[ சனிக்கிழமை, 08 நவம்பர் 2014, 01:01.24 AM GMT ]
சாட்சியாளர்களை பாதுகாப்பது தொடர்பில் அமெரிக்கா அண்மையில் கோரிக்கை விடுத்திருந்தது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் தரப்பினரை அடக்குமுறைக்கு உட்படுத்துவது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கான அமெரிக்கப் பிரதிநிதி கெய்த் ஹார்பர் தெரிவித்திருந்தார்.
யுத்தக் குற்றச்செயல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான சாட்சியங்களை திரட்டிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யும் நோக்கில் இவ்வாறு அமெரிக்கா கருத்து வெளியிட்டுள்ளதாக இலங்கை தெரிவித்துள்ளது.
இலங்கை சட்ட விவகாரங்களில் தலையீடு செய்ய அமெரிக்க இராஜதந்திரிகளுக்கு உரிமை கிடையாது என அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
யுத்தக் குற்றச் செயல் விசாரணைகளில் ஈடுபட்டு வரும் ஐக்கிய நாடுகள் அமைப்பினருக்கு போலியான சாட்சியங்களை வழங்கிய சண் மாஸ்டர் என்பவரை காப்பாற்றும் நோக்கில் அமெரிக்கா இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளது.
இலங்கைக்கு எதிராக போலி சாட்சியங்களை திரட்டிய குற்றச்சாட்டின் பேரில் இரண்டு தமிழ்த் தேசிய்க கூட்டமைப்பு செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, யுத்தக் குற்றச்செயல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சாட்சியங்களை அளிக்கும் தரப்பினர் அடக்குமுறைக்கு உட்படுத்தப்படக் கூடாது என ஐக்கிய நாடுகள் அமைப்பு கோரியுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszBTcKXfs6.html
ஹெல உறுமயவுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை!– நிமால் சிறிபால
[ சனிக்கிழமை, 08 நவம்பர் 2014, 01:07.23 AM GMT ]
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு ஆதரவளிப்பது தொடர்பில் ஜாதிக ஹெல உறுமய கட்சி சில நிபந்தனைகளை விதித்துள்ளது.
குறிப்பாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமயை ரத்து செய்தல் உள்ளிட்ட ஏழு கோரிக்கைகளை அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளது.
இந்த கோரிக்கைகள் பற்றி உரிய கவனம் செலுத்தப்படாவிட்டால், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறுவதனை தவிர்க்க முடியாது என ஜாதிக ஹெல உறுமய அறிவித்துள்ளது.
ஜாதிக ஹெல உறுமய கட்சியுடன் இதுவரையில் இரண்டு சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது என நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
எனினும் எந்தவொரு இறுதித் தீர்மானமும் எடுக்கப்படவில்லை.
ஜாதிக ஹெல உறுமய கட்சியினர் தொடர்ந்தும் அரசாங்கத்துடன் இணைந்திருப்பார்கள் என்பதே எமது நம்பிக்கையாகும்.
ஒரு சுற்றுப் பேச்சுவார்த்தையின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவையும் ஹெல உறுமய கட்சியினர் சந்தித்திருந்தனர்.
அரசாங்கத்தை விட்டு விலகப் போவதாக இதுவரையில் ஜாதிக ஹெல உறுமய கட்சி உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளா சந்திப்பில், செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBTcKXfs7.html
கூடுதலான அகதிகளை ஏற்குமாறு அவுஸ்திரேலியாவிடம் கோரிக்கை
[ சனிக்கிழமை, 08 நவம்பர் 2014, 12:55.37 AM GMT ]
இது தொடர்பாக முன்னாள் அமைச்சர்கள், சமகால அரசியல்வாதிகள், அகதி உரிமை ஆர்வலர்கள், இந்தோனேஷியாவிற்கான முன்னாள் தூதுவர் அடங்கலாக 35 பேர் அடங்கிய குழுவொன்று கடந்த ஜூலை மாதம் தொடக்கம் வட்டமேசை மாநாடு நடத்தியிருந்தது.
இதன் முடிவில் 35 பேரும் சேர்ந்து ஒரு அறிக்கையினை தற்போது வெளியிட்டுள்ளனர்.
பிரதமரின் கடும்போக்கு கொள்கைகள் காரணமாக தற்போது படகுகளை நிறுத்த வேண்டும் என்ற ரீதியிலான அரசியல் விவாதம் தீவிரம் பெற்றிருந்தது. அதன் விளைவாக படகுகள் நிறுத்தப்பட்டுள்ளன.
தற்போது, வலுக்கட்டாயமான குடிபெயர்வு, அதன் விளைவுகளில் நீடிக்கும் சிக்கலைக் கையாள்வதற்கு நீண்டகால அகதிக் கொள்கை அவசியமென அந்த அறிக்கையில் கோரப்பட்டுள்ளது
இந்தக் குழுவில் அங்கம் வகித்த முன்னாள் அமைச்சரும், ஆண்டிற்குரிய சிரேஷ்ட அவுஸ்திரேலியருமான ஃபிரெட் செனி கருத்து வெளியிடுகையில்,
அகதிகளுக்காக புதியதும், சிறந்ததுமான உடன்படிக்கை உருவாக்கப்படும் என்ற கற்பனை செய்வது யதார்த்தமானதாகுமென தெரிவித்தார்.
எது எவ்வாறாக இருந்தாலும் தற்போது நாட்டுக்குள் 6 மாத கால விசாக்கள் கொடுத்தவர்கள் 2 வருடங்களாக விசாக்கள் இல்லாமல் தற்போது இருக்கின்றர்கள்.
முகாமுக்குள் இருந்து விடுவிக்கப்பட்டவர்கள் நிபந்தனை அடிப்படியில் அடிமை போல் இருக்கின்றனர்.
இவர்களுக்கு 3 வருடங்களாக இதுவரைக்கும் இந்த விதமான தீர்வும் எடுக்கப்படாத நிலையில் உள்ளனர்.
அகதிகள் விடயத்தில் அரசியல் நடத்தும் அளவுக்கு இன்று அகதிகள் மாறியுள்ளனர்.
இதற்கு என்று தீர்வு வரும் என்பது காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.
http://www.tamilwin.com/show-RUmszBTcKXfs5.html
Geen opmerkingen:
Een reactie posten