[ சனிக்கிழமை, 22 நவம்பர் 2014, 04:02.59 PM GMT ]
இது தொடர்பாக அவர் இன்று ஊடகங்களுக்கு அறிக்கையொன்றை அனுப்பியுள்ளார்.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி வாய்ப்பு இருந்தும் நாட்டின் நலன் கருதி ரணில் விக்கிரமசிங்க தனது வாய்ப்பை விட்டுக் கொடுத்துள்ளார்.
அதன் மூலம் உரிய நேரத்தில் பொருத்தமான முடிவை எடுத்து தனது அரசியல் சாணக்கியத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
தான் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெறுவதைப் பார்க்கிலும் சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரை களமிறக்கி, எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பதில் ரணில் வெற்றி கண்டுள்ளார்.
இது அவரது சாணக்கியத்தை மட்டுமன்றி நேர்மையையும் தியாகத்தையும் வெளிப்படுத்துகின்றது.
இதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன் என்றும் அதுரலியே ரத்ன தேரரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszBRWKYgtz.html
ஐ.தே.க. முக்கியஸ்தர்கள் ஆளுங்கட்சிக்கு வரவுள்ளனர்! பிரதியமைச்சர் ரோஹண
[ சனிக்கிழமை, 22 நவம்பர் 2014, 03:34.28 PM GMT ]
இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இனிவரும் காலங்களில் சுதந்திரக் கட்சியில் இருந்து யாரும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு தாவும் விடயம் நடக்காது. குறிப்பாக மாத்தளை மாவட்டத்திலிருந்து ஒருவரும் ஆளுங்கட்சியை விட்டு விலக மாட்டார்கள்.
ஆனால் எதிர்க்கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலர் ஓரிரு நாட்களுக்குள் ஆளுங்கட்சியில் இணைந்து கொள்வார்கள். இவர்களில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களும் உள்ளடங்குவர் என்றும் பிரதியமைச்சர் ரோஹண திசாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBRWKYgty.html
சொந்த மக்களை மதிக்காமல் வதைத்த மகிந்த அரசு விட்ட தவறை சிந்திக்கும் சுடலைஞான நேரமிது!
[ சனிக்கிழமை, 22 நவம்பர் 2014, 03:19.05 PM GMT ]
சொந்த மக்களை மதிக்காமலும் இனப் பிரச்சினையை தீர்க்காமல் யுத்தம் என்று முள்ளிவாய்க்காலில் பல லட்சக்கணக்கான சொந்த மக்களை கொலை செய்தும் காணாமல் போக வகை செய்தது மட்டுமன்றி கைது செய்து வைத்ததுடன்,
தண்ணி கேட்ட வெலிவேரிய சிங்கள மக்களையும் கொலை செய்ததுடன், மதவாதத்தை தலைவிரித்தாட விட்டு மதவழிபாட்டுத் தலங்களை உடைக்க வழிகோலிய மகிந்த அரசு இந்திய மீனவர்களை விடுதலை செய்து இலங்கை மீனவர்களை விடுவிக்காது தனது இன வெறிதாண்டவத்தை காட்டியதுடன்,
தமிழ் மக்களின் வெறுப்பை மேலும் மேலும் தேடிக்கொண்டு தனது அமைச்சர் கைளையே மதிக்காத தவறையும் மகிந்த அரசு ஜனாதிபதி தேர்தல் நேரத்தில் தான் விட்ட தவறை சுடலை ஞானம் போல் உணரவேண்டிய நேரமிது என ஜனநாயக மக்கள் முன்ணனி ஊடக செயலாளரும் கொழும்பு மானகர சபை உறுப்பினரும் வீடமைப்பு நிலையியல் துறை தலைவருமான சி.பாஸ்கரா தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவிக்கையில்,
இலங்கை இனப் பிரச்சினைக்கு தீர்வை முன்வைக்காமல் யுத்தம் என்று சொல்லி பல லட்சக்கணக்கான மக்களை கொலை செய்தது மட்டுமன்றி பல ஆயிரக் கணக்கானவர்களை காணாமல் போகவும் வழி செய்தது.
சரணடைந்த பல ஆயிரக் கணக்கானவர்களை சிறையில் அடைத்து அவர்கள் எங்கு உள்ளார்கள் எனறும் இன்று வரை உறவினர்களுக்கே தெரியாமல் மறைத்து வைத்திருந்தது.
இவ்வளவு கொடுமைகளுக்கு பின் கூட இனப்பிரச்சினையை தீர்க்காமல் ஐக்கிய நாடுகள் சபைக்கும் உலக நாடுகளுக்கும் குறிப்பாக இந்தியாவுக்கும் கதைசொல்லி தனது காரியத்தைகாய் நகர்த்துவதிலும் அதிகாரத்தை தக்க வைப்பதிலும் குறியாக இருந்தது.
எல்லாவற்றிற்கும் உச்சகட்டமாக இந்திய அழுத்தத்தின் காரணமாக இந்திய மீனவர்களை மட்டும் விடுதலை செய்து இலங்கை தமிழ் மீனவர்களை விடுதலை செய்யாமலும் இருந்த ஜனாதிபதியின் செயலானது இனவெறியின் உச்சநிலையினை காட்டுகிறது. இது எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.
வெலிவேரிய என்ற சிங்கள கிராமத்தில் நல்ல குடிநீர் கேட்டு போராட்டம் நடத்திய சிங்கள மக்களையே தனது இரihணுவபலத்தின் மூலம் சுட்டுத் தள்ளியது எவ்விதத்திலும் நியாயப்படுத்த முடியாத கொடுமையிலும் கொடுமை.
இவைகளுக்கெல்லாம் உச்சம் போல் என்றுமில்லாத மதவாதத்தை தலைவிரித்தாட விட்டு பள்ளிவாசல்கள் கோவில்கள் தேவாலயங்கள் தாக்கதுணை நின்றதும் அதற்கு முன்நின்று உழைத்தவர்களை இன்றுவரை கைது செய்யாமல் இருப்பதும் இலங்கையின் அழிவிற்கான வரலாற்றுப் பதிவுகள்.
இதுமட்டுமன்றி தனது அமைச்சர்களையும் தனது பாராளுமன்ற உறுப்பினர்களையும் மதிக்காமல் விட்ட செயலுக்காகவும் இன்று ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மகிந்த அவர்களை எதிர்த்து அக்கட்சியின் செயலாளர் மைத்திரிபால சிறிசேன களமிறங்கிய நேரத்தில் அரசுதான் விட்ட தவறை சுடலை ஞானத்தில் சிந்திக்க வேண்டிய இறுதி நேரமிது என்றார் பாஸ்க்கரா.
http://www.tamilwin.com/show-RUmszBRWKYgs7.html
Geen opmerkingen:
Een reactie posten