[ ஞாயிற்றுக்கிழமை, 09 நவம்பர் 2014, 11:33.36 AM GMT ]
இரு நாடுகளுக்கும் இடையில் வரலாற்று ரீதியாகவும் கலாச்சார ரீதியாகவும் மிக நெருங்கிய நீண்டகால தொடர்புகள் இருந்து வருகின்றன எனவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தியாவின் மணிபால் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
செவ்வாய் கிரகத்திற்கு செயற்கை கோள் ஒன்றை அனுப்பியதன் மூலம் இந்தியா தனது திறமையை முழு உலகத்திற்கு பறைசாற்றி உள்ளதாகவும் பிரதமர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் ஜயரத்னவிற்கு திருப்பதியில் பொன்னாடை போர்த்தி வரவேற்பு
பிரதமர் டி.எம். ஜயரத்னவிற்கு திருப்பதியில் பொன்னாடை போர்த்தி வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள பிரதமர் ஜயரத்ன ஆந்திராவில் அமைந்துள்ள திருப்பதி வெங்கடேஸ்வர ஆலயத்திற்கு விஜயம் செய்துள்ளார்.
குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளுடன் பிரதமர் ஆலயத்திற்கு விஜயம் செய்துள்ளார்.
பிரதமர் சுமார் பத்து நிமிடங்கள் வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தார்.
பிரதமர் தங்கியிருந்த பத்மாவதி இல்லத்திற்கு கூடுதலான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
பிரதமரின் இந்திய விஜயத்திற்கு தமிழகத்தைச் சேர்ந்த சில கட்சிகள் எதிர்ப்பை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாக பிரதமருக்கு பாரியளவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
http://www.tamilwin.com/show-RUmszBTdKXeq0.html
த.தே.கூட்டமைப்பினர் மலையகத்துக்கு தீண்டத்தகாதவர்கள் அல்ல: இராதாகிருஷ்ணன்
[ ஞாயிற்றுக்கிழமை, 09 நவம்பர் 2014, 12:28.15 PM GMT ]
கொஸ்லாந்த, மீரியபெத்த பகுதிக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் விஜயம் மேற்கொண்டமை தொடர்பில் ஊடகங்களில் வெளியான கருத்துக்களுக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
எமது நாட்டில் சுனாமி ஏற்பட்ட பொழுது எந்த உணர்வுடன் மலையக மக்கள் வடக்குக்கும் ஏனைய பகுதிகளுக்கும் சென்று மனிதாபிமான உதவிகளை செய்தார்களோ அதே மனிதாபிமான ரீதியில்தான் தமிழ் தேசிய கூட்டமைப்பு கொஸ்லாந்த, மீரியபெத்த பகுதிக்கு விஜயம் செய்தார்கள்.
இதில் எந்தவிதமான அரசியல் நோக்கமும் அவர்களிடம் இருக்கவில்லை என்பதை என்னால் தெளிவாக கூற முடியும்.
தமிழத் தேசிய கூட்டமைப்பு கொஸ்லாந்த மீரியபெத்தைக்கு விஜயம் செய்தபோது நானும் அவர்களுடன் கலந்து கொண்டேன். அவர்கள் என்னிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இதில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்கள்.
அவர்களுக்கு அரசியல் ரீதியான அல்லது இந்த விஜயத்தில் வேறு எண்ணங்கள் இருந்தால் என்னையோ அல்லது ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனையோ அழைக்காமல் சென்றிருக்கலாம்.
இதேவேளை, இவ்விஜயத்தின்போது எந்தவிதமான அரசியலையும் அவர்கள் பேசவில்லை.
எமது மறைந்த தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் வடக்குக்கு தலைமைதாங்கி இருக்கின்றார்.
அவர் உயிருடன் இருக்கும் பொழுது அந்த மக்களுக்காக குறல் எழுப்பி இருக்கின்றார். எனவே அவ்வாறான ஒரு நெருங்கிய உறவு அவர்களுடன் எமக்கு இருந்தது.
எமது மலையக மக்கள் முன்னணியின் மறைந்த தலைவர் அமரர் பெரியசாமி சந்திரசேகரன் அமைச்சராக இருந்து கொண்டும் வட மாகாண மக்களுடன் நல்ல ஒரு உறவை பேணிவந்தார்.
