தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 10 november 2014

3வது தடவை ஜனாதிபதியாக மகிந்தர் போட்டியிட முடியுமா ? சர்சைக்கு இதோ ஒரு தீர்வு !

ஒருவர் இரண்டு தடவை மட்டுமே ஜனாதிபதியாக பதவி வகிக்;கலாம் என்று கூறும் அரசியலமைப்பின் கீழ் இரண்டுதடவை ஜனாதிபதி பதவிக்கு வந்த ஜனாதிபதி, பின்னர் கொண்டுவரப்பட்ட 18ஆவது திருத்தத்தின் கீழ் மூன்றாம் தடவையும் ஜனாதிபதியாகலாமா என்ற சர்ச்சைக்கு ஒரு எளிய விளக்கம்.
ஒரு வாடிக்கையாளர், இரண்டு வருட உத்தரவாதத்துடன் கார் மின்கலமொன்றின் (பற்றரி) வாங்குகிறார். இந்த இரண்டு வருடம் முடியும் முன்னரே விற்பனையாளர், இதேவகை மின்கலத்துக்கு மூன்று வருட உத்தரவாதத்தை அறிவித்து விற்கிறார். பொருளை வாங்கியபோது இரண்டு வருட உத்தரவாதத்துடனான வியாபார நிபந்தனைகளை ஏற்று கையொப்பமிட்ட, வாடிக்கையாளர் தான் ஒப்பமிடாத புதிய மூன்று வருட உத்தரவாதத்தை கேட்பது எவ்வளவு தூரம் நியாமானது ?
இனி, வாடிக்கையாளருக்கு பதிலாக ஜனாதிபதியையும், மின்கலத்துக்கு பதிலாக ஜனாதிபதி பதவியையும், விற்பனையாளருக்கு பதிலாக அரசியலமைப்பையும் பிரதியீடு செய்தால் எவராலும் இந்த மூன்றாவது தடவை சர்ச்சைக்கு தீர்வுகாண முடியும். ஒட்டு மொத்தத்தில் மகிந்தரால் இனி போட்டியிட முடியாது என்பது தான் சட்டம். ஆனால் இலங்கையில் அது பேணப்படுமா ?
http://www.athirvu.com/newsdetail/1408.html

Geen opmerkingen:

Een reactie posten