[ சனிக்கிழமை, 22 நவம்பர் 2014, 01:27.49 AM GMT ]
இதன் போது அந்தக் கட்சியின் பிரதேசசபை உறுப்பினர் ஒருவர் காயமடைந்தார்.
களுத்துறை பயாகல மக்கொன்ன என்ற இடத்தில் இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த சமில ரணசிங்க என்பவர் களுத்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் கொழும்புக்கு மாற்றப்பட்டார்.
காரில் வந்தோரே அவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் வாகன தொடரணியின் மீது மாவத்தகம பிரதேசத்தில் வைத்து நேற்று மாலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதில் பலர் காயமடைந்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmszBRWKYhx1.html
ரணிலின் முடிவுக்கு தயா கமகே எதிர்ப்பு!
[ சனிக்கிழமை, 22 நவம்பர் 2014, 01:33.54 AM GMT ]
ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து ஒருவரை தேர்தல் களத்தில் நிறுத்தாமையை அவர் கண்டித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின்; செயற்குழு கூட்டம் நேற்று இடம்பெற்ற போது ரணில் விக்கிரமசிங்க, மைத்திரிபால சிறிசேனவின் பெயரை பிரேரித்தார்.
இதன் போது தயா கமகே எதிர்ப்பை வெளியிட்ட போதும் கட்சியின் பலரும், மஹிந்த ராஜபக்சவுக்கு மைத்திரிபாலவே போட்டியாளராக இருக்க முடியும் என்று குறிப்பிட்டனர்.
http://www.tamilwin.com/show-RUmszBRWKYhx2.html
ரணிலுக்கு இரண்டு மைத்திரிகள்! ஜனாதிபதி மஹிந்த சாடல்
[ சனிக்கிழமை, 22 நவம்பர் 2014, 02:32.27 AM GMT ]
ரணிலின் மனைவி மைத்திரியையும் ஜனாதிபதி பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவையும் முன்னிறுத்தி இந்தக் கருத்தை அவர் வெளியிட்டுள்ளார்.
அலரி மாளிகையில் நேற்று இடம்பெற்ற அரச ஆயுர்வேத வைத்தியர்களுக்கான போசனம் வழங்கல் நிகழ்வில் ஜனாதிபதி இந்தக்கருத்தை வெளியிட்டார்.
ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர் ஒருவரை தெரிவு செய்ய முடியாத நிலையிலேயே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளரை அந்தக் கட்சி தெரிவு செய்துள்ளதாக மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
இது திஸ்ஸ அத்தநாயக்க, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு வந்து தேர்தலில் போட்டியிடுவதை போன்றது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தநிலையில் மைத்திரிபால சிறிசேன, 2010ல் சரத் பொன்சேகா சென்ற நிலைமைக்கு செல்வார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிலர் தற்போது மக்கள் முன்வந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தொடர்பில் முதலைக் கண்ணீர் வடிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்
http://www.tamilwin.com/show-RUmszBRWKYhx3.html
அரசியலமைப்பை திருத்த ஐக்கிய தேசியக் கட்சியிடம் பலம் உள்ளது!- திஸ்ஸ அத்தநாயக்க
[ சனிக்கிழமை, 22 நவம்பர் 2014, 02:32.52 AM GMT ]
கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தில் இருந்து ஒரு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளியேறியுள்ளனர்.
இன்னும் பலர் எதிர்க்கட்சியில் இணையவுள்ளனர்.
இந்தநிலையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொள்ள, ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் மைத்திரிபால சிறிசேன, நாடாளுமன்றத்தை கலைப்பார்.
இதன்பின்னர் இடம்பெறும் பொதுத்தேர்தலின் மூலம் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை எதிர்க்கட்சியால் பெற்றுக்கொள்ள முடியும் என்று தி;ஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டுள்ளார்..
இதேவேளை தற்போது ஐக்கிய தேசியக்கட்சி 75 முதல் 80வீத எதிர்க்கட்சி வாக்குகளை கொண்டிருக்கிறது.