எனவே இனியாவது நாம் அனைவரும் ஒற்றுமையாக செயற்பட முன்வர வேண்டும். இன்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எவ்வாறு அவர்களுடைய பிரச்சினைகளை சர்வதேசத்துக்கு கொண்டு சென்றுள்ளதோ, அதேப்போல நாமும் எமது பிரச்சினைகளை சர்வதேசத்துக்கு கொண்டு செல்லவேண்டும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் இந்த விஜயத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏற்றுக் கொண்டுள்ள பொழுது மற்றவர்கள் அலட்டிக் கொள்வது ஏனென்று புரியவில்லை எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBTdKXeq2.html
ஜனாதிபதித் தேர்தல் செலவு 275 கோடி ரூபா!
[ ஞாயிற்றுக்கிழமை, 09 நவம்பர் 2014, 01:58.38 PM GMT ]
ஜனாதிபதித் தேர்தல் அவசர தேர்தலாக நடத்தப்படவிருப்பதால் அதற்கான நிதி இதுவரை ஒதுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
எனினும் ஜனாதிபதித் தேர்தலுக்கு தேவையான நிதியை தேர்தல் ஆணையாளருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் பிரகாரம் ஒதுக்கி கொள்ள முடியும் என தேர்தல் ஆணையாளர் அலுவலகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில், தேர்தல் நடைபெறும் தினம் அறிவிக்கப்பட்டதும் அதற்கு தேவையான பணத்தை திறைசேரியில் இருந்து ஒதுக்கி கொள்ள முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.
2010ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலுக்கு 195 மில்லியன் ரூபா மாத்திரம் செலவானதாக தெரிவிக்கப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmszBTdKXeq3.html
பொலிஸ் அதிகாரியாக நடித்த பிக்கு கைது
[ ஞாயிற்றுக்கிழமை, 09 நவம்பர் 2014, 02:14.27 PM GMT ]
குறித்த பிக்கு காற்சட்டை,சேர்ட் அணிந்த நிலையில் வீதியில் நின்று வாகன சாரதிகள் சிலருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அவரின் கைப்பையில் காவியுடை காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பிக்கு, தான் பாணந்துறை குற்றப் புலனாய்வுப் பொலிஸ் பொறுப்பதிகாரி என்றும் தெரிவித்துள்ளார்.
மேற்படி சந்தேக நபரின் நடமாட்டம் தொடர்பாக கலேவல பொலிசாருக்குக்கு கிடைத்த தகவலையடுத்து அவர் கைதாகி உள்ளார்.
இவர் பாணந்துறைப் பிரதேசத்திலுள்ள பௌத்த மத குரு என விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszBTdKXeq4.html
தமிழர் புறக்கணிப்பும் முஸ்லிம் மாவட்டக் கோரிக்கையும் ஏற்புடையதா?
[ ஞாயிற்றுக்கிழமை, 09 நவம்பர் 2014, 02:16.11 PM GMT ]
இதுகுறித்து கடந்த வாரம் நாடாளுமன்றத்திலும் விவாத்திற்கு வந்தது. இனரீதியாகவும் மதரீதியாகவும் நாட்டைத் துண்டாட முடியாது என்றும் மு.காங்கிரஸின் கோரிக்கையானது நாட்டில் பதற்றத்தை உருவாக்கிவிடும் என்றும் அரசாங்கம் மு.கா.சின் கோரிக்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
அரசாங்கத்தின் சார்பில் பிரதமர் ஜெயரட்ன தெரிவித்தார். அத்துடன் ஜாதிக ஹெல உறுமயவும் தனது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது.மற்றும் ஐ,தே.க. வும் மு.காங்கிரஸின். இந்தக் கோரிக்கையை நிராகரித்துள்ளது.
ஐ.தே.க.வின். நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்சவும் மு.காங்கிரஸின் தனியான நிர்வாக மாவட்டக் கோரிக்கையானது நாட்டை பிரிக்க எடுக்கும் முயற்சியாகும் என்று தெரிவித்தார்.
முஸ்லிம் காங்கிரஸ் கோரும் கரையோர மாவட்டம் என்கின்ற முஸ்லிம் மாவட்டம் பற்றி ஏற்கனவே “முஸ்லிம் மாவட்டம் என்கின்ற எட்டாக் கனிக்கு கொட்டாவி விடும் முஸ்லிம் காங்கிரஸ்” என்னும் தலைப்பில் கடந்த மாதம் எழுதியிருந்தோம்.
