தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 12 november 2014

சில வருடங்களில் மரணிக்கப் போகும் வலி வடக்கு மக்கள்! மௌனமாயிருக்கும் அரச அதிகாரிகள்


மங்கள சமரவீர அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளவுள்ளார்!
[ புதன்கிழமை, 12 நவம்பர் 2014, 01:38.11 AM GMT ]
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர அரசாங்கத்துடன் இணைந்து கொள்ள உள்ளார்.
அரசாங்கத் தரப்பிற்கும் மங்கள சமரவீரவிற்கும் இடையில் சிங்கப்பூரில் இரகசிய பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன.
ஆளும் கட்சியில் இணைத்து கொள்வதற்காக மங்கள சமரவீரவிற்கு அரசாங்கம் 1200 மில்லியன் ரூபா பணத்தை வழங்கியதாக சிங்கப்பூர் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எந்தவொரு நிலைமையின் கீழும் அரசாங்கத்தில் இணைந்து கொள்ளத் தயார் என மங்கள சமரவீர அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சிறியதொரு அமைச்சுப் பதவி வழங்கப்பட்டாலும் இணைந்து கொள்ள முடியும் என குறிப்பிட்டுள்ளார்.
துறைமுக அபிவிருத்தி அல்லது வெளிவிவகார அமைச்சுப் பதவியை வழங்கினால் மட்டுமே ஆளும் கட்சியில் இணைந்து கொள்வேன் என மங்கள கோரி வந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தக் கோரிக்கைகளை அரசாங்கம் நிராகரித்திருந்தது.
ஐக்கிய தேசியக் கட்சியின் கீழ் ஜனாதிபதி தேர்தலுக்கு வேட்பாளர் ஒருவரை நிறுத்தக் கூடாது எனவும், பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்த வேண்டுமெனவும் மங்கள சமரவீர ஐக்கிய தேசியக் கட்சியிடம் கோரியிருந்தார்.
இந்தக் கோரிக்கையை ஐக்கிய தேசியக் கட்சி நிராகரித்துள்ளது.
இதனை அடுத்து மங்கள சமரவீர சிங்கப்பூருக்கு சென்றிருந்தார்.
சிங்கப்பூரில் வைத்து ஆளும் கட்சியுடன் இணைந்து கொள்வது குறித்த பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன.
ஆரம்பத்தில் விதித்த நிபந்தனைகளை குறைத்துக்கொண்டு பணக் கொடுக்கல் வாங்கல் அடிப்படையில் மங்கள சமரவீர ஆளும் கட்சியில் விரைவில் இணைந்து கொள்வார் என தெரிவிக்கப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmszBSWKYnu5.html


