தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 12 november 2014

சூழலுக்கு ஏற்ப சூளுரைப்பதே சூரத்தனம்!


இலங்கையின் நீதித்துறை காட்டிக்கொடுப்புக்கு உள்ளாகியுள்ளது! ஹிட்லர் ஷீரோவாகி போனார்
[ புதன்கிழமை, 12 நவம்பர் 2014, 12:24.48 AM GMT ]
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸும் இலங்கையின் அரசியல் அமைப்பை பாதுகாப்போம் என்ற உறுதிமொழிக்கு இணங்கவே சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர்.
எனினும் நடப்பு ஜனாதிபதி மூன்றாவது தடவையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடலாம் என்று மொஹான் பீரிஸ் வழங்கியுள்ள தீர்ப்பு மூலம் அரசியல் அமைப்பு கடுமையாக மீறப்பட்டுள்ளது.
மொஹான் பீரிஸை பொறுத்தவரையில் அவர் இலங்கையின் பிரதம நீதியரசருக்கு வெற்றிடம் இல்லாத நிலையில் முன்னாள் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவை வெளியேற்றிவிட்டு பதவியில் அமர்த்தப்பட்டவர்.
எனவே அவரின் தலைமையிலான நீதியரசர் குழுவினால் வழங்கப்படும் எந்தத் தீர்ப்பும் வலுவற்றதாகவே கருதப்படவேண்டும். இல்லையேல் மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் உயர்நீதிமன்றத்தில் மதிப்பு இல்லாமல் போய்விடும்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை பொறுத்தவரையில் அவர் இரண்டாவது தடவை பதவிக்கான தேர்தல் பிரசாரத்தின் போது 3வது தடவையும் தாம் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட மக்களிடம் அனுமதி கோரவில்லை.
பதவிக்கு வந்த பின்னரே அவர் 18வது அரசியலமைப்பு ஏற்படுத்தி அதன் மூலம் மூன்றாம் முறை தேர்தல் போட்டிக்கும் தயாரானார்.
எனவே அது ஒரு சட்டத்துக்கு புறம்பான செயல் மாத்திரமல்ல. அரசியலமைப்பு மீறும் செயலாகும்.
இந்தநிலையில் ஜனாதிபதிக்கான பதவிக் காலம் முடிவடைய இன்னும் இரண்டு வருடங்கள் இருக்கையில், ஜனாதிபதி தேர்தல் ஒன்றை நடத்துவது, சிந்தனையுள்ள பொதுமக்களை ஏமாற்றும் செயலாகும்.
ஜனாதிபதி மூன்றாவது தடவையாக போட்டியிடலாமா? என்று உயர்நீதிமன்றத்திடம் விளக்கம் கோரிய போது சட்டத்தரணிகள் சங்கத்துக்கு எதிர்வாதத்தை முன்வைக்க அனுமதி வழங்கப்படவில்லை. இது ஏற்கனவே வரப்போகின்ற தீர்ப்பை அரசாங்கமும் பிரதம நீதியரசரும் தீர்மானித்து விட்டனர் என்பதையே சுட்டிக்காட்டுகிறது.
ஜெர்மனின் வரலாற்றில் ஹீரோவாக போற்றப்பட்ட அடொல்ப் ஹிட்லர், தமது பிழையான நடத்தலால் ஷீரோவாகி போனமையை யாவரும் அறிவர்.
அதேநேரம் தற்போது உயிருடன் உள்ள பர்கினோ பாஸோ மூன்றாம் தடவை ஜனாதிபதியாக விரும்பி இன்று நாட்டில் இருந்து வெளியேறி வாழவேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது.
அதற்கு எதிர்மாறாக இலங்கையின் நட்பு நாடான கியூபாவின் தலைவர் பிடல் காஸ்ரோ,  உரிய நேரத்தில் தமது பதவியில் இருந்து விலகியதன் மூலம் இன்று தேசிய தலைவராக போற்றப்படுகிறார்.
இவ்வாறு கொழும்பு டெலிகிராப் இணையத்தளம் தெரிவித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszBSWKYnu1.html


சூழலுக்கு ஏற்ப சூளுரைப்பதே சூரத்தனம்!
[ புதன்கிழமை, 12 நவம்பர் 2014, 01:25.38 AM GMT ]
சூழலுக்கு ஏற்ப சூளுரைப்பதே இன்றைய சூழலில் சூரத்தனம். இல்லை என்றால் சுத்த முட்டாள் என்று பட்டம் கட்டிவிடுவார்கள்' என்று உணர்ச்சி மிகுந்த, உறுதிமிக்கக் குரலில் கூறினார், இலங்கை வடமாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன்.
நாங்கள் பேசும் பேச்சுகளும் உங்கள் கேள்விகளுக்கு நாங்கள் அளிக்கும் பதில்களும் எம்மை மட்டும் அல்ல, எமது வடமாகாண சபையையும் பாதிக்கக்கூடும் என்பதை இங்கிருக்கும் நீங்கள் மறக்கக் கூடாது.
அதாவது, உணர்ச்சிபூர்வமான எமது பேச்சுகளை வைத்து எமக்குப் பயங்கரவாத பூச்சைப் பூசி, எமது வடமாகாண சபையைக் கலைக்கவும் எமது மத்திய அரசாங்கம் தயங்காது.
ஒன்றரை லட்சம் படை வீரர்கள் முகாம் இட்டிருக்கும் இடத்தில் அவர்களை பாதிக்கும் கருத்துகளை நாம் எடுத்து இயம்பும் போது மிக்க கவனம் அவசியம்.
அந்த நிதானத்தை வைத்து நாம் கையாலாகாதவர்கள் என்ற கருத்தைப் பரப்பி வராதீர்கள்.
சூழலுக்கு ஏற்ப சூளுரைப்பதே இன்றைய சூழலில் சூரத்தனம்.
இல்லை என்றால் சுத்த முட்டாள் என்று பட்டம் கட்டிவிடுவார்கள்' என்று உணர்ச்சி மிகுந்த, உறுதிமிக்கக் குரலில் கூறினார், இலங்கை வடமாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன்.

மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் (பி.யூ.சி.எல்) நிறுவனர்களில் ஒருவரான கே.ஜி.கண்ணபிரான் நினைவுச் சொற்பொழிவு கடந்த 9-ம் தேதி சென்னை தி.நகர் வித்யோதயா பள்ளி அரங்கில் நடைபெற்றது.
சிறப்பு சொற்பொழிவாளராக அழைக்கப்பட்டிருந்த விக்னேஸ்வரன், 'பாதுகாப்பையும் இறையாண்மையையும் பாதுகாத்தல்' என்ற பொருளில் பேசினார்.
அவரை அறிமுகம் செய்துவைத்துப் பேசிய பி.யூ.சி.எல் மாநிலத் தலைவரான பேராசிரியை சரஸ்வதி, 'வடமாகாண முதல்வராக நீங்கள் தேர்வு செய்யப்பட்டதும் நம்பிக்கையோடு இருந்தோம்.
ஆனால், அங்கு பிரச்சினைகள் தீர்ந்ததாகத் தெரியவில்லை. மாறாகப் பிரச்சினை அதிகரிக்கவே செய்துள்ளது. இதற்கான விளக்கங்களை எதிர்பார்க்கிறோம்' என்றார்.
'குரு பிரம்மா குரு விஷ்ணு குரு தேவோ மகேஷ்வரஹ குரு சாட்சாத் பரப்ரம்மாஹ் தஸ்மை ஸ்ரீ குருவே நமஹ...' என்று பேச்சைத் தொடங்கினார் விக்னேஸ்வரன்.
ஆங்கில உரையை வாசித்து முடிக்க சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேல் ஆனது.
தொடர்ச்சியாக தமிழில் பேசத் தொடங்கியதும், அவரது குரல் சற்று உயர்ந்து ஒலித்தது. கருத்துகளில் நிதானமும் முதிர்ச்சியும் வெளிப்பட்டன.
'எல்லா விதத்திலும் எம்மை இயங்கவிடாது தடுப்பதே அரசாங்கத்தின் குறிக்கோளாக இருக்கிறது.
அதிகாரம் இல்லாத வடமாகாண சபைக்கு ஏன் நீங்கள் தெரிவானீர்கள் என்று கேட்பீர்கள்.
முன்னர் மாகாண சபைத் தேர்தலை நாங்கள் பகிஷ்கரித்ததால், தமிழ் பேசும் பிரதேசமான கிழக்கு மாகாணத்தில் மிகப்பெரிய அளவில் சிங்கள ஊடுருவல்கள் நடந்தன.
நாம் சுதந்திரம் பெறுமுன் 5 சதவிகிதத்துக்கும் குறைவாக இருந்த கிழக்கு மாகாண சிங்கள மக்களின் விகிதாசாரம், 30 சதவிகிதத்தைத் தாண்டியது.
இதே நிலை வடமாகாணத்தைப் பாதிக்கக் கூடாது என்பதாலேயே தேர்தலில் போட்டியிட்டோம். அது நன்மை பயத்துள்ளது.
மக்களின் மனோநிலை இந்தத் தேர்தல் மூலமாக உலகத்துக்குத் தெரியவந்தது. இராணுவத்தின் ஆட்டம் ஓரளவுக்குக் கட்டுப்பாட்டில் உள்ளது.
அப்படி இருந்தும் சிங்கள மக்களைத் தெற்கில் இருந்து கொண்டு வந்து வடமாகாணத்தில் குடியேற்ற அரசாங்கம் சகல நடவடிக்கைகளிலும் இறங்கியுள்ளது.
எனினும் எமது சொற்ப அதிகாரங்களை பயன்படுத்தி அவர்களின் சிங்கள மயமாக்கலுக்கு முட்டுக்கட்டைகளை இட்டு வருகிறோம்.
உங்கள் உணர்ச்சிகளை நாம் புரியாதவர்கள் அல்ல. ஆனால் எமக்குத் தற்போது வேண்டியது உணர்ச்சிகள் அல்ல. உதவிகள் கூட அல்ல. உரிய சட்ட மாற்றமே. ஒற்றை ஆட்சியில் இருந்து மாற்றி அமைக்கப்பட வேண்டும்.
எமது தனித்துவத்தை, சுயநிர்ணய உரிமையை உள்ளடக்கியதாக அரசியல் சட்டம் மாற்றி அமைக்கப்பட வேண்டும். இதனைக் கோருவதற்கும் கொண்டு வருவதற்கும் இந்திய அரசாங்கத்துக்கு தார்மீக உரிமை உள்ளது' என்றார் விக்னேஸ்வரன்.
முதலமைச்சரான பிறகு, அவரது முதல் வெளிநாட்டுப் பயணம் இதுதான்.
நிகழ்ச்சி குறித்து பேராசிரியை சரஸ்வதி கூறியதாவது,
தேர்தலில் பங்கேற்காமல் போராட்டம் பாதிக்கப்படும் என்பது போன்ற விமர்சனங்களுக்கு விக்னேஸ்வரன் சிறப்பாக பதில் அளித்துவிட்டுச் சென்றிருக்கிறார் என்றார்.


http://www.tamilwin.com/show-RUmszBSWKYnu4.html

Geen opmerkingen:

Een reactie posten