சிங்கள மக்கள் மத்தியில் முஸ்லிம் ஈழம் என்கின்ற ஒரு புரளியை உருவாக்கும் என்றும் எழுதியிருந்தோம். சிங்கள மக்கள் மத்தியில் மு.கா முஸ்லிம் ஈழம் கேட்கின்றார்கள் என்றுதான் சிங்கள நாளேடுகள் தெரிவிக்கின்றன.
இப்போது தமிழ் மக்களைப் புறக்கணித்து விட்டு உள்நோக்கம் கொண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பற்றிப் பார்ப்போம்.கல்முனை மாநகர சபையில் அண்மையில் ஒரு தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளதானது தமிழ் மக்கள் மத்தியில் ஒருவித அசைவுகளையும் பெரும் எதிர்ப்புக்களையும் சிங்கள இனவாதிகள் மத்தியில் முஸ்லிம் ஈழம் என்கின்ற ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அதுதான் கரையோர மாவட்டப் பிரேரணை.
அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில். சம்மாந்துறை. கல்முனை ஆகிய தொகுதிகளை உள்ளடக்கிய கரையோர மாவட்டத்தை அரசு தாமதமின்றி பிரகடனப்படுத்த முன்வர வேண்டுமெனக் கோரும் பிரேரணையொன்று கடந்த மாதம் கல்முனை மாநகர சபையில் முஸ்லிம் காங்கிரசின் 7 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நான்கு உறுப்பினர்களும் பிரேரணையை எதிர்த்து வாக்களித்துள்ளனர்.
முஸ்லிம் மாவட்டத்தை அரசு வழங்காது என்று மு.கா.க்கும் நன்றாகத் தெரியும் ஆனாலும் மு.கா. எதிர்வரும் பொதுத் தேர்தலில் அம்பாறை முஸ்லிம் மக்களிடம் வாக்கு வேட்டைக்கு வரும் போது இந்தமாவட்டக் கோரிக்கைய வைத்து ஒரு நாடகட் ஆடலாம்.
உள்நோக்கம் கொண்ட பிரேரணை.
அம்பாறை மாவட்டத் தமிழ் மக்கள் அஞ்சுவது போன்று முஸ்லிம் மாவட்டம் என்பதை இந்த அரசு கொடுக்காது.அப்படித்தான் கிடைத்தாலும் அந்த முஸ்லிம் மாவட்டத்தினால் முஸ்லிம் தமிழர்களுக்கு எவ்விதமான நன்மையும் கிடைக்கப் போவதில்லை.
குறிப்பாக முஸ்லிம் காங்கிரஸ் மூன்று எம்பிக்களைப் பெறும் நோக்கம் கொண்டது. விசேடமாக இந்தக் கரையோர மாவட்டத்தினால் அம்பறை மாவட்ட தமிழ் மக்கள் ஒதுக்கப்பட்டு அம்பாறையில் ஒரு சிறுபான்மை மக்களாக தமிழ் மக்கள் கொண்டு வரப்படுவார்கள்.
இது மரத்தால் விழுந்தவனை மாடு மிதித்த கதை மாதிரியில்லையா. 30 ஆண்டு காலம் போராட்டம் நடத்திச் செத்து மடிந்த தமிழன் இழக்கக் கூடாத அத்தனையும் இழக்க வேண்டும் மு.கா மட்டும் நோகாமல் நொங்கு சாப்பிட வேண்டும்.இது எந்த ஊர் நியாயம்.
30 ஆண்டுகளாக சிங்களவர்களாலும் 1990 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இன்று வரையும் சில முஸ்லிம் அரசியல் வாதிகளாலும் சில முஸ்லிம் மக்களாலும் ஒதுக்கப்பட்டு வந்த தமிழர்கள் இப்போது அம்பாரை முஸ்லிம் அரசியல்வாதிகளால் ஓரங்கட்டப்பட்டு வருகின்றார்கள்.
இந்த தன்னிச்சையான தீர்மானங்களையும் முஸ்லிம் காங்கிரசின் முடிவுகளையும் சமாதானம் விரும்புகின்ற எவரும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.இது நாம் விரும்புகின்ற தமிழ் முஸ்லிம் இன உறவுக்கு ஆப்பு வைக்கின்ற தீர்மானமில்லையா.
