தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 5 november 2014

பொய்யான தகவல்களை கூறி வெளிநாட்டில் குடியுரிமை பெற்றவர்களுக்கு இரட்டை குடியுரிமை கிடையாது: அரசாங்கம்

நாட்டின் பொருளாதர வளர்ச்சி வேகம் அதிகரித்துள்ளது: துமிந்த சில்வா
[ புதன்கிழமை, 05 நவம்பர் 2014, 07:44.51 AM GMT ]
எதிர்க்கட்சியினர் இலங்கையை எதியோப்பியா, சோமாலியா போன்ற நாடுகளுடன் ஒப்பிட்டாலும் நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகம் அதிகரித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். துமிந்த சில்வா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
எதிர்க்கட்சியினர் நாட்டை ஆபிரிக்காவில் உள்ள வறிய நாடுகளுடன் இலங்கையை ஒப்பிட்ட போதிலும் மகிந்த சிந்தனை கொள்கையில் உள்ள தூரநோக்கு பார்வை காரணமாக நாட்டின் பொருளாதர வளர்ச்சி வேகம் 7.08 வீதமாக அதிகரித்துள்ளது.
2010 ஆம் ஆண்டு பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ கொழும்பு நகரில் 60 ஆயிரம் வீடுகளை இரண்டு கட்டங்களாக நிர்மாணித்துள்ளார்.
ஆனால், எதிர்க்கட்சியினர் கொழும்பு நகரில் சேரிப்புறங்களில் வாழும் மக்களுக்கு பொய்களை கூறி அவர்களை தவறாக வழி நடத்தினர்.
இதன் மூலம் எதிர்க்கட்சியினர் சந்தர்ப்பவாத அரசியல் லாபத்தை பெற முயற்சித்தனர் எனவும் துமிந்த சில்வா குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBTZKXgoy.html
பொய்யான தகவல்களை கூறி வெளிநாட்டில் குடியுரிமை பெற்றவர்களுக்கு இரட்டை குடியுரிமை கிடையாது: அரசாங்கம்
[ புதன்கிழமை, 05 நவம்பர் 2014, 07:34.03 AM GMT ]
இலங்கை எதிராக வெளிநாடுகளில் பொய்யான தகவல்களை வழங்கி, அந்த நாடுகளில் குடியுரிமைகளை பெற்ற எவருக்கும் இரட்டை குடியுரிமை வழங்கப்பட மாட்டாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் நேற்று வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் உரையாற்றிய அமைச்சர் ஜகத் புஷ்பகுமார இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
இலங்கையில் இரட்டை குடியுரிமை பெற விண்ணப்பிக்கும் நபர்கள் எவ்வாறு தெரிவு செய்யப்படுகின்றனர் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பீ. பெரேரா எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBTZKXhx7.html

Geen opmerkingen:

Een reactie posten