தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 22 november 2014

இலங்கையை பிளவுபடுத்த கூட்டமைப்பு மலேசியாவில் இணங்கியது!- திவயின

தண்டனை விதிக்கப்பட்டுள்ள மீனவர்களின் உறவினர்கள் அமைச்சர் டக்ளசுடன் சந்திப்பு
[ சனிக்கிழமை, 22 நவம்பர் 2014, 02:48.19 PM GMT ]
ஜனாதிபதியுடன் கலந்துரையாடி குடாநாட்டு மீனவர்களது விடுதலை தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள யாழ். கடற்தொழிலாளர்களது உறவினர்கள் அமைச்சரின் யாழ். செயலகமான ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைமைச் செயலகத்திற்கு இன்றைய தினம் வருகை தந்திருந்தனர்.
அவர்கள் மத்தியில் கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அமைச்சர் டக்ளஸ் மேலும் கருத்துத் தெரிவிக்கும் போது, கைதிகளது விடுதலை தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுடன் தொடர்ச்சியாகக் கலந்துரையாடி வரும் நிலையில், இன்று காலையும் கலந்துரையாடியுள்ளேன். அதுமட்டுமன்றி, நாளைய தினம் ஜனாதிபதி அவர்களை மீண்டும் நான் சந்திக்கவுள்ள நிலையில், இது விடயம் தொடர்பில் மீண்டும் கலந்துரையாடவுள்ளேன்.
குறித்த இவ்விடயமானது சட்டம், ஒழுங்குடன் சம்பந்தப்பட்டது. ஆகையால், நாளைய கலந்துரையாடலில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடி சாதகமான பதிலைப் பெற்றுத் தருவேன்.
இதுவொரு நீதிமன்றத் தீர்ப்பு என்பதால், இரு நாடுகளுக்கு இடையேயான கைதிகள் பரிமாற்றம் இடம்பெற்ற நிலையில் இந்தியாவுக்குள்ள சட்டம் வேறாகவும், எமது நாட்டிற்குரிய சட்டம் வேறாகவும் உள்ளது. எனது மக்கள் என்ற வகையில் கைதிகளின் விடுதலை தொடர்பில் சாதகமான முடிவைப் பெற்றுத் தருவேன் என்றும் சுட்டிக்காட்டினார்.
இதனிடையே, அமைச்சரின் அலுவலகப் பிரதான வாயிலுக்கு வருகை தந்திருந்த கடற்தொழிலாளர்களது உறவினர்கள், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவைக்கண்டதும் கதறி அழுது, தமது உறவினர்களை விடுதலை செய்வதற்கு நடவடிக்கையினை எடுக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.
http://www.tamilwin.com/show-RUmszBRWKYgs5.html

பாப்பரசரின் இலங்கை விஜயத்தில் மீண்டும் சர்ச்சை!
[ சனிக்கிழமை, 22 நவம்பர் 2014, 02:37.32 PM GMT ]
பரிசுத்த பாப்பரசர் முதலாவது பிரான்ஸிஸ் இலங்கைக்கு வருகைத்தரும் தினத்துக்கு நெருக்கமான நாளில், ஜனாதிபதி தேர்தல் தினம் குறிக்கப்படும் என்று தாம் எதிர்ப்பார்க்கவில்லை என இலங்கை கத்தோலிக்க சபை தெரிவித்துள்ளது.
பதுளை பேராயர் வணக்கத்துக்குரிய வின்ஸ்டன் பெர்ணான்டோ இதனை தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே பாப்பரசர் வருகையின் 10 நாட்களுக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என்ற எதிர்ப்பார்ப்பு நிலவியது.
குறித்த 10 நாட்களுக்குள் நாட்டில் இயல்பு ஏற்படும் என்ற அடிப்படையிலேயே இந்த திகதி நிர்ணயிக்கப்பட்டது. எனினும் தேர்தல் திணைக்களத்தின் புதிய அறிவிப்பு குறித்து வத்திக்கான் கவனம் செலுத்தியுள்ளதாக பதுளை பேராயர் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே பாப்பரசரின் விஜயம் இறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் தற்போதைய அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ப வத்திக்கானின் இறுதித் தீர்மானம் வெளியிடப்படும் என்று பதுளை பேராயர் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBRWKYgs4.html
இலங்கையை பிளவுபடுத்த கூட்டமைப்பு மலேசியாவில் இணங்கியது!- திவயின
[ சனிக்கிழமை, 22 நவம்பர் 2014, 02:51.59 PM GMT ]
இலங்கையை இரண்டாக பிளவுபடுத்தி ஈழ நாட்டை உருவாக்க வேண்டும் என்ற யோசனைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பா.உ. சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் ஆகியோர் இணக்கம் தெரிவித்த சம்பவம் குறித்து அரசாங்கம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக சிங்கள வார பத்திரிகை தெரிவித்துள்ளது.
மலேசியாவில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் இந்த யோசனை நிறைவேற்றப்பட்டுள்ளதுடன், யோசனைக்கு இவர்கள் இணங்கியதாக அங்குள்ள இலங்கை தூதரக அதிகாரி ஒருவர் அரசாங்கத்திற்கு அறிவித்திருந்தார் என திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
ஈழ யோசனைக்கு இணங்குவது இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தை மீறிய செயல் அரசாங்கத்தின் உயர்மட்டம் தெரிவித்துள்ளது.
ஈழ நாட்டை உருவாக்க ஐக்கிய நாடுகளின் தலையீட்டில் கீழ் வடக்கு, கிழக்கில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனவும், வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர் தமிழர்களும் வாக்களிக்க இடமளிக்கப்பட வேணடும் என யோசனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தவிர இலங்கையின் அரசின் அரசியல் தலைவர்கள் மற்றும் இராணுவ அதிகாரிகளின் வெளிநாட்டு பயணங்களை தடைசெய்ய வேண்டும் எனவும் ஜெனிவாவில் தற்போது நடைபெறும் இலங்கைக்கு எதிரான விசாரணையில் தமிழர்களின் இனப்படுகொலை பற்றிய விசாரணையும் உள்ளடக்கப்பட வேண்டும் எனவும் இந்த மாநாட்டில் யோசனை நிறைவேற்றப்பட்டது.
வடக்கு மாகாண ஆளுநர் ஜீ.ஏ. சந்திரசிறியின் அனுமதியின்றியே அனந்தி சசிதரன் மலேசியாவில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டதாக அரசாங்கத்திற்கு தெரியவந்துள்ளது எனவும் திவயின குறிப்பிட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszBRWKYgs6.html


Geen opmerkingen:

Een reactie posten