இந்தநிலையில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஜாதிக ஹெல உறுமய மற்றும் ஜேவிபியுடன் தமது கட்சி பேச்சு நடத்துவதாகவும் அத்தநாயக்க கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBRWKYhx4.html
தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் ஹரின் 11வது மணித்தியாலத்தில் தடுக்கப்பட்டார்!
[ சனிக்கிழமை, 22 நவம்பர் 2014, 02:45.08 AM GMT ]
அரசாங்கத் தரப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பங்கேற்ற நிலையில் அவருக்கு எதிராக ஹரின் பெர்ணான்டோவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
எனினும் அரசாங்க உயர்மட்டத்தின் அழுத்தம் காரணமாக ஹரின் பெர்ணான்டோவின் வருகை இறுதி 11 மணித்தியாலத்தில் தடுக்கப்பட்டது.
இதனையடுத்து ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
http://www.tamilwin.com/show-RUmszBRWKYhx5.html
யாழ் மேல்நீதிமன்ற நீதிபதியின் இடமாற்றத்துக்கு பொது அமைப்புக்கள் கண்டனம்
[ சனிக்கிழமை, 22 நவம்பர் 2014, 02:51.31 AM GMT ]
யாழ்.மேல்நீதிமன்ற நீதிபதியாக கடமையாற்றிய அன்னலிங்கம் பிறேமசங்கர் வவுனியா மாவட்ட மேல்நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டமைக்கு பொது அமைப்புக்கள் விசனம் தெரிவித்துள்ளன.
காழ்ப்புணர்ச்சியால் செய்யப்பட்ட அரசியல் நோக்கம் கொண்ட இடமாற்றம் என பொது அமைப்புக்கள் விசனம் தெரிவித்துள்ளதுடன் மேற்படி இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்போவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் அவர்கள் மேலும் கூறுகையில்,
யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதியாகவிருந்த அன்னலிங்கம் பிரேமசங்கர் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதியாக நீதிச் சேவை ஆணைக்குழுவால் இடமாற்றம் பெற்று கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.
இதுவரை வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதியாகவிருந்து ஓய்வு பெற்ற திருமதி கனகாதேவி சிவபாதசுந்தரம் மீள் நியமனமாக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற ஆணையாளராக நீதிச் சேவை ஆணைக்குழுவால்
நியமிக்கப்பட்டுள்ளார்.
நியமிக்கப்பட்டுள்ளார்.
மீள் நியமனத்தில் போது பணியிடம் மாற்றம் செய்து வழங்குவது அரச சேவையில் வழக்கம். எனினும் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதியாகவிருந்த அன்னலிங்கம் பிரேமசங்கர் வழங்கிய அனைத்து தீர்ப்புக்களிலும் நேர்மையும் நீதியை நிலைநாட்டும் துணிச்சலுமிருந்ததாக கற்றறிந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
குற்றங்களிற்கு தகுந்த தண்டணை வழங்கி சமூகத்தில் மீண்டும் குற்றம் புரிவதை எவரும் நினைத்துப் பார்க்க முடியாதவளவு தீர்ப்புக்கள் அமைந்தமைஈ அண்மைக்காலமாகவல்ல அவர் கடந்த காலங்களில் யாழ். மாவட்டத்தில் அனைத்து நீதவான் மாவட்ட நீதிமன்றங்களில் சேவையாற்றிய போது அனைவருக்கும் தெரிந்ததே.
அத்துடன் எவருக்கும் அடிபணியாமல் நீதியை நிலை நாட்டுவதற்கு துணிச்சலுடன் கேவையாற்றிய நீதிபதியை யாழ்ப்பாணத்திலிருந்து இடமாற்றம் செய்தமையையிட்டு பொது அமைப்புக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்
http://www.tamilwin.com/show-RUmszBRWKYhx6.html
Geen opmerkingen:
Een reactie posten