[ சனிக்கிழமை, 08 நவம்பர் 2014, 01:26.34 AM GMT ]
குண்டுத் தாக்குதல் நடத்திய குற்றத்திற்காக மரண தண்டனையும், 667 ஆண்டு சிறைத்தண்டனையும், ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த தண்டனைகளுக்கு எதிராக குறித்த சந்தேக நபர் மேன்முறையீடு செய்துள்ளார்.
1998ம் ஆண்டு ஜனவரி மாதம் 25ம் திகதி இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.
தாக்குதல் சம்பவத்தில் 15 பேர் கொல்லப்பட்டதுடன், மேலும் பத்து பேருக்கு காயங்கள் ஏற்பட்டிருந்தது.
முத்துசாமி தர்மலிங்கம் என்ற தண்டனை விதிக்கப்பட்ட நபர் பேராதனையை வதிவிடமாகக் கொண்டவர்.
தலதா மாளிகையில் வெடிக்கப்பட்ட வெடிபொருட்கள் நிரம்பிய லொறியை கண்டிக்கு கொண்டு வந்ததாக தர்மலிங்கம் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
முதலாம் சந்தேக நபர் வெடிபொருட்கள் நிறைந்த லொறியை ஓட்டிச் சென்று வெடிக்கச் செய்திருந்தார்.
கண்டி உயர்நீதிமன்றின் அப்போதைய நீதவான் நம்புவசம் என்பவரினால் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
முதலாம் சந்தேக நபர் நீதிமன்றில் முன்னிலையாகியிருக்கவில்லை.
வழக்கு விசாரணை செய்யப்படும் காலத்திலேயே இரண்டாம் மூன்றாம் சந்தேக நபர்கள் உயிரிழந்துவிட்டனர்.
நான்காம் சந்தேக நபரான தர்மலிங்கத்திற்கு நீதவான் 667 வருடக கடூழிய சிறைத்தண்டனை, மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனை ஆகியவற்றை விதித்திருந்தார்.
இந்த தண்டனைகளை ரத்து செய்யுமாறு தர்மலிங்கம் சட்டத்தரணியின் ஊடாக மேன்முறையீடு செய்துள்ளார்.
கடந்த 5ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வழக்கு விசாரணை எதிர்வரும் 10ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszBTcKXftz.html
கொலை மிரட்டல்கள் தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்!- ட்ரான்பெரன்ஸி இன்டர்நெசனல்
[ சனிக்கிழமை, 08 நவம்பர் 2014, 01:14.10 AM GMT ]
ஊழல் மோசடிகளை தடுத்தல் மற்றும் நல்லாட்சி ஆகியவனவற்றை வலியுறுத்தும் அமைப்பாக ட்ரான்பெரன்ஸி இன்டர்நெசனல் அமைப்பு செயற்பட்டு வருகின்றது.
இந்த அமைப்பின் பணியாளர்கள்ää திட்டங்கள், திட்டங்களில் பங்கேற்கும் ஊடகவியலாளர்கள் தொடர்ச்சியாக அச்சுறுத்தப்படுவதுடன் நிகழ்ச்சிகளை நடத்த விடாமல் தடுக்கப்படுவதாக ட்ரான்பெரன்ஸி இன்டர்நெசனல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் எஸ்.ருஹுகே தெரிவித்துள்ளார்.
இந்த கொலை மிரட்டல்கள் தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டுமென பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்கக்கோனிடம், ருஹுகே எழுத்து மூலம் கோரியுள்ளார்.
அடிக்கடி மேற்கொள்ளப்பட்ட அச்சுறுத்தல்கள் தொடர்பில் நிறுவனத்தின் சான் விஜேதுங்கவினால் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பில் தெமட்டகொட பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
ஏனைய முறைப்பாடுகள் தொடர்பில் இதுவரையில் விசாரணை நடத்தப்படவில்லை.
