[ ஞாயிற்றுக்கிழமை, 09 நவம்பர் 2014, 08:41.39 AM GMT ]
பதுளை, கொஸ்லந்த மீரியபெத்தயில் மண்சரிவு ஏற்பட்ட பகுதியிலிருந்து இன்று இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
40 வயதான பெண்ணொருவரின் சடலமும் சிசுவொன்றின் சடலமுமே மீட்கப்பட்டுள்ளன.
இப்பகுதியில் இடம்பெற்ற மண்சரிவில் காணாமல் போனவர்களை மீட்கும்பணி 12வது நாளாக இன்று மேற்கொள்ளப்பட்டபோதே இச்சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
நேற்று அப்பகுதியிலிருந்து மாடொன்று இறந்தநிலையில் மீட்கப்பட்டதுடன் இதுவரை 13 சடலங்கள் அப்பகுதியிருந்து மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மீட்புப் பணிகள் தொடர்ந்தும் நடைபெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகிறது.
மண்சரிவில் சிக்கி காணாமற்போயிருந்த மேலும் இருவரின் சடலங்கள் மீட்பு
கொஸ்லாந்தை மீரியபெத்த தோட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி காணாமற்போயிருந்த மேலும் இருவரின் சடலங்கள் இன்று மீட்கப்பட்டன.
ஒன்பது வயது சிறுமி ஒருவரின் சடலமும், பெண்னொருவரது சடலமும் இன்று மீட்கப்பட்டதாக மத்திய பாதுகாப்பு படையணியின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மனோ பெரேரா தெரிவித்தார்.
காலை ஆரம்பிக்கப்பட்ட அகழ்வுப் பணிகளில் குறித்த இரண்டு சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன.
மீரியபெத்த மண்சரிவில் புதையுண்டு காணாமல்போனவர்களை மீட்கும் பணிகள் 12 ஆவது நாளாக இன்றும் முன்னெடுக்கப்பட்டு வந்தன.
இதேவேளை, மண்சரிவில் புதையுண்டவர்களை தேடும் பணிகளை இடைநிறுத்துவது தொடர்பில் மக்களின் கருத்துக்களை இடர் முகாமைத்துவ அமைச்சர் எழுத்து மூலம் கோரியுள்ளார்.
கொஸ்லந்தை மண்சரிவு அனர்த்தம் ஏற்பட்ட பின்னர் மீட்புப் பணியில் ஈடுபட்ட இராணுவத்தினர் மீட்டு பொலிசாரிடம் ஒப்படைத்த சகல பொருட்களையும் நாளை பண்டாரவளை நீதிவான் நீதிமன்றத்தில் முத்திரையிட்டு ஒப்படைக்கவுள்ளதாக கொஸ்லந்தை பொலிசார் தெரிவிக்கின்றனர்.
நீதிமன்றத்தில் மீட்கப்பட்ட பொருட்களை இனங்காட்டி அது தமக்குரியதென்பதை நிரூபித்து உரியவர்கள் அவற்றை மீளப் பெற்றுக்கொள்ள முடியுமென்றும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவா்களின் இறுதி கிரியைகள், இந்து சமய சம்பிரதாயங்களின் பிரகாரம் நேற்றுமுன் தினம் நல்லடக்கம் செய்யப்பட்டது.
http://www.tamilwin.com/show-RUmszBTdKXep3.html
மலையக மக்களுக்கு சொந்த வீடு சொந்த காணி வேண்டும்!- ஹற்றனில் பேரணி
[ ஞாயிற்றுக்கிழமை, 09 நவம்பர் 2014, 08:31.09 AM GMT ]
இருநூறு வருட மலையக மக்களின் வரலாற்றினை கொஸ்லாந்தை அனர்த்தம் உலகுக்கு வெளிகாட்டிவிட்டது. இந்நிலை தொடருமானால் இன்னும் இருநூறு வருடங்களுக்கும் இவ் அவலநிலை தொடரத்தான் போகின்றது. இதற்கு நாம் இனியும் இடமளிக்க கூடாது. இதனை மாற்றவேண்டிய தருவாயில் நாங்கள் இப்போது இருக்கின்றோம் என்பதை மலையக மக்கள் உணர வேண்டும்.
கொஸ்லாந்தை அனர்த்தத்தின் விளைவுகள் மலையக மக்கள் மனதில் உணர்ந்தால் ஒவ்வொருவரும் சிந்தித்து இனி ஏற்படவிருக்கின்ற அனர்த்தத்தினையும் இல்லாதொழித்து பாதுகாப்பான இடங்களில் சொந்த வீடு, சொந்த காணி பெற்றுக் கொள்வதற்காக ஒன்றினைந்து போராட வேண்டும்.
எமது மலையக அரசியல்வாதிகள் முன்னின்று எமது மக்களுக்கான உரிமைகளை பெற்றுக்கொடுக்க அரசியல் தொழிற்சங்க பேதமின்றி முன்வரவேண்டும்.
அத்தோடு தோட்ட தொழிலாளிகளுக்கு 50 ஆயிரம் வீடுகள் அமைத்துக்கொடுக்க தீர்மானித்துள்ளனர்.
எனினும் தோட்ட தொழிலாளிகளுக்கு மட்டுமில்லாமல் தோட்ட தொழிலாளிகளின் குடும்பத்தினருக்கும் ஏனைய தனியார் துறையில் மற்றும் அரச துறையில் பணி புரிவர்களுக்கு தோட்டத்தில் வாழ்கின்ற அனைத்து மக்களுக்கும் இந்த வீடுகள் அமைத்துக்கொடுக்கப்பட வேண்டும்.
லயன் குடியிருப்புகளுக்கு பதிலாக குறைந்த பட்சம் 20 பேர்ச் காணியுடனான தனி வீட்டு திட்டத்தை அமைக்க வேண்டும் என இந்த பேரணியில் ஈடுப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
20 பேர்ச் காணி கொடுப்பதற்கான இடங்கள் மலையகத்தில் அதிகளவாக காணப்படுகின்றது. அந்த இடங்களை இனங்கண்டு வழங்குவதற்கு மலையக அரசியல்வாதிகள் ஒன்றிணைந்து முன்வரவேண்டும் என பேரணியில் ஈடுப்பட்டவர்கள் மேலும் தெரிவித்தனர்.
http://www.tamilwin.com/show-RUmszBTdKXep2.html
Geen opmerkingen:
Een reactie posten