போட்டியிடவேண்டாம்: ரணிலிடம் கட்சிகள் கோரிக்கை- போட்டியிலிருந்து பின்வாங்கினார் ரணில்: பொது வேட்பாளருக்கு இணக்கம்!
[ புதன்கிழமை, 05 நவம்பர் 2014, 08:13.00 AM GMT ]
மத்திய மாகாணசபையின் உறுப்பினர் அசாத் சாலி இதனை இன்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்துள்ளார்.
ரணில் விக்கிரமசிங்க போட்டியிடாமல் பொதுவேட்பாளருக்கு ஆதரவு தரவேண்டும் என்று அந்தக்கட்சிகள் கோரியிருப்பதாக அசாத் சாலி குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான கடிதம் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்தநிலையில் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமைத்துவம் இதற்கு சாதகமான பதிலை வழங்கும் என்று எதிர்ப்பார்ப்பதாக அசாத் சாலி தெரிவித்துள்ளார்
போட்டியிலிருந்து பின்வாங்கினார் ரணில்: பொது வேட்பாளருக்கு இணக்கம்!
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிடும் முடிவில் இருந்து ஐ.தே.க.வின் தலைவர் ரணில் பின்வாங்கியுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
ஐக்கிய தேசியக்கட்சியின் முக்கியஸ்தர்கள் மற்றும் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு இடையில் நேற்றுமாலை நடைபெற்ற பேச்சுவார்தையின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இந்த சந்திப்பில் ஐ.தே.க. வின் சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் முன்னணி சட்டத்தரணிகள் கலந்து கொண்டுள்ளனர்.
இதன்போது எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கட்சியின் வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்க போட்டியிடும் பட்சத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் கட்சி தாவும் முடிவில் இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் பொது வேட்பாளர் என்ற முடிவில் இருக்கும் ஏனைய கட்சிகளின் ஆதரவை தனித்துப் போட்டியிடும் போது பெற்றுக் கொள்வது கடினம் என்பதும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து தான் போட்டியில் இருந்து ஒதுங்கிக் கொள்ளவும், பதிலாக அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் பொது வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்தவும் ரணில் இணக்கம் தெரிவித்துள்ளார்.
இந்த இணக்கம் குறித்து கட்சியின் முக்கிஸ்தர் மலிக் சமரவிக்ரம உடனடியாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவுக்கு அறிவித்துள்ளார் என்றும் கொழும்பு டுடே செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszBTZKXgo0.html
மங்கள சமவீர திடீர் வெளிநாட்டுப் பயணம்! அமைச்சர் பதவியோடு நாடு திரும்புவார்?
[ புதன்கிழமை, 05 நவம்பர் 2014, 08:13.23 AM GMT ]
மங்கள சமரவீரவின் வெளிநாட்டுப்பயணம் குறித்து சிங்கள இணையத்தளங்கள் பரபரப்பாக செய்திகளை வெளியிட்டுள்ளன.
மங்கள சமரவீர அரசாங்கத்தில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் அவரது வெளிநாட்டுப் பயணம் அமைந்துள்ளதாக அந்த செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமான நிலையத் தகவல் வட்டாரங்களின் பிரகாரம் இன்று அதிகாலை அவர் சிங்கப்பூருக்கு புறப்பட்டுச் சென்றிருப்பதாக தெரிய வந்துள்ளது.
இதற்கிடையே ஓரிரு நாட்களில் நாடு திரும்பவுள்ள மங்கள சமரவீர, மஹிந்த ராஜபக்ஷ அரசின் துறைமுக, கப்பல்துறை, வெளிநாட்டலுவல்கள் அமைச்சுப் பதவியை ஏற்றுக் கொள்ளவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும் மங்கள சமரவீர தனிப்பட்ட மருத்துவச் சிகிச்சைக்காகவே சிங்கப்பூர் சென்றிருக்கும் தகவல் கிடைத்துள்ளது என்று கொழும்பு டுடே செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszBTZKXgo1.html
Geen opmerkingen:
Een reactie posten