இது திட்டமிட்டுச் செய்கின்ற சதி மாதிரியில்லையா. அம்பாறையில் வாழ்கின்ற முஸ்லிம்கள் மட்டும்தான் முஸ்லிம்களா. வடக்கில் ,திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் சிறுபான்மையாக வாழ்கின்ற முஸ்லிம்களின் நிலையென்ன. இது குண்டாஞ்சட்டிக்குள் குதிரையோட்டும் செயல் மாதிரியில்லையா?
கரையோர மாவட்டக் கோரிக்கை
இதுவரை காலமும் கரையோர மாவட்டம் என்று சொல்லி வந்த மு.கா. இப்போது முஸ்லிம் கரையோர மாவட்டம் என்ற புதிய உசுப்பேற்றலை ஆரம்பித்துள்ளார்கள். இது முஸ்லிம் ஈழம் மாதிரி இல்லையா. இது ஒரு நிறைவேறாத நப்பாசை மாதிரியில்லையா. இந்த முஸ்லிம் ஈழத்திற்கு சில அறிவிலிகள் ஆடுவார்கள்.
இது சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி என்று அமையப் போகின்றது.இந்த முஸ்லிம் மாவட்டம் என்பதன் எதிரொலி முஸ்லிம் பிரதேசம் எங்கும் சிங்களப் பிரதேச செயலாளர்கள் நியமிக்கப்படலாம். இதை இப்படியும் சொல்லலாம்; தவளை தன்வாயால் கெடுமாம்.
இது நடக்கும் விடயமா. ஏற்கனவே பொதுபலசேனா முஸ்லிம்களுக்கு எதிராக ஒரு யுத்தமே நடத்தி வரும் நிலையில் முஸ்லிம் மாவட்டம் அல்ல முஸ்லிம் ஈழம் என்று ஒரு தேவையில்லாத வம்பையும் புரளியையும் கிளப்பி விட்டுள்ளார்கள்.
நாம் முன்வைக்கும் சவால்
மு.கா இந்த அரசில் மு.கா.மதிப்பும் மரியாதையுமாக இருந்தால் அம்பாரைக்கு ஒரு தமிழ் பேசும் அரச அதிபரை கொண்டு வர முடியுமா.? பொதுபல சேனாவின் சிபார்சின் பெயரில் கல்முனையின் வரலாற்றிலே முதன் முதலாக நியமிக்கப்பட்டுள்ள சிங்கள பிரதேசச் செயலாளரை இடமாற்றிவிட்டு தமிழ் பேசும் செயலாளர் ஒருவரைக் கொண்டு வர முடியுமா?
அட்டாளைச்சேனை பிரதேசத்தின் ஒலுவில் ஏழை விவசாய மக்களின் பறிக்கப்பட்ட விவசாயக் காணிகளைப் பெற்றுக் கொடுக்க முடியுமா? அண்மையில் இராணுவத்தால் பறிக்கப்பட்டுள்ள ஒலுவில் அஷ்ரப் நகர் மக்களின் குடியிருப்புக் காணிகளை மீட்டுத்தர முடியுமா?
முஸ்லிம் காங்கிரஸ் முதலமைச்சர் பதவி
மு.கா செயலர் சொல்கின்றார் முஸ்லிம் முதலமைச்சர் முக்கியமல்ல முஸ்லிம் கரையோர மாவட்டம் தான் வேண்டுமாம்.கடந்த இரண்டு மாகாண சபைத் தேர்தல்களிலும் மு. கா. தலைவர் முதலமைச்சர் பதவிக்காக பல வகையான முயற்சிகளை மேற்கொண்டார்.
அப்போது இந்த செயலருக்கு அந்த முதலமைச்சர் பதவி என்பது தனிநபரை திருப்திப்படுத்தும் பதவி என்று தெரியவில்லையா?முதலமைச்சர் பதவி என்பது எதுவும் சாதிக்க முடியாது என்று அப்போது இவருக்குத் தெரியவில்லையா. கிழக்கில் மு.கா முதலமைச்சர் என்னும்; பொம்மை முதல்வர் ஆட்சியை ஒளிப்போம் என்றுதானே கிழக்கு மாகாணம் முழுவதும் பிரச்சாரம் செய்தீர்கள்.