புஸல்லாவையில் ஆள் கடத்தல்! பொலிஸார் தேடுதல் மற்றும் விசாரணைகள் ஆரம்பம்!
[ புதன்கிழமை, 12 நவம்பர் 2014, 02:19.44 AM GMT ]
புஸல்லாவ நகரத்தில் பகல் வேளையில், ஸ்ரீ கதிர்வேலாயுத ஆலயத்திற்கு அருகில் பாதையில் சென்று கொண்டிருந்த ஒருவரை, கார் ஒன்றில் வந்த ஒருவர் தாக்கி காரினுள் போட்டுக் கொண்டு நுவரெலியாவை நோக்கி சென்ற சம்பவம் ஒன்று நேற்று நிகழ்ந்துள்ளது.
இதைப்பார்த்துக் கொண்டிருந்த பொதுமக்களில் இருவர் இரு முறைப்பாடுகளை 119 க்கு கொடுத்துள்ளனர். அதன்படி ஸ்தலத்திற்கு விரைந்த புஸல்லாவ பொலிஸார் தேடுதல் நடவடிக்கைளில் ஈடுப்பட்டனர்.
அதன்படி நுவரெலியா நோக்கிச் செல்லும் பிரதான பாதை உட்பட கிளை பாதைகளான பெரட்டாசி தோட்டப் பாதை, மாவெல நாவலபிட்டி பாதை, கொத்மலை பாதை போன்ற பாதைகளில் பொலிஸார் விரைந்தனர்.
அத்துடன் அந்தந்த பிரதேசங்களில் காணப்பட்ட பொலிஸ் நிலையங்கள் மற்றும் பொலிஸ் பாதுகாப்பு அரண்களுக்கும் அறிவிக்கபட்டது. ஆனால் சந்தேகத்திற்கு இடமான எவரும் கைதுசெய்யப்படவில்லை.
மேலதிக விசாரணைகளை தற்போது புஸல்லாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் புஸல்லாவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஹேரத் அவர்கள் புஸல்லாவ நகர வர்தகர்களுக்கு அறிவுறுத்தல் கூட்டம் ஒன்றினையும் புஸல்லாவ புனித திருத்துவ கல்லூரியின் பிரதான மண்டபத்தில் மேற்கொண்டிருந்தார்.
அதன் போது அவர் கருத்து தெரிவிக்கையில்,
இன்று நாட்டில் பல்வேறுபட்ட கொள்ளை, கொலை சம்பவங்களை நாளாந்தம் கேள்விப்பட்டு வருகின்றோம். அவ்வாறரான ஒருகொள்ளை சம்பவங்களில் ஒரு புதிய பணக் கொள்ளை புஸல்லாவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்தச் சம்பவம் இரு வர்த்தக வியாபாரிகளை மையமாக வைத்து இடம்பெற்றுள்ளது. இதற்கு எனது பெயரும் பாவிக்கப்ட்டுள்ளது. இனி இவ்வாறான செயற்பாடுகளில் கவனமாக இருப்பதோடு எனது பெயரைக் கூறிக் கொண்டு எனது பொலிஸ் நிலைய அதிகாரி வந்தால் கூட என்னிடம் கேட்டுவிட்டு எதையும் செய்யவும்.
அதேபோல் ஏனையவிடங்களிலும் தொலைபேசி தகவல்ளை நம்பாமல் ஒரு விடயத்தை ஊர்ஜிதபடுத்திவிட்டு உங்கள் கடைமைகளை மேற்கொள்ளவும். அப்போதுதான் இவ்வாறான செயற்பாடுகளில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.
அத்துடன் புஸல்லாவ நகரத்தில் நபர் ஒருவர் அடித்து கடத்தப்பட்டதாக தகவல் கிடைத்து. அதற்காக சந்தேகநபரை தேடிபிடிக்க எடுத்த முயற்சி பயனளிக்கவில்லை. இந்நிலையில் இனி ஏதாவது பிரச்சினைகள் வந்தால் உங்களின் ஒத்துழைப்புக்களை எதிர்பார்க்கின்றோம்.
உங்களுக்கு ஏதும் சந்தேகமானவர்கள் மற்றும் இவ்வாறான நிகழ்வுகளை கண்டால் உடனடியாக எனது தொலைபேசிக்கு அழைக்கவும் (அனைவருக்கும் தொலைபேசி இலக்கம் வழங்கப்பட்டது) என்று கூறினார்.
இந்நிலையில் கடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் நபர் தொடர்பில் அவரைக் காணவில்லை அல்லது கடத்தப்பட்டார் என இதுவரைக்கும் எந்தவிதமான முறைபாடுகளும் பொலிஸாருக்கு பதிவாகவில்லை.
119 க்கு மாத்திரம் அடித்து காரில் கொண்டு போனது பற்றிய புகார் கிடைத்துள்ளது. உறவினர்களின் முறைபாடுகளோ அல்லது அவரை உறவினர்கள் தேடும் பணியில் ஈடுப்பட்டதாக தெரியவில்லை.
