தூக்கில் உள்ள தமிழக மீனவர்களுக்கு நாளை மேல்முறையீடு! (படம் இணைப்பு)
|
போதைப்பொருள் கடத்தியதாக குற்றம்சாட்டப்பட்டு, கொழும்பு மேல்நீதிமன்றினால் மரணதண்டனை விதிக்கப்பட்ட ஐந்து தமிழ்நாட்டு மீனவர்களின் சார்பிலும், இந்திய அரசு நாளை சிறிலங்கா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்யவுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், மீனவர்கள் சார்பில் வாதிடுவதற்காக மிகச்சிறந்த சட்டவாளர்களை கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகம் நியமித்துள்ளது.
சிறிலங்கா உயர்நீதிமன்றத்தில் மீனவர்கள் சார்பில் மேல்முறையீடு செய்வதற்கான சட்டசெலவுகளுக்காக தமிழ்நாடு அரசு 20 இலட்சம் ரூபாவை கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்துக்கு அனுப்பியுள்ளது. என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2011ம் ஆண்டு கச்சதீவுக் கடலில் சிறிலங்கா கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்கள் ஐந்து பேரும், 995 கிராம் போதைப்பொருளை வைத்திருந்ததாக குற்றம்சாட்டப்பட்டு கடந்த மாதம் 30ம் நாள் கொழும்பு மேல் நீதிமன்றினால் மரண தண்டனை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 |
09 Nov 2014 http://lankaroad.net/index.php?subaction=showfull&id=1415525099&archive=&start_from=&ucat=1&
இலங்கையர் மீதான அவுஸ்திரேலிய நடவடிக்கைகளால் ஐ நா அறிக்கை
|
இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பில் அவுஸ்திரேலிய அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் குறித்து ஐக்கிய நாடுகள் அமைப்பின் சித்திரவதைகளுக்கு எதிரான கமிட்டியிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் சட்டவிரோத குடியேற்றவாசிகள் தொடர்பில், அவுஸ்திரேலிய அரசாங்கம் நியாயமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மனித உரிமை அமைப்புக்களும், அரச சார்பற்ற நிறுவனங்களும் இணைந்து இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளன. |
09 Nov 2014 http://lankaroad.net/index.php?subaction=showfull&id=1415525314&archive=&start_from=&ucat=1&
வௌிவிவகார அமைச்சின் கருத்தை சம்பந்தன் நிராகரிப்பு
|
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையகத்தின் விசாரணைகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனிப்பட்ட வகையில் ஈடுபாடு காட்டுவதாக கூறப்பட்ட கருத்தை முற்றாக நிராகரிப்பதாக இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
கடந்த 4ம் திகதி வௌிவிவகார அமைச்சு தெரிவித்த கருத்தொன்றுக்கு பதிலளித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வௌியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இது கேலிக்கூத்தான விடயம் எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. |
09 Nov 2014 http://lankaroad.net/index.php?subaction=showfull&id=1415525821&archive=&start_from=&ucat=1&
மலையகத்தில் அரசியல் செய்ய த.தே.கூ.வுக்கு உரிமை உண்டு: இராதாகிருஷ்ணன் எம்.பி
|
'தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மலையகத்துக்கு தீன்டத்தகாதவர்கள் அல்ல. எமக்கும் அவர்களுக்கும் இடையில் ஒரு சிறு இடைவெளி ஏற்பட்டுவிட்டது. அது மீண்டும் கட்டியெழுப்பப்படுகின்றதென்றால் அதனை நாம் வரவேற்க வேண்டும்' என தாவரவியல் பூங்காக்கள் பொது பொழுதுபோக்கு அலுவல்கள் பிரதி அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவிததார்.
'வெறுமனே எல்லாவிடயங்களையும் அரசியல் கண்ணோட்டத்துடன் பார்க்கக்கூடாது. மலையகத்தில் வந்து அரசியல் செய்வதற்கு அவர்களுக்கு முழு உரிமையும் உண்டு. இது ஒரு ஜனநாயக நாடு. அவர்களின் வருகையால் இங்கு நல்லது நடக்கும் என்றால் அதனை நான் வரவேற்கின்றேன்' என்றும் அவர் தெரிவித்தார்.
மண்சரிவினால் பாதிக்கப்பட்ட கொஸ்லந்தை மீரியபெத்தை பகுதிக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் விஜயம் மேற்கொண்டமை தொடர்பில் ஊடகங்களில் வெளியான கருத்துக்களுக்கு பதிலளிக்கம் வகையில் விடுத்துள்ள அறிக்கையிலே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இவ்வறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
'எமது நாட்டில் சுனாமி ஏற்பட்ட பொழுது எந்த உணர்வுடன் மலையக மக்கள் வடக்குக்கும் ஏனைய பகுதிகளுக்கும் சென்று மனிதாபிமான உதவிகளை செய்தார்களோ அதே மனிதாபிமான ரீதியில்தான் தமிழ் தேசிய கூட்டமைப்பு கொஸ்லந்தை மீரிய பெத்தை பகுதிக்கு விஜயம் செய்தார்கள். இதில் எந்தவிதமான அரசியல் நோக்கமும் அவர்களிடம் இருக்கவில்லை என்பதை என்னால் தெளியாக கூற முடியும்.
தமிழத்; தேசிய கூட்டமைப்பு கொஸ்லந்தை மீரியபெத்தைக்கு விஜயம் செய்தபோது நானும் அவர்களுடன் கலந்துகொண்டேன். அவர்கள் என்னிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இதில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்கள்.
அவர்களுக்கு அரசியல் ரீதியான அல்லது இந்த விஜயத்தில் வேறு எண்ணங்;கள் இருந்தால் என்னையோ அல்லது ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கனேசனையோ அழைக்காமல் சென்றிருக்கலாம்.
இதேவேளை, இவ்விஜயத்தின்போது எந்தவிதமான அரசியலையும் அவர்கள் பேசவில்லை.
எமது மறைந்த தலைவர் அமரர் சௌமிய மூர்த்தி தொண்டமான் வடக்குக்கு தலைமைதாங்கி இருக்கின்றார். அவர் உயிருடன் இருக்கும் பொழுது அந்த மக்களுக்காக குறல் எழுப்பி இருக்கின்றார். எனவே அவ்வாறான ஒரு நெருங்கிய உறவு அவர்களுடன் எமக்கு இருந்தது.
எமது மலையக மக்கள் முன்னணியின் மறைந்த தலைவர் அமரர் பெரியசாமி சந்திரசேகரன் அமைச்சராக இருந்துகொண்டும் வட மாகபாண மக்களுடன் நல்ல ஒரு உறவை பேணிவந்தார்.
எனவே இனியாவது நாம் அனைவரும் ஒற்றுமையாக செயற்;பட முன்வரவேண்டும். இன்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எவ்வாறு அவர்களுடைய பிரச்சினைகளை சர்வதேசத்துக்கு கொண்டு சென்றுள்ளதோ அதேப்போல நாமும் எமது பிரச்சினைகளை சர்வதேசத்துக்கு கொண்டு செல்லவேண்டும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் இந்த விஜயத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏற்றுக் கொண்டுள்ள பொழுது மற்றவர்கள் அலட்டிக் கொள்வது ஏனென்று புரியவில்லை' எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார். |
09 Nov 2014 http://lankaroad.net/index.php?subaction=showfull&id=1415531307&archive=&start_from=&ucat=1& |
|
|
|
Geen opmerkingen:
Een reactie posten