அஷ்ரப்பின் கனவு என்றெல்லாம் மக்களை ஏமாற்றினீர்கள்.தமிழ் கூட்டமைப்பு முதல்வர் பதவியைத் தருகின்றோம் என்று பகிரங்க அழைப்பு வந்த போதும் அதை நிராகரிக்கும் போது வெறும் பொம்மை முதல்வர் என்று தெரியவில்லையா?சீ இந்தப் பழம் புளிக்கும் என்ற நரிக் கதை மாதிரியில்லையா?
இரண்டரை வருடங்கள் முடிந்;த பின்பு முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மாகாண முதலமைச்சரைப் பெறும் என்று அரசிடம் ஒப்பந்தம் செய்துள்ளதாக இன்று வரையும் மு.கா. சொல்லி வருகின்றது.ஆனால் அப்படியொரு ஒப்பந்தம் இல்லவே இல்லையென்று அரசு சொல்கின்றது.
ஆனால் இதன் மூலம் ஒன்று மட்டும் தெளிவாகின்றது இனிமேல் மு.கா கிழக்கு மாகாண முதலமைச்சர் பற்றி அரசிடமோ அல்லது வேறு எங்குமோ வாய் திறக்காது. எதிர்வரும் பெப்ரவரியில் கிழக்கு முதலமைச்சரின் இரண்டரை ஆண்டு பதவிக் காலம் முடிவடைகின்றது.
அப்போது இந்த முதலமைச்சர் பதவி பற்றிப் பார்ப்போம். இனிவரும் காலங்களில் முஸ்லிம் மாவட்டம் என்ற முஸ்லிம் ஈழத்தைக் கோரி நிற்பார்கள்.
ஹஸன் அலிக்கு முஸ்லிம் கரையோர மாவட்டம் வேண்டுமாம்.அதற்கு முன்னோடியாக கல்முனையில் மேலதிக அரச அதிபர் பணிமனையாம். இப்போது புதிய புரளியொன்றாக இந்த முஸ்லிம் கரையோரக் கச்சேரி என்ற வித்தையை எடுத்து விட்டுள்ளார்கள்.
ஏற்கனவே இயங்கிய மேலதிக அரசாங்க அதிபர் பணிமனை
ஏற்கனவே சுனாமி நிவாரணப் பணிகளுக்காக 2005 ஆம் ஆண்டு கல்முனையில் தனியார் கட்டிடமொன்றில் இயங்கி வந்த மேலதிக கரையோர கச்சேரியை மூடிவிடும்படி கடந்த 2009 ஆம் ஆண்டில் அரச உத்தரவொன்று கிடைத்ததனால் கல்முனை கரையோர மேலதிக கச்சேரி மூடப்பட்டு விட்டது.
சுனாமி பாதிப்புக்களைக் கவனிப்பதற்க்காக பொத்துவில் தொட்டு பெரிய நீலாவணை பகுதிகளிலுள்ள சுனாமி பாதிப்புக்களை மேற்பார்வை செய்வதற்காகவே கல்முனை மேலதிக அரசாங்க அதிபர் ஏற்படுத்தப்பட்டது.
அட்டாளைச்சேனை பிரதேச செயலாளராகக் கடமையாற்றியவர் மேலதிக அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டார். கல்முனையில் இந்தப் பணிமனை இயங்கியது. தற்போது இந்த மேலதிக கச்சேரி அம்பாறைக் கச்சேரியுடன் மீண்டும் இணைக்கப்பட்டு விட்டது. அதனால் மேலதிக அரசாங்க அதிபராக கடமையாற்றிய இவர் கிழக்கு மாகாண சபைக்குள் சென்றுவிட்டார்.
அதிகாரமில்லாத மேலதிக அரச அதிபர்
மேலதிக அரசாங்க அதிபர் பதவி என்பது ஒரு பிரதேச செயலாளருக்கு இருக்கின்ற அதிகாரம் கூட இல்லை. அப்படிப்பட்ட மேலதிக அரசாங்க அதிபர் என்பது அதில் ஒன்றுமே இல்லை. ஆனால் முஸ்லிம் காங்கிரசுக்கு தில் இருக்குமானால் அம்பாறை மாவட்ட கரையோரக் கச்சேரியை விட இந்த அரசில் அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபராக தமிழ் பேசுபவரை பெற்று ஜெயித்துக் காட்ட வேண்டும்.
