[ திங்கட்கிழமை, 10 நவம்பர் 2014, 09:48.58 AM GMT ]
பொதுவாக வைத்தியசாலை மற்றும் பாடசாலைக்கு முன்பாக வாகனங்களின் ஒலி எழுப்புவது தடைசெய்யப்பட்டுள்ளது. மீறி வாகனத்தில் ஒலி எழுப்புபவர்கள் சட்டரீதியாக தண்டிக்கப்படுகின்றனர்.
ஆனால் இன்று இடம்பெற்ற கண்டனப்பேரணியில் கலந்து கொண்டவர்கள் மத்திய கல்லூரி, வேம்படி மகளிர் கல்லூரி அருகாமையில் செல்லும் போதும் யாழ் போதனா வைத்தியசாலைக்கு முன்பாகவும் சத்தமாக ஒலிபெருக்கியில் கோஷமிட்டனர்.
மேலும் தேர்தல் காலங்களில் மற்றும் விசேட தினங்களில் காப்பெட் வீதிகளில் பெயர் பொறிப்பவர்களை கைது செய்து பொதுவுடமைக்கு சேதம் விளைவித்ததாக கூறி சட்டத்தால் தண்டிக்கப்படுகின்றனர். ஆனால் இன்று கஸ்தூரியார் வீதியில், வீதியின் நடுவில் கொடும்பாவியை போட்டு அதன் மீது பத்திரிகைகள், மற்றும் மண்ணெண்ணையை ஊற்றி தீயிட்டு கொளுத்தினர்.
இதனால் குறித்த வீதி ஊடான போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது. அண்மையில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களிற்கு ஆதராவாக தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் மேற்கொள்ளவிருந்த போராட்டத்திற்கு நகரின் பாதுகாப்பு கருதி யாழ். நகர் பொலிசார் நீதிமன்றத்தில் தடையுத்தரவு பெற்றிருந்தமையால் போராட்டம் நடைபெறவில்லை.
ஆனால் இன்று சிறு குழுவினர் இவ்வாறான ஒரு போராட்டத்தை முன்னெடுத்து சட்ட ஒழுங்குகளை மீறி வீதியில் நெருப்பினை கொளுத்தி போக்குவரத்து இடையூறு செய்தமையைம் பொலிசார் கண்டு கொள்ளாமைக்கு பொது மக்கள் விசனம் தெரிவித்தனர்.
http://www.tamilwin.com/show-RUmszBSUKXevy.html
வெளிநாடு சென்ற பொலிஸ் பேச்சாளருக்கு பதிலாக புதிய பேச்சாளராக ருவான் குணசேகர நியமிப்பு
[ திங்கட்கிழமை, 10 நவம்பர் 2014, 10:13.06 AM GMT ]
பேங்கொக் நகரில் நடைபெறும் சமூக விரோத செயல்கள் தொடர்பில் ஆசிய பிராந்தியத்தில் அமுல்படுத்தப்படும் சட்டங்கள் சம்பந்தமாக கலந்துரையாடும் கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காகவே பொலிஸ் பேச்சாளர் தாய்லாந்து சென்றுள்ளார்.
தாய்லாந்து செல்லும் அவர் எதிர்வரும் 14 ஆம் திகதி நாடு திரும்புகிறார்.
அதுவரையில் பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளராக பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர பணியாற்றுவார்.
http://www.tamilwin.com/show-RUmszBSUKXevz.html
விக்னேஸ்வரனின் கருத்துக்களை கவனத்திற்கொள்ளத் தேவையில்லை: டக்ளஸ் தேவானந்தா
[ திங்கட்கிழமை, 10 நவம்பர் 2014, 10:22.11 AM GMT ]
முதலமைச்சர் விக்னேஸ்வரன் அண்மைக்காலமாக வெளியிட்டு வரும் கருத்துக்கள் அடிப்படையற்றவை.
வடக்கில் இராணுவத்தினர் குற்றம் இழைப்பதாக கூறுவதில் உண்மையில்லை.
சில குற்றச்சாட்டுக்கள் தனிப்பட்ட காரணங்களுக்காக இவ்வாறு முன்வைக்கப்படுகின்றது.
இதனால் வடக்கு முதலமைச்சரின் கருத்துக்களை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை.
விக்னேஸ்வரன் கடந்த காலங்களிலும் இவ்வாறான கருத்துக்களைவெளியிட்டுள்ளார். அது அவரது இயல்பான பண்பாகும்.
ஆளும் கட்சியில் இருப்பதனால் இவ்வாறு கூறவில்லை.
வடக்கு அபிவிருத்திக்காக வட மாகாணசபைக்கு அரசாங்கம் நிதி வழங்கியுள்ளது.
இந்தப் பணத்தில் 27 வீதமான பணத்தை மாகாணசபை செலவிட்டுள்ளது.
சமாதானம் காரணமாக யாழ்ப்பாண மக்களுக்கு ஹம்பாந்தோட்டையிலும், ஹம்பாந்தோட்டை மக்களுக்கு யாழ்ப்பாணத்திலும் வாழ சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறான நிலைமை கிடையாது என சிலர் குறிப்பிட்டாலும் அதில் எவ்வித உண்மையும் கிடையாது என அமைச்சர் டக்ளஸ் கூறியுள்ளார்.
இன்று கொழும்பில்நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBSUKXev0.html
Geen opmerkingen:
Een reactie posten