தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 5 november 2014

வடக்கு மக்களுக்கு அரசியல் சுதந்திரம் வழங்கப்பட வேண்டும்: ஜே.வி.பி- ஜே.வி.பி.யும் ஜனாதிபதித் தேர்தல் களத்தில் குதிக்கிறது?

விக்னேஸ்வரனின் அலுவலகத்திற்கு எதிரில் உண்ணாவிரதம் போராட்டம்: எம்.கே.சிவாஜிலிங்கம்
[ புதன்கிழமை, 05 நவம்பர் 2014, 06:49.01 AM GMT ]
வடக்கில் நடந்த இனப்படுகொலை தொடர்பான விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என தான் வடக்கு மாகாண சபையில் முன்வைத்த யோசனைக்கு மாகாணத்தின் முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரன் போதிய கவனத்தை செலுத்தவில்லை என வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
இதனால், அதற்கு எதிராக முதலமைச்சரின் அலுவலகத்திற்கு எதிரில் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொள்ள போவதாகவும் அவர் கூறியுள்ளார் என லக்பிம பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
வடக்கு மாகாண சபையின் கூட்டம் ஒன்றின் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
முதலமைச்சர் தலைமையிலான மாகாணத்தின் ஆளும் கட்சியின் பிரதிநிதியான தனது யோசனையை கவனத்தில் எடுக்காததை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும் இது சம்பந்தமாக மேலும் கருத்து வெளியிட்டுள்ள சிவாஜிலிங்கம், தனது யோசனைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்பது உண்மை என்றாலும் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க எதிர்வரும் டிசம்பர் மாதம் வரை காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
எம்.கே.சிவாஜிலிங்கம், விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மைத்துனர் என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszBTZKXhx4.html
வடக்கு மக்களுக்கு அரசியல் சுதந்திரம் வழங்கப்பட வேண்டும்: ஜே.வி.பி- ஜே.வி.பி.யும் ஜனாதிபதித் தேர்தல் களத்தில் குதிக்கிறது?
[ புதன்கிழமை, 05 நவம்பர் 2014, 07:04.05 AM GMT ]
வடக்கு கிழக்கு மக்களுக்கு அரசியல் சுதந்திரத்தை வழங்க வேண்டியது அரசாங்கத்தின் பணியாகும் என ஜே.வி.பியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரசியல் சுதந்திரம் இருந்தால், உதயன் பத்திரிகை அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்காது.
அரசியல் சுதந்திரம் இருக்குமாயின் அரைகுறை இராணுவ ஆட்சி அங்கு இருக்க வேண்டிய அவசியமில்லை.
வடக்கு, கிழக்கில் முழுமையான சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் கடமை. வடக்கில் சிவில் நிர்வாகத்தில் ஏன் இராணுவம் தலையிடுகிறது?
அபிவிருத்தி என்றுக் கூறி வீதிகளையும் மைதானங்களையும் நிர்மாணிப்பதால், மக்களின் எண்ணங்களில் சுதந்திரம் ஏற்படாது.
இதனால், மக்களுக்கு சுதந்திரம் இருக்க வேண்டும். வடக்கில் மக்களின் காணி உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டும்.
அரசியல் லாபத்திற்கான அம்பாந்தோட்டையில் இருந்து மக்களை அழைத்து சென்று காணிகளை பகிர்ந்து நாமல் கிராமம் என பெயரிடுகின்றனர்.
வரலாற்றிலும் அப்படியே செய்யப்பட்டது. அப்படி செய்யும் போது சந்தேகம் ஏற்படும். சிறிய சம்பவம் பாரதூரமான சம்பவமாக மாறும்.
அரசாங்கம் பல்வேறு உறுதிமொழிகளை வழங்கியது. பேச்சுவார்த்தைகளை நடத்தியது.
சம்பந்தன் அலரி மாளிகைக்கு சென்று ஜனாதிபதியுடன் கேக் துண்டை சாப்பிட்டு தேனீர் அருந்துவதால், வடக்கில் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீராது.
தமிழர்கள் அல்ல நாம் இலங்கையர் என்ற உணர்வில் பார்க்கும் நிலைமைக்கு வடக்கு மக்களை மாற்ற வேண்டும்.
வடக்கில் மீனவர்களின் பிரச்சினையை அரசாங்கத்தினால் தீர்க்க முடியாது போயுள்ளது.
வடக்கு நோக்கி செல்லும் சகல வெளிநாட்டவர்களும் பாதுகாப்பு அமைச்சில் அனுமதி பெறவேண்டும் என தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இது தலையில் ஒன்றுமில்லாதவர்கள் எடுத்த தீர்மானம். அவ்வாறான தீர்மானங்களை எடுக்கும் போது சுற்றுலாப் பயணிகள் வருவார்களா எனவும் விஜித ஹேரத் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜே.வி.பி.யும் ஜனாதிபதித் தேர்தல் களத்தில் குதிக்கிறது?
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது ஜே.வி.பி.யும் வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்தும் முடிவுக்கு வந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
இதுவரை காலமும் ஜனாதிபதித் தேர்தல் சட்டவிரோதமானது என்றும் , நடத்த விடக் கூடாது என்றும் கடுமையான நிலைப்பாட்டில் இருந்த ஜே.வி.பி. தற்போது இறங்கி வந்துள்ளது.
இதன் அடுத்த கட்ட நகர்வாக ஹெலஉறுமய, ஐ.தே.க. மற்றும் ஏனைய கட்சிகளுடன் உடன்பாடு ஒன்றை ஏற்படுத்திக் கொண்டு பொது வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்த நடவடிக்கை எடுப்பது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பொது வேட்பாளர் தெரிவு சாத்தியமில்லாத பட்சத்தில் தமது கட்சியின் சார்பிலும் வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்த ஜே.வி.பி. தீர்மானித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszBTZKXhx5.html

Geen opmerkingen:

Een reactie posten