இந்த டிமாண்டை கிழக்கு மாகாண ஆட்சி அமைப்பின் போது காட்டியிருக்க வேண்டும். அதைவிட்டு மக்களை ஏமாற்றும் மாயாhலங்கள் காட்டுவதைத் தவிர்க்க வேண்டும். முஸ்லிம்களுக்கு துரோகம் செய்கின்றார்கள் என்பதையும் பகிரங்கமாக ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.
உள்நோக்கம் கொண்டு மு.கா 3 எம்பிக்களைப் பெறும் எண்ணத்தில்தான்; இந்த முஸ்லிம் மாவட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.
கல்முனையில் சிங்கள பிரதேசச் செயலாளர்
இலங்கை சுதந்திரம் அடைந்த பின்பு முதன் முதலாக கல்முனை முஸ்லிம் பிரதேச செயலாளராக சிங்களவர் நியமிக்கப்பட்டுள்ளார். மகாஓயா பிரதேச செயலாளராகக் கடமையாற்றிய மொகான் விக்கிரம ஆராச்சியை பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு கடந்த மாதம் நியமித்துள்ளது.
இது கல்முனை மட்டுமல்ல கல்முனை கரையோரப் பகுதி முஸ்லிம் மக்கள் மட்டுமல்ல தமிழ் மக்களும் அச்சம் அடைந்துள்ளார்கள். வடக்கு மாகாணம் முழுவதம் தமிழ் மக்களின் காணிகளைச் அரசும் அரசின் வகையறாக்களும் அத்து மீறிப் பிடித்துக் கொண்டு சிங்கள மயமாக்கி வருகின்ற நிலையில் கல்முனை முஸ்லிம் பிரதேச செயலாளராக சிங்களவர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதானது கல்முனை பகுதி சிங்கள மயமாக்கலுக்கான ஒரு முன்னேற்பாடு எனலாம்.
அம்பாறை மாவட்ட முஸ்லிம்களின் இதயப்பகுதி கல்முனை. காலம் சென்ற அஷ்ரப்பின் கனவு அம்பாறை கரையோர மாவட்டம். அதாவது பொத்துவில் தொட்டு நாவிதன்வெளி வரையுமான 11 பிரதேச செயலாளர் பிரிவுகளையும் உள்ளடக்கி கல்முனை கரையோர மாவட்டம் உருவாக்குவது. என்ற கோசத்துடன்தான் மு.கா கிளம்பியது. கல்முனை கரையோர மாவட்டம் என்பது மு.காசின் மூன்று எம்பிக்கள் பெறுவது என்ற நப்பாசையில்தான் மீண்டும் இந்தக் கரையோர மாவட்டம் கிளம்பியுள்ளது.
கரையோர மாவட்டம் என்பது அதாவுல்லாவைத் தோற்கடிக்கும் திட்டம்
மு.கா சின் கரையோர மாவட்டம் என்பது தனியான முஸ்லிம் இராஜ்ஜியம் என்ற ஒன்றை அமைத்து மூன்று எம்பிக்களை அடைவது.அதாவது பொத்துவில், சம்மாந்துறை, கல்முனை தொகுதிகளை உள்ளடக்கிய மூன்று எம்பிக்களை அடைவது. அதனால் மு.கா தவிர்ந்த வேறு எவரும் இந்தக் கரையோர மாவட்டத்தில் வெற்றியடைய முடியாத நிலையை உருவாக்குதல். குறிப்பாக அமைச்சர் அதாவுல்லாவை தோற்கடிக்க வைப்பதற்கான திட்டம்தான் மு.கா சின் கரையோர மாவட்டக் கோரிக்கையாகும். மு.கா வுக்கு ஒரு பெருத்த இடைய+றாக பார்க்கப்படுவது அமைச்சர் அதாவுல்லா. அதனால் அதாவுல்லாவை எப்படியாவது தோற்கடிக்கவேண்டும் என்ற நோக்கோடுதான் மு.கா காய்நகர்த்தி வருகின்றது.