குறித்த காரின் இலக்கம் மாத்திரம் கிடைத்துள்ளது. (7151) மேலதிகமான ஆங்கில எழுத்துக்களோ மாகாண குறியீடுகளோ இல்லை. இந்த இலக்கம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் போது அந்த இலக்கத்தில் இலங்கையில் காணப்படும் அனைத்து வாகனங்களினதும் விபரங்கள் வருவதாக தெரியவருகின்றது.
இருந்தும் பொலிஸார் குறித்த கடத்தலில் தொடர்புடைய காரைக் கண்டறிவதில் பூரண விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சில வருடங்களில் மரணிக்கப் போகும் வலி வடக்கு மக்கள்! மௌனமாயிருக்கும் அரச அதிகாரிகள்
[ புதன்கிழமை, 12 நவம்பர் 2014, 02:41.40 AM GMT ]
யாழ் மாவட்டத்தில் உடுவில், ஏழாலை மற்றும் மல்லாகம் பகுதியில் வசிக்கும் மக்களின் வீட்டுக் கிணறுகளில் எண்ணெய்த்தன்மையான பதார்த்தங்கள் பரவி வருவதாக அண்மைக் காலங்களில் செய்திகள் வெளிவருவது நாம் அறிந்ததே.
இதனால் அப்பகுதி மக்கள் குடிப்பதற்கான சுத்தமான நீர் வசதிகள் அற்று அல்லற்படுவதாகவும் சில குடும்பங்கள் தமது உறவினர்களின் வீடுகளிற்கு இடம் பெயர்வதாகவும் அறிய முடிகின்றது.
எண்ணெய்ப் படலமானது நிலத்தடி நீரில் மிக வேகமாகப் பரவி வருவதாகவும் ஏற்கனவே ஆயிரக்கணக்கான மக்கள் எண்ணெய் கலந்த நீரினை உட்கொண்டதனால் பல்வேறு நோய்களிற்கு ஆளாகி இருப்பதாகவும் அறிய முடிகின்றது.
இவ் அனர்த்தத்தினால் நேரடியாக 600 குடும்பங்களைச் சார்ந்த 3000 பொதுமக்கள் வரை பாதிக்கப்பட்டிருப்பதாகவும் மேலும் கோப்பாய் பகுதியில் சில கிணறுகளில் எண்ணெய்க் கசிவுகள் வர ஆரம்பித்திருப்பதாகவும் தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.
இலங்கை மின்சார சபைக்குச் சொந்தமான உதுறு ஜனனி மற்றும் நொதேர்ன் பவர் பிளான்ட் எனும் மின்சாரம் உற்பத்தி செய்யும் பாரிய மின் பிறப்பாக்கிகள் தற்போதும் இயங்கி வருவதாகவும் இவற்றின் மூலம் வெளியேறும் அதிகளவிலான எண்ணெய்க் கழிவுகளே பாதுகாப்பற்ற முறையில் நிலத்தினடியில் விடப்படுவதாகவும் அறிய முடிகின்றது.
சில வருடங்களிற்கு முன்னதாகவே பொதுமக்களாலும் சில சமூக அமைப்புக்களினாலும் இது தொடர்பான முறைப்பாடுகள் எழுத்து மூலம் வழங்கப்பட்டிருந்த போதிலும், உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர். அ. ஜெயக்குமாரன், உடுவில் பிரதேச செயலர் திரு. ச. நந்தகோபால் மற்றும் சுற்றுச் சூழல் அதிகார சபையின் வடமாகாண உதவி ஆயையாளர் திருமதி. விஜிதா சந்திரகுமார் ஆகியோரால் திட்டமிடப்பட்ட முறையில் இம்முறைப்பாடுகளும் இவை தொடர்பான செய்திகளும் இருட்டடிப்புச் செய்யப்பட்டதாக அறிய முடிகின்றது.
இவர்கள் இப்பிரச்சினைகள் தொடர்பாக அக்கறையற்று இருப்பதாகவும் இது தொடர்பான முக்கிய ஆவணங்கள் சிலவற்றை மறைப்பதில் தீவிரம் காட்டுவதாகவும் அறிய முடிகின்றது.
இப்பிரதேச நீர் மாதிரிகளைப் பரிசோதனை செய்த பின்னர் கட்மியம், ஆசனிக் மற்றும் ஈயம் போன்ற உயிராபத்தை ஏற்படுத்தக் கூடிய நச்சுப் பொருட்கள் கலந்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறாக மாசுபட்ட நீரினை அருந்துவதனால் புற்றுநோய், மலட்டுத் தன்மை, பிறப்புரிமைக் குறைபாடுள்ள குழந்தைகள் பிறத்தல் மற்றும் மரணம் என்பன ஏற்பட வாய்ப்புள்ளதாக வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கின்றார்கள்.
அண்மையில் இது தொடர்பான 2 வழக்குகள் மல்லாகம் நீதிமன்றில் தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
sangeerthan13@gmail.com

Geen opmerkingen:

Een reactie posten