தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 20 november 2014

எரிக் சொல்ஹெய்ம் புலிகளுக்கு நேரடியாக ஆயுதங்கள் வழங்கியுள்ளார்!- அமைச்சர் கெஹலிய

நாட்டுக்கு தேவை கருணையான (மைத்திரி) ஆட்சி – ஐ.தே.க
[ வியாழக்கிழமை, 20 நவம்பர் 2014, 03:00.51 PM GMT ]
நாட்டுக்கு தேவை கருணையான (மைத்திரி) ஆட்சி என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நலின் பண்டார தெரிவித்துள்ளார்.
சிங்கள மொழியில் கருணையை குறிப்பதற்கும் மைத்திரி என்ற சொல் பயன்படுத்தப்படுகின்றது.
எனினும், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக பொலனறுவை மாவட்ட ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும், அமைச்சருமான மைத்திரிபால சிறிசேனவின் பெயரின் முதல் பகுதியும் மைத்திரி என ஆரம்பிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
வரவு செலவுத் திட்ட விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கொஞ்சம் பொறுங்கள் எங்களது பொது வேட்பாளர் யார் என்பதனை அறிவித்தால் நீங்கள் பயந்து விடுவீர்கள்.
இந்த அரசாங்கம் சிரேஸ்ட உறுப்பினர்களுக்கு பொய்யான பட்டங்களை வழங்கிää ஒரம் கட்டுகின்றது.
அமைச்சுப் பதவிகளுக்கு வயது எல்லை கிடையாது.
டி.எம் ஜயரட்ன பிரதமராக பதவியேற்றதுவும், ஜே.ஆர்.ஜயவர்தன ஜனாதிபதியாக பதவி ஏற்றதுவும் 77 வயதுகளிலாகும்.
நேற்று இன்று வந்த கனிஸ்ட உறுப்பினர்கள் இன்று சண்டியர்களாக மாறியுள்ளனர் என நலீன் பண்டார தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBRUKYhp1.html
நான் நிழல் வீரருடன் சண்டையிடுகிறேன்: ஜனாதிபதி மஹிந்த
[ வியாழக்கிழமை, 20 நவம்பர் 2014, 03:32.06 PM GMT ]
நான் நிழல் வீரருடன் குத்துச் சண்டைப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றேன். என்னுடன் மோதலில் ஈடுபடவுள்ள வீரரை இனியாவது அறிவியுங்கள் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
அலரி மாளிகையில் இன்று நடைபெற்ற பால் உற்பத்தியாளர்களுடனான சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.
அங்கு மேலும் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி,
தேர்தலில் படுதோல்வியைச் சந்திக்கும் அந்த நபர் யார் என்பதை நான் மிக விரைவில் காண விரும்புகின்றேன்.
ஒவ்வொரு நாளும் நாட்களைத் தள்ளிப் போட்டுக் கொண்டு வரும் எதிர்க் கட்சிகள் இன்றைக்குப் பிறகாவது என்னுடன் போட்டியிட வருபவர் யார் என்பதை அறிவியுங்கள்.
வெளிநாடுகளின் ஊடாக சிலர் இலங்கையில் அரசாங்கத்தை அமைக்க முயற்சித்து வருகின்றனர். மக்களின் உரிமைகளை வேறு எவருக்கும் வழங்க தயாரில்லை.
ஐக்கியமாக கட்சிக்குள் தலைமைத்துவம் ஒன்றை தெரிவு செய்து கொள்ள முடியாதவர்களுக்கு நாட்டுக்கு சரியான தலைமைத்துவத்தை வழங்க முடியாது.
மக்களும் அவர் மீது நம்பிக்கை வைக்க முடியாது. நாட்டை அபிவிருத்தி செய்து நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாத்த இன்றைய அரசாங்கம் என்றும் நாட்டு மக்களின் நம்பிக்கையை வென்றெடுத்துள்ளது என தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBRUKYhp3.html

எரிக் சொல்ஹெய்ம் புலிகளுக்கு நேரடியாக ஆயுதங்கள் வழங்கியுள்ளார்!- அமைச்சர் கெஹலிய
[ வியாழக்கிழமை, 20 நவம்பர் 2014, 03:28.42 PM GMT ]
எரிக் சொல்ஹெய்ம் சமாதானத் தூதுவராக காட்டிக் கொண்டு இலங்கைக்கு பாரிய அழிவுகளை ஏற்படுத்தி உள்ளதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, எரிக் சொலஹெய்ம் தொடர்பில் பாரிய முரண்பாடான விடயங்கள் இருக்கின்றன. அவர் உண்மையில் ஒரு சமாதானத் தூதுவர் இல்லை.
முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் காலத்தில் விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள் மற்றும் நிதியுதவிகளை அளித்த விடயத்திலும் எரிக் சொலஹெய்ம் நேரடியாக தொடர்புபட்டுள்ளார்.
எரிக் சொலஹெய்ம் ஒரு காலகட்டத்தில் இலங்கையை அழிவுப் பாதைக்குள் தள்ளிவிடும் கடுமையான முயற்சிகளில் ஈடுபட்டிருந்தார் என்றும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல குற்றம் சாட்டியுள்ளார்.
இதற்கு முன்னதாக கடந்த 20ம் திகதி குருநாகலில் வைத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச எரிக் சொலஹெய்ம் தொடர்பில் நேரடியாக குற்றம் சாட்டியிருந்தார். எனினும் அதனை எரிக் சொலஹெய்ம் மறுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszBRUKYhp2.html

Geen opmerkingen:

Een reactie posten