அதாவுல்லா எப்போதும் சிங்கள மக்களின் வாக்குகள் மூலமாகத்தான் வெற்றியடைந்து வருகின்றார்.அதாவுல்லாக்கென்று தனது பிரதேசத்தில் சுமார் 25 ஆயிரம் வாக்குகளை வைத்துள்ளார்.மேலதிகமாக சிங்கள மக்களின் மனாப்பை வாக்குகள் மூலமாக தனது வெற்றியை ஊர்ஜிதம் செய்துவருகின்றார்.
இந்த நிலையில்தான் மு.கா சின் அம்பாரை கரையோர முஸ்லிம் மாவட்டக் கோரிக்கையை மு.கா ஆரம்பித்துள்ளது.முஸ்லிம் மாவட்டம் அமையுமானால் அதாவுல்லா வெற்றியடைய முடியாது.அதாவுல்லாவுக்கு ஆப்படிக்கவும் 3 எம்பிக்களைப் பெறவும்தான் இந்தப் புதிய புரளி எடுத்து விடப்பட்டுள்ளது.
தமிழ் மக்களை கடலில் கொண்டு தள்ளி விடுவதா
தமிழ் மக்களின் போராட்டங்களிலும் குருதியிலும் கிடைக்கப்பெற்ற சுகபோகங்களை முஸ்லிம் அரசியல்வாதிகள் அனுபவித்துக் கொண்டு நோகாமல் நொங்கு சாப்பிட்டுக் கொண்டு அம்பாறையில் முஸ்லிம் இராஜ்ஜியம் அமைத்தால் அம்பாரை மாவட்ட தமிழ் மக்களை கடலில் கொண்டு தள்ளிவிடுவதா.
ஏற்கனவே அம்பாரையில் மட்டுமல்ல நாடு முழுவதும் தமிழ் மக்களையும் தமிழ் அரசியலையும் ஒரங்கட்டி ஒதுக்கி வருகின்ற முஸ்லிம் அரசியல்வாதிகள் முஸ்லிம் மாவட்டம் அமைத்தால் தமிழ் மக்களின் கெதி அதோ கதிதான்.அம்பாரையில் மு.கா 3 எம்பிக்களைப் பெறுவதற்காக முஸ்லிம் மாவட்டம் என்ற பூச்சாண்டியை கிளப்பிட்டாங்கய்யா.
முஸ்லிம் மக்களையே ஏலம் போட்டு விற்கின்ற இந்த வியாபாரிகள் முஸ்லிம் மாவட்டத்திற்குள் சிறுபான்மையினமாக தமிழ் மக்களை மாற்றிவிட்டு தமிழ் மக்களையும் விற்று விடுவார்கள்.
இந்த முஸ்லிம் மாவட்டத்திற்கு தமிழ் மக்களின் சார்பாகவோ அல்லது அமைச்சர் அதாவுல்லாவோ அல்லது வேறு எந்தத் தரப்புக்களோ எந்த விதமான ஆதரவும் அளிக்காது. இந்தப் புரளியை மக்கள் நம்பாதீர்கள்.இது எட்டாக்கனிக்கு கொட்டாவி விட்ட நிலைதான்.முஸ்லிம் மாவட்டம் என்ற கோரிக்கை வந்தாலும் தமிழ் மக்களின் ஆசீர்வாத்துடன் பெறலாமேயொழிய சும்மா புதுப்புது வித்தைகளை எடுத்து விடக் கூடாது.கனவிலும் நடக்காத விடயம் இது. மக்களே நம்பாதீர்கள்.
பொதுத் தேர்தலுக்காக விடப்பட்ட புரளி
மு.கா சின் இந்த முஸ்லிம் மாவட்டம் நடக்கின்ற விடயமல்ல. ஆனால் எதிர் வருகின்ற பொதுத் தேர்தலுக்கு அந்தப் புரளியை பயன்படுத்துவார்கள்.தற்போது மு.கா அம்பாரையில் களை இழந்துள்ளது. இப்படிப்பட்ட நிலையில் ஏதாவது ஒரு புரளியை எடுத்து விட வேண்டிய தேவை மு.கா வுக்கு உள்ளது.
அதனால்தான் இப்போது இந்த முஸ்லிம் மாவட்டம் என்ற வித்தையைக் கிழப்பி விட்டுள்ளார்கள்.இந்த வித்தையினால் அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் மிகவும் பாதிக்கப்படக்கூடிய நிலையுள்ளது. அதனால் இந்த வித்தையை தமிழ் மக்கள் ஒரு போதும் விரும்ப மாட்டார்கள்.விரம்பவும் கூடாது.