கிரித்தலே டியர் பார்க், நீர்கொழும்பு கோல்டன் சேன்ஸ் மற்றும் கொழும்பு கலதாரி ஹோட்டல் ஆகியவற்றில் புலனாய்வு செய்தி சேகரிப்பு தொடர்பில் நடத்தப்படவிருந்த ஊடக கருத்தரங்குகளை நடத்தவிடாது தடுக்கப்பட்டதுடன், ஊடகவியலாளர்கள் கடுமையாக அச்சுறுத்தப்பட்டனர்.
ஏற்கனவே இது குறித்து முறைப்பாடு செய்துள்ளோம்.
மீண்டும் இவ்வாறான சம்பவங்கள் குறித்து உங்களின் கவனத்திற்கு கொண்டு வருகின்றோம்.
கடந்த ஜூன் மாதம் 27ம் திகதி கொழும்பு க்ளோபல் டவர் ஹோட்டலில் நடத்தப்படவிருந்த வருடாந்த பொதுக் கூட்டத்திற்கும் தடை ஏற்படுத்தப்பட்டது.
கடந்த ஒக்ரோபர் மாதம் 25ம் திகதி மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் ஹோட்டலில் நடத்தப்படவிருந்த தகல்களை அறிந்து கொள்ளும் உரிமை குறித்த கருத்தரங்கையும் நடத்த வேண்டாம் என மோட்டார் சைக்கிளில் வந்த தரப்பினர் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
இதனால் இந்தக் கருத்தரங்கும் நடத்தப்படவில்லை என ருஹுகே தெரிவித்துள்ளார்.
அச்சுறுத்தல்கள் மற்றும் இடையூறுகள் தொடர்பில் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு அவர், பொலிஸ் மா அதிபரிடம் கோரியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBTcKXfty.html
இலங்கை அரசின் மறுப்புக்கு மத்தியிலும் இலங்கைக்குள் வர முயற்சிக்கும் ஐ.நா.மனித உரிமை விசாரணையாளர்கள்!
[ சனிக்கிழமை, 08 நவம்பர் 2014, 02:12.43 AM GMT ]
இலங்கை தொடர்பில் சர்வதேச விசாரணைகளை நடத்த ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபையினால் கடந்த மார்ச்சில் மனித உரிமைகள் ஆணையாளருக்கு அதிகாரம் வழங்கப்பட்டது.
இந்தநிலையில் இலங்கை அரசாங்கம் தமது விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று அந்த ஆணைக்குழுவின் இணையத்தளத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஆணையாளரும் தொடர்ந்து இலங்கை அரசாங்கம், விசாரணைகளுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் தமது விசாரணையாளர்கள் இலங்கைக்குள் வந்து அதிகாரிகளையும் ஏனையவர்களையும் சந்திக்க வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என்றும் கோரி வருகிறார். எனினும் இலங்கை அரசாங்கம் இந்தக்கோரிக்கையை தொடர்ந்தும் நிராகரித்து வருகிறது.
இந்தநிலையில் குறித்த விசாரணைக்குழு, தமக்கு கிடைத்த சிவில் சமூக அறிக்கைகள், அரசாங்க அறிக்கைகள் மற்றும் ஆவணங்கள், சாட்சியங்கள் என்பவற்றை கொண்டு உள்ள மீளாய்வை மேற்கொள்ளவுள்ளதாக இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர், இலங்கை தொடர்பிலான விசாரணைகளுக்காக கடந்த ஜூன் மாதத்தில் பின்லாந்தின் முன்னாள் ஜனாதிபதி மார்டி அடிசாரி, நியூஸிலாந்தின் மேல்நீதிமன்ற முன்னாள் நீதிபதி சில்வியா காட்ரைட் மற்றும் பாகிஸ்தானின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் அஸ்மா ஜஹான்கிர் ஆகியோரை கொண்ட குழுவை அமைத்தார்.
இந்தக் குழுவே தற்போது விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.
http://www.tamilwin.com/show-RUmszBTcKXft0.html
Geen opmerkingen:
Een reactie posten