தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 22 november 2014

ஆளுங்கட்சியை வெளுத்து வாங்கும் மைத்திரிபால! தொலைக்காட்சியில் விவாதம்



மைத்திரிபால சிறிசேனவின் பாதுகாப்பு குறைப்பு! கோத்தபாய அதிரடி
[ சனிக்கிழமை, 22 நவம்பர் 2014, 02:24.25 PM GMT ]
பொது வேட்பாளராக போட்டியிட போகும் முன்னாள் அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவிற்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது.
அவருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு இன்று காலை முதல் குறைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
மைத்திரிபால சிறிசேனவுக்கு நாடாளுமன்ற உறுப்பினருக்கு வழங்கப்படும் பாதுகாப்பு மாத்திரம் வழங்கப்படும் என அவர் கூறியுள்ளார்.
சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு மற்றும் வடமத்திய மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஆகிய தரப்பால் பொலநறுவை பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் திரும்ப பெறப்பட்டுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmszBRWKYgs3.html
ஆளுங்கட்சியை வெளுத்து வாங்கும் மைத்திரிபால! தொலைக்காட்சியில் விவாதம்
[ சனிக்கிழமை, 22 நவம்பர் 2014, 02:16.13 PM GMT ]
இலங்கையின் பிரபல தொலைக்காட்சியின் சடன அரசியல் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தற்போது ஆளுங்கட்சியை வெளுத்து வாங்கிக் கொண்டுள்ளார்.
இந்த அரசியல் நிகழ்ச்சியில் அவருடன் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, அதுரலியே ரத்ன தேரர், ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.
ஆளுங்கட்சியின் அடாவடிகள், தில்லுமுல்லுகள், சா்வாதிகாரப் போக்கு என்பவற்றையும் சிறுபான்மை மக்களுக்கு எதிரான இனவாதப் போக்கு குறித்தும் மைத்திரிபால தற்போது கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
எனினும் குறித்த தொலைக்காட்சியின் அலைவரிசை சிக்னல் சில இடங்களில் குழப்பப்பட்டும், சில இடங்களில் மின்தடையேற்படுத்தப்பட்டும் அவரது விவாதத்தை பொதுமக்கள் கேட்கவிடாமல் தடுப்பதில் ஆளுங்கட்சி முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
அத்துடன் டெலிகொம் பியோ தொலைக்காட்சி தொகுப்பு சேனலில் ஒலிபரப்பாகும் குறித்த தொலைக்காட்சியின் ஒலிபரப்பு முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் இதனை முன்னரே எதிர்பார்த்திருந்த மைத்திரிபால சிறிசேனவின் ஊடகப்பிரிவினர் இணையத்தள நேரலையில் தற்போது விவாதத்தை ஒளிபரப்பிக் கொண்டிருக்கின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmszBRWKYgs2.html

Geen opmerkingen:

Een reactie posten