அப்படிச் சென்றால் குழந்தைகளுக்கு இரண்டு பேரையும் இழக்கும் நிலை ஏற்படலாம் என்ற அச்சநிலை ஏற்பட்டிருந்தது.
ஆனால் இன்றைக்கு அந்த அச்சம் இல்லை. யாரும் எங்கு வேண்டுமானாலும் சென்று வரலாம். யாழ். தேவியில் ஏறி யாழ்ப்பாணம் வரை சென்று வரும் காலம் ஏற்பட்டுள்ளது. இந்த மாற்றங்களின் காரணம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச. அதன் காரணமாகத் தான் ஒரு காலத்தில் பிரபாகரனின் பிறந்த நாளை ஞாபகம் வைத்திருந்த பொதுமக்கள் தற்போது நவம்பர் என்றவுடன் ஜனாதிபதியின் பிறந்த நாளை ஞாபகத்தில் வைத்துள்ளனர்.
இந்த நிலை தொடர வேண்டுமானால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மீண்டும் வெற்றி பெற வேண்டும். அவர் 2005ம் ஆண்டு வெற்றி பெறாது போயிருந்தால் இன்று நாடு சுடுகாடாகியிருக்கும். மீண்டும் அந்த நிலை ஏற்பட பொதுமக்கள் இடமளிக்கக் கூடாது என்றும் அவர் தொடர்ந்தும் தெரிவித்து்ள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBRUKYhp5.html
எனது தந்தை மஹேந்திரராஜாவுக்கு ஆயுதம் வழங்கினார்: சஜித் பிரேமதாஸ
[ வியாழக்கிழமை, 20 நவம்பர் 2014, 03:45.24 PM GMT ]
திஸ்ஸமஹராமையில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர்,
நாட்டை பிளவுபடுத்துதற்காக அல்ல. விடுதலைப் புலிகளை பிளவுப்படுத்தவே மஹேந்திரராஜாவுக்கு ஆயுதங்களை வழங்கியதாக குறிப்பிட்டுள்ளார்.
எனினும் தற்போதைய அரசாங்கம், பிரேமதாஸ விடுதலைப்புலிகளை சக்திமயப்படுத்தியதாக குற்றம் சுமத்தி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மஹேந்திரராஜா, 1978ஆம் ஆண்டு முதல் 1987ஆம் ஆண்டு வரை விடுதலைப்புலிகள் அமைப்பில் அங்கம் வகித்தார்.
இதன்பின்னர் 1989இல் விடுதலைப் புலிகளின் மக்கள் முன்னணி என்ற அரசியல் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
பின்னர் 1994ஆம் ஆண்டு அவர் விடுதலைப் புலிகளால் மரணதண்டனைக்கு உட்படுத்தப்பட்டார்.
http://www.tamilwin.com/show-RUmszBRUKYhp4.html
Geen opmerkingen:
Een reactie posten