தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 24 november 2014

யாரை ஆதரிப்பது? இன்று அவசரமாகக் கூடுகிறது கூட்டமைப்பு!

தேசிய வேட்பாளரை நிறுத்த தயாராகும் பொதுபல சேனா
[ திங்கட்கிழமை, 24 நவம்பர் 2014, 06:35.31 AM GMT ]
ஜனாதிபதித் தேர்தலில் தமது அமைப்பின் சார்பில் தேசிய வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்படுவார் என பொதுபல சேனா அமைப்பு தெரிவித்துள்ளது.
பொது வேட்பாளர் நிறுத்தப்பட்டுள்ள போதிலும் நாட்டுக்கு தேவையான பொது வேட்பாளர் நிறுத்தப்படுவார் எனவும் அவர் யார் என்பது நாளை நடைபெறும் ஊடக சந்திப்பில் அறிவிக்கப்படும் என பொதுபல சேனா அமைப்பின் தேசிய அமைப்பாளர் வித்தரந்தெனியே நந்த தேரர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் வழிகாட்டலில் இயங்கி வருவதாக கூறப்படும் பொதுபல சேனா, சிங்கள பௌத்த வேட்பாளர் ஒருவரை ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்த போவதாக தெரிவித்திருந்தது.
ரணில் விக்ரமசிங்க, சந்திரிக்கா பண்டாரநாயக்க, மாதுளுவாவே சோபித தேரர் ஆகியோரில் ஒருவரே பொது வேட்பாளராக நிறுத்தப்படுவார் என ஊகங்கள் வெளியிடப்பட்டு வந்தன.
இதனால், பொதுபல சேனா சிங்கள பௌத்த வேட்பாளரை நிறுத்த போவதாகவும் தம்மிடம் அப்படியான வேட்பாளர் ஒருவர் இருப்பதாகவும் கூறி வந்தது.
இந்த நிலையில், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக மைத்திரிபால சிறிசேன அறிவிக்கப்பட்டார்.
மைத்திரிபால பொது வேட்பாளராக போட்டியிடுவது தொடர்பில் அறிவிக்கப்பட்டதும், மைத்திரிபால பொது வேட்பாளராக போட்டியிடுவார் என தமது அமைப்பு எதிர்பார்த்திருக்கவில்லை என பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவிததிருந்தமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszBRYKYfr3.html
பொருளாதார பலம் இருந்தால்தான் ஏனையவற்றை எம்மால் வெல்ல முடியும்: கரைச்சி பிரதேசசபை உறுப்பினர்
[ திங்கட்கிழமை, 24 நவம்பர் 2014, 06:43.10 AM GMT ]
 பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனின் எண்ணத்தின்படி எமது மக்களின் வீட்டுத்தோட்ட நடவடிக்கைகளில் ஆர்வத்தையும் பலத்தையும் ஏற்படுத்தும்பொருட்டு கிராமங்கள் இந்த மழைகால பருவத்தை பொருத்தமாக கொண்டு பசுமைத்தேசம் என்ற திட்டத்தின்கீழ் விதைதானியங்கள் துரிதமாக வழங்கப்பட்டு வருகின்றன.
மக்கள் ஆர்வமுடன் விதைதானியங்களை பெற்றுவருவதுடன் இது தொடர்பாக தம் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தியுள்ளனர்.
இதன்படி நேற்று கிளிநொச்சி விநாயகபுரத்தில் விதைதானியங்கள் வழங்கும் நிகழ்வு கிளிநொச்சி விநாயகபுரம் கிராமத்தின் பொது நோக்கு மண்டபத்தில் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் விஜயன் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வுகளில் கரைச்சி பிரதேசபை உறுப்பினர்களான பாலாசிங்கசேதுபதி குமாரசிங்கம் கிருஸ்ணபுரம் பகுதியின் கட்சி செயற்பாட்டாளர் சந்தோசம் விநாயகபுரம் ஆலய பரிபாலனசபைதலைவர் விநாயகபுரம் கிராம அவிவிருத்தி சங்க செயலாளர் மாதர் கிராம அபிவிருத்தி சங்க பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த கரைச்சி பிரதேசசபை உறுப்பினர் குமாரசிங்கம் நாம் எமது நிலம் பற்றிய உரிமை சார்ந்து சிந்திக்கும் அதேவேளை எமது பொருளாதாரம் பற்றியும் சிந்திக்க வேண்டியது அவசியமானது.
உரிமை பற்றிய எமது பயணத்துக்கு  பொருளாதார பலம் அவசியமானது.
நாம் பொருளாதார ரீதியில் அழிக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு எதற்கும் கையேந்துகின்றவர்களாக  மாற்றிவிட  எதிர் சக்திகள் நினைப்பதன் காரணம் எமது உரிமை பற்றிய சிந்திப்பை மழுங்கடிக்கவே. எமது அடிப்படையான பொருளாதார ரீதியான தேவைகள் பலவீனமாக  இருக்கும்பொழுது எம்மால் முழுமையாக  உரிமைக்காக பயணிக்க முடியாது.
எனவேதான் பொருளாதாரம் தமிழர்களை பொறுத்தமட்டில் அவசியம்.
அதை உங்களுக்கு இந்த கார்த்திகையின் நாட்களில்  விதைதானியங்களுடாக வீட்டுத்தோட்ட சிந்தனையூடாக நினைவுபடுத்துவதுன் நோக்கம் நாம் எமது மண்ணில்  உரிமைகளோடு யாருக்கும் அடிமைகள் அற்று வாழ்வதற்கே என்றார்.
http://www.tamilwin.com/show-RUmszBRYKYfr5.html

