தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 22 november 2014

பிரதமராக நிமல் சிறிபால டி சில்வா: சடுதியான அமைச்சரவை மாற்றம்!

அரசாங்கத்துக்கெதிரான பொதுமக்களின் அதிருப்தியை சமாளிக்கும் வகையில் தற்காலிக பிரதமராக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நியமிக்கப்படவுள்ளார்.
இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று தற்போது அலரி மாளிகையில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. அத்துடன் பெரும்பாலும் நாளை நடைபெறவுள்ள அமைச்சரவை மாற்றத்தின் போது புதிய அமைச்சுப் பதவிகளை ஒதுக்குவது தொடர்பாகவும் இந்தக் கலந்துரையாடலில் இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது.
திங்கட்கிழமைக்குள் புதிய பிரதமர், புதிய அமைச்சரவையுடன் தேர்தல் பணிகளை முன்னெடுக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.
இதற்கிடையே ராஜபக்ஷ குடும்ப ஆதரவாளர்கள் கோத்தா, பசில் அல்லது நாமல் ஆகிய மூவரில் ஒருவரையே பிரதமராக நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் தற்போதுள்ள சூழ்நிலையில் அடுத்த தேர்தல் வரை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா பிரதமராக நியமிக்கப்படும் சாத்தியங்கள் அதிகமாக இருப்பதாகவும் குறித்த தகவல் வட்டாரங்களிலிருந்து தெரிய வந்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszBRWKYgo2.html

Geen opmerkingen:

