தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 10 november 2014

பண்பற்ற மனிதர்களும் உலகில் இருக்கின்றனர்: மைத்திரிபால சிறிசேன!

தோல்வி அச்சத்தில் பொய்யான வாதங்களை முன்வைக்கும் ஐ.தே.கட்சி!- சாந்த பண்டாரா குற்றச்சாட்டு
[ திங்கட்கிழமை, 10 நவம்பர் 2014, 10:44.03 AM GMT ]
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற முடியாதென்ற அச்சத்தில் இருக்கும் ஐக்கிய தேசியக் கட்சி, பொய்யான வாதங்களை உருவாக்கி அறிக்கைகளை வெளியிட்டு வருவதாக ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.
18வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டம் குறித்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உயர்நீதிமன்றத்தின் கருத்தை கோரியுள்ளதன் மூலம், அது தேர்தல் ஆணையாளரின் சுதந்திரமான கடமைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க நேற்று தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
18வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டம் அதியுயர் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு தற்போது நாட்டின் சட்டமாக மாறியுள்ளது.
அத்துடன் அரசியல் அமைப்புச் சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிடும் சந்தர்ப்பம் இருக்கின்றது என்பது மிகத் தெளிவான விடயம்.
அப்படியான நிலையில், ஜனாதிபதிக்கு மூன்றாது முறையாக போட்டியிட முடியாது என எதிர்க்கட்சிகள் தொடர்ந்தும் கூறி வருகின்றன.
இதனை தெளிவுப்படுத்தி மக்களுக்கு சரியான பதிலை வழங்குவதற்காக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, உயர்நீதிமன்றத்திடம் சட்ட விளக்க கருத்தை கோரியுள்ளார்.
ஜனாதிபதிக்கு தேர்தலை நடத்த முடியும் அது சம்பந்தமான நடவடிக்கைளை தேர்தல் ஆணையாளர் மேற்கொள்வார்.
எனினும் எதிர்க்கட்சிகள் அழுத்தங்களை கொடுத்து தேர்தல் ஆணையாளரை இறுக்க முயற்சித்து வருகின்றனர். இதன் மூலம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தேர்தலில் போட்டியிட தகுதியற்றவராக மாற்ற முயற்சித்து வருகின்றனர் எனவும் சாந்த பண்டார குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBSUKXev1.html
விவசாய கொள்கையை மாற்ற நாம் தயாரில்லை: மகிந்த ராஜபக்ஷ
[ திங்கட்கிழமை, 10 நவம்பர் 2014, 11:03.31 AM GMT ]
விவசாயத்தில் நாட்டை தன்னிறைவு அடைய செய்ய அரசாங்கம் முன்னெடுத்த கொள்கையில் மாற்றங்களை ஏற்படுத்த தயாரில்லை என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நாட்டின் உரிமையான விவசாயத்தை முன்னேற்றுவதில் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
அலரி மாளிகையில் இன்று முற்பகல் நடைபெற்ற விவசாய அமைப்புகள் மற்றும் அதன் பிரதிநிதிகளுடனான சந்திப்பில் ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.
இந்த சந்திப்பில் வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் அனைத்து பகுதிகளையும் சேர்ந்த விவசாய பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
http://www.tamilwin.com/show-RUmszBSUKXev2.html
பண்பற்ற மனிதர்களும் உலகில் இருக்கின்றனர்: மைத்திரிபால சிறிசேன
[ திங்கட்கிழமை, 10 நவம்பர் 2014, 11:15.27 AM GMT ]
சுகாதார அமைச்சில் பணியாற்றுவது சிரமமான பணியல்ல எனவும் அதில் இருப்பவர்கள் பிரச்சினைகாரர்கள் எனவும் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாகவே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தன்னிடம் இந்த சுகாதார அமைச்சை ஒப்படைத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
பொலனறுவை வைத்தியசாலையின் 4 மாடி நோயாளர் விடுதி தொகுதியை இன்று திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
ரூபா மற்றும் டொலர்களுக்கு மனிதத் தன்மையை விற்கும் பண்பற்ற மனிதர்களும் இருக்கின்றனர் என்பதை சுகாதார அமைச்சில் பணியாற்றும் போது புரிந்து கொள்ள முடிந்தது எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBSUKXev3.html

Geen opmerkingen:

Een reactie posten