எமது தேசிய முன்னணி சார்பில் மைத்திரி வேட்புமனுவை தாக்கல் செய்வார்! சின்னம் தொலைபேசி?
[ திங்கட்கிழமை, 24 நவம்பர் 2014, 07:16.24 AM GMT ]
நமது தேசிய முன்னணி என்ற அரசியல் கட்சியின் சார்பில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன வேட்புமனுவை தாக்கல் செய்ய உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
எமது தேசிய முன்னணி என்ற இந்த அரசியல் கட்சி ஏற்கனவே தேர்தல் செயலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள கட்சியாகும்.
அந்த கட்சியின் தலைவர் சேனக்க ஹரிப்பிரிய டி சில்வா , இவர் சரத் பொன்சேகாவின் முன்னாள் செயலாளராவார்.
இந்த கட்சியின் தற்போதைய செயலாளர் ருவான் பேர்டினன்டஸ், இவர் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீரவின் செயலாளராக தற்போது பணியாற்றி வருகிறார்.
எனினும் கட்சியின் பதவிகளில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எமது தேசிய முன்னணியின் சின்னம் தொலைபேசியாகும். இந்த சின்னத்திற்கு பதிலாக வேறு சின்னம் ஒன்றை பயன்படுத்துவது குறித்து தற்போது கலந்துரையாடப்பட்டு வருகிறது.
மங்களவின் கட்சி மைத்திரிபாலவிடம்!:  தொலைபேசி சின்னம்?
எதிர்க்கட்சிகளின் பொது கூட்டணியின் பெயரும் சின்னம் தொடர்பாக இறுதி முடிவெடுக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சிக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போதைய நிலையில் மங்கள சமரவீரவின் கட்சியான சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவை அபே ஜாதிக பெரமுன என்று பெயர் மாற்றி, தொலைபேசி சின்னத்தில் ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கு வசதியாக மங்கள சமரவீரவின் கட்சி செயலாளர் ருவன் பேர்டிணன்ட்ஸ் தனது பொறுப்பிலிருந்து விலகியுள்ளார். அந்த இடத்துக்கு மைத்திரியின் நம்பிக்கைக்கு உரிய ஒருவர் நியமிக்கப்பட உள்ளார்.
ஏழைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் சின்னமொன்றில் ஜனாதிபதி தேர்தலை எதிர் கொள்ள வேண்டும் என்பதே மைத்திரிபாலவின் எதிர்பார்ப்பாக உள்ளது.
முடியாத பட்சத்தில் ஏனையவர்களின் தெரிவான தொலைபேசி சின்னத்தில் போட்டியிடவும் அவர் இணக்கம் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBRYKYfr6.html

யாரை ஆதரிப்பது? இன்று அவசரமாகக் கூடுகிறது கூட்டமைப்பு
[ திங்கட்கிழமை, 24 நவம்பர் 2014, 06:39.58 AM GMT ]
ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் ஆராய்வதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழு இன்று அவசரமாகக் கூடுகின்றது.
கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது.
ஜனவரி 8ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் எதிரணியின் சார்பில் மைத்திரிபால சிறிசேனவும், அரச தரப்பு சார்பில் மஹிந்த ராஜபக்‌ஷவும் போட்டியிடவுள்ள நிலையில் இவர்களில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் கூட்டமைப்பு இந்தக் கூட்டத்தில் கலந்துரையாடும்.
இதில் கூட்டமைப்பின் வடக்கு, கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டு ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிக்க வேண்டும் என்பது தொடர்பில் தமது கருத்துக்களை முன்வைக்கவுள்ளனர் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
http://www.tamilwin.com/show-RUmszBRYKYfr4.html

Geen opmerkingen:

Een reactie posten