இன்னும் இன்னும் தமிழ் மக்களின் அடிமடியில்தான் இந்த முஸ்லிம் அரசியல்வாதிகள் கைவைக்கின்றார்கள்.மரத்தால் விழுந்தவனை மாடு மிதித்த கதையாக தமிழ் மக்களின் நிலையுள்ளது.வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்று அம்பாரையில் தமிழ் மக்களை ஒதுக்கி ஓரங்கட்டிவிட்டு முஸ்லிம் இராஜ்ஜியம் அமைக்கப் போகின்றார்களா அல்லது முஸ்லிம் ஈழம் அமைக்கப் போகின்றார்களா. என்ன வேசம் இது. என்ன கோசம் இது.இதையும் முஸ்லிம் அறிவிலிகள் நம்புவார்களா?
முஸ்லிம்களுக்கென்று தனியான ஒரு தீர்வு ஒரு போதும் கிடைக்கப்; போவதில்லை. தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வு அமையும் போது மட்டுமே தமிழ் மக்கள் சார்ந்த தீர்வொன்றை எதிர்பார்க்கலாம் அதைவிட்டு முஸ்லிம் ஈழம் முஸ்லிம் மாவட்டம் என்பதெல்லாம் சும்மா டூப்பு அம்பாறை மாவட்ட முஸ்லிம் மக்களே நம்பாதீர்கள் நம்மை ஏமாற்றிப் பிழைப்பதற்கு இந்த வித்தையை எடுத்து விட்டுள்ளார்கள்.
ஏமாந்தது போதும். இனிமேலும் நாம் தமிழ் மக்களை ஒதுக்கிவிட்டு அல்லது ஓரங்கட்டிவிட்டு எதுவும் நடக்காது.தமிழும் தமிழ் மக்களும் எமது வாழ்வோடு கலந்து விட்ட விடயம் நம்மைப் பிரிக்க எடுத்து விடப்பட்ட மோசடி.
விரைவில் நடக்கவுள்ள பொதுத் தேர்தலில் முஸ்லிம் வகையறாக்கள் மக்களிடம் வாக்கு வேட்டைக்காக வரும் போது எங்கே மு.கா சின் முதலமைச்சர் என்று மக்கள் கேட்டால் அது தனி மனிதனைக் கௌரவப்படுத்தும் பதவி அந்தப் பதவியினால் எதுவும் சாதிக்க முடியாது. ஆனால் முஸ்லிம் மாவட்டம் தான் வேண்டும் என்று ஒரு வித்தையைக் காட்டவுள்ளார்கள். இதை அம்பாறை மாவட்டத்தில் சில அறிவிலிகள் நம்புவார்கள். இந்த வகையறாக்கள் வரும் போது நாரே தக்பீர் என்பார்கள் முஸ்லிம் மாவட்டம்; கிடைத்து விடும்.
காற்றில் பறப்போம்,மின்னலைப் பிடிப்போம்,கடலில் நடப்போம் என்பார்கள் இந்த முஸ்லிம் காங்கிரஸ் வகையறாக்கள்.அதையும் நம்மாளுங்க நம்புவார்கள்.நம்புங்க நல்லா நம்புங்க. ஏமாளிகளாக முஸ்லிம் மக்கள் உள்ளவரை முஸ்லிம் அரசியல்வாதிகள் எம்மை ஏமாற்றிக் கொண்டே இருப்பார்கள்.
முஸ்லிம் மக்கள் மாறாதவரை இந்த வக்காலத்துக் கூட்டம் இப்படித்தான் எம்மை ஏமாற்றுவார்கள். இறுதியாக தமிழ் கூட்டமைப்புடன் முஸ்லிம் காங்கிரஸ் இணையக் போகின்றது என்ற வித்தையைக் காட்டுவார்கள் நாளை உயர்பீடம் கூடவுள்ளது முடிவெடுப்போம் என்பார்கள் கடைசியில் அரசுக்கு ஆதரவு அளிப்பார்கள்.நா…நா….ம் கண்டது பொய் நாடகம்.
எம்.எம்.நிலாம்டீன்.
mmnilamuk@gmail.com
mmnilamuk@gmail.com
http://www.tamilwin.com/show-RUmszBTdKXeq5.html
Geen opmerkingen:
Een reactie posten