ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர்! மைத்திரிபாலவின் இடத்திற்கு அநுர பிரியதர்சன யாப்பா நியமனம்!
[ சனிக்கிழமை, 22 நவம்பர் 2014, 03:07.30 AM GMT ]
அமைச்சர் மைத்திரிபால சிறிசேன, கட்சியின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகி ஜனாதிபதி பொதுவேட்பாளராக போட்டியிடவுள்ள நிலையில் இந்த புதிய நியமனம் வழங்கப்படுகிறது..
இந்தநிலையில் மைத்திரிபால சிறிசேனவின் சுகாதார அமைச்சுப் பதவி உட்பட்ட விலகிய அமைச்சர்களின் இடங்களுக்கு புதியவர்களை நியமிக்காமல், பிரதியமைச்சர்களை கொண்டு பணிகளை முன்கொண்டு செல்ல தீமானிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
http://www.tamilwin.com/show-RUmszBRWKYhx7.html
தமிழ் மக்களுக்கு இலவசமாக ஒருசொட்டு நீர் கூட எவரும் தரமாட்டார்கள்: கிழக்கு மாகாண கல்வி அமைச்சர்
[ சனிக்கிழமை, 22 நவம்பர் 2014, 03:09.13 AM GMT ]
தமிழ் மக்களின் பிரச்சினைகள் பற்றிக் கதைப்பதற்கு எவருமில்லை முஸ்லிம்களுக்கும், சிங்கள மக்களுக்கும் அவர்களின் சமூகம் சார்ந்த அமைச்சர்கள் உள்ளார்கள் என கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் விமலவீர திசாநாயக்க தெரிவித்தார்.
கிழக்கு மாகாணசபையிலோ, நாடாளுமன்றத்திலோ கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தி எந்தவித தமிழ் அமைச்சர்களும் இல்லை.இது தொடர்பில் கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் சற்றுச் சிந்திக்கவேண்டும் என மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி,இராசமாணிக்கம் மண்டபத்தில் நடைபெற்ற ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பட்டிருப்பு தொகுதி அமைப்பாளர் சாணக்கியன் இராசமாணிக்கத்தின் ஏற்பாட்டில் ஜனாதிபதியின் பிறந்த தினம் மற்றும் பதவியேற்பு கால பூர்த்தியை முன்னிட்டு இந்த நிகழ்வு நடத்தப்பட்டது.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், தமிழ் மக்களுக்கு அதிகளவான பிரச்சினைகள் உள்ளன. இது உண்மை என்பதை நான் அறிந்துள்ளேன்.
இந்த நிலையில், நான் ஓர் உண்மையை கூறுகின்றேன். தமிழ் மக்கள் வாக்களித்தாலும், வாக்களிக்காவிட்டாலும் சரி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவே மீண்டும் ஜனாதிபதியாக வருவார்.
இது உண்மை,தற்போது ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மஹிந்த ராஜபக்ஷவே இந்த நாட்டின் ஜனாதிபதியாக மீண்டும் வரப்போகின்றார்.
தமிழ் மக்களுக்கு இலவசமாக ஒருசொட்டு நீர் கூட எவரும் தரமாட்டார்கள். அனைத்தையும் இந்த அரசாங்கமே வழங்குகின்றது.
என்னைப் பொறுத்தவரையில் தமிழ், சிங்களம், முஸ்லிம் என்ற பேதமின்றி நான் சேவை செய்கின்றேன்.
இந்த நிலையில், எதிர்காலத்தில் தமிழ் மக்கள் சிந்தித்துச் செயற்படவேண்டும்.
கிழக்கு மாகாணத்தில் கடந்த 5 வருடங்களாக முதலமைச்சர் பதவியில் மட்டக்களப்பைச் சேர்ந்த தமிழர் ஒருவர் இருந்தார்.
தற்போது கிழக்கு மாகாணசபையில் ஒரு தமிழ் அமைச்சர் கூட இல்லை. கிழக்கில் 95 சதவீதமான பாடசாலைகள் மாகாணசபை நிர்வாகத்தின் கீழுள்ளன.
அதேபோல், 5 வைத்தியசாலைகளை தவிர, ஏனைய வைத்தியசாலைகள் அனைத்தும் மாகாணசபையின் கீழுள்ளது.
இவை இவ்வாறிருந்தாலும், தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி கிழக்கு மாகாணசபையில் ஓர் அமைச்சர் கூட இல்லை.
நான் மட்டும் சிங்கள மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஓர் அமைச்சர். ஏனைய 4 பேரும் முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள். என்னிடம் அதிகளவான தமிழ்ப் பிள்ளைகள் தங்களுக்கு லேபர் வேலை பெற்றுத்தருமாறு விண்ணப்பங்கள் தந்துள்ளார்கள்.
தமிழ் மக்கள் தண்ணீர், வீதி, மின்சாரம், வைத்தியசாலை போன்ற வசதிகளை ஏற்படுத்தி தருமாறு கேட்கின்றார்கள். ஆனால், வாக்குகளை மாத்திரம் எதிர்த்தரப்புக்கு போடுகின்றார்கள்.
http://www.tamilwin.com/show-RUmszBRWKYgoy.html
Geen opmerkingen:
Een reactie posten