தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 9 november 2014

கொழும்பில் 3 துருக்கி இளைஞர் காட்டிய கைவரிசை என்ன ?

கொழும்பு ஏர் போட்டில் இன்று அதிகாலை பெரும் பரபரப்பு. காரணம் என்னவென்றால் இலங்கையில் இருந்து துருக்கி நாட்டு இளைஞர் ஒருவர் பிறிதொரு நாட்டிற்கு பயணிக்க இருந்துள்ளார். அவரைக் கைதுசெய்யவே இலங்கை குற்றப்புலனாய்வுப் பொலிசார் அலைந்து திரிந்துள்ளார்கள். நேற்று முன் தினம் இரவு ஒரு துருக்கி இளைஞரை பொலிசார் போலி கடன் அட்டை பாவித்தாக கைதுசெய்தார்கள். அவரிடம் ஒரு கடன் அட்டை தான் இருந்துள்ளது. ஆனால் குறித்த நபர் தங்கியிருந்த விடுதிக்குச் சென்ற பொலிசாருக்கு மேலதிக அதிர்சி காந்திருந்துள்ளது.
அங்கே மேலும் ஒரு இளைஞன், கிரெடிட் காட் தயாரிக்கும் சிறிய இயந்திரம், லாப் -டொப் என்று பல பொருட்கள் காணப்பட்டு உள்ளது. பல கள்ள கிரெடிட் கார்டை தயாரித்துக்கொண்டு இலங்கை வந்துள்ள இவர்கள் சுமார் 3 நாட்களில் மட்டும் 35 லட்சம் ரூபாவை காசாக எடுத்துள்ளார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. இதுவரை அவர்களிடம் இருந்து பெரும்தொகையில் பணம் மீட்க்கப்படவில்லை. இன் நிலையில் இவ்விருவரும் கொடுத்த தகவலுக்கு அமைய 3 வது நபரை பொலிசார் தேடிவந்துள்ளார்கள். இருப்பினும் இரவோடு இரவாக இன் நபர் தப்பித்து, துருக்கி செல்ல விமானச் சீட்டை அவர் பதிந்துள்ளார்.
எப்படி இருந்தாலும் கட்டநாயக்கா வழியாக தான் செல்லவேண்டும் என்று பொலிசாருக்கு தெரியாதா என்ன ? இதனால் பொலிசார் இன்று(09) அதிகாலை விமான நிலையத்தை சுற்றிவளைத்து மாறுவேடத்தில் கண்காணித்து வந்துள்ளார்கள். இறுதியாக மாட்டிக்கொண்டார் அந்த 3 வது துருக்கி வாலிபர்.


Geen opmerkingen:

Een reactie posten