இலங்கை சீனாவோடு மட்டும் நெருங்கிய உறவை வளர்த்து வருவதாகவும், இது நல்லதல்ல எனவும் பிரான்ஸ் நாட்டு தூதுவர் வெளிப்படையாகவே கருத்தை தெரிவித்துள்ளார். இக்கருத்தால் இரு நாடுகளுக்கு இடையே முறுகல் நிலை ஏற்படலாம் எனக் கூறப்படுகிறது. மேலும் தெரியவருவது ,
இலங்கை அரசாங்கம் சீனாவுடன் மட்டும் நெருங்கிய தொடர்புகளைப் பேணுவது ஆரோக்கியமாகாது என பிரான்ஸ் தெரிவித்துள்ளது. இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையில் மிக நெருங்கிய தொடர்பு காணப்படுவதாக இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ஜேன் பொல் மொனச்சுவா தெரிவித்துள்ளார். இலங்கையின் அனைத்து முட்டைகளையும் சீனா என்ற ஒரே கூடையில் நிரப்புவது புத்திசாதூரியமாகாது என அவர் தெரிவித்துள்ளார்.
ஏனைய உலக நாடுகளுடனும் இலங்கை சுமூகமான உறவுகளைப் பேண வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். அண்மைக்காலமாக அதிக எண்ணிக்கையிலானவர்கள் சீனாவிலிருந்து இலங்கைக்கு விஜயம் செய்வதாகத் தெரிவித்துள்ளார்.
சீனாவுடன் இலங்கைப் பேணி வரும் உறவுகள் குறித்து பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். உலகில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்துச்செல்வதாகத் தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கம் சீனாவை மையப்படுத்திய கொள்கைகளை மாற்றிக்கொண்டு, ஏனைய நாடுகளுடனும் உறவுகளைப் பேண நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, பிரான்ஸூடன் இலங்கை சிறந்த உறவுளைப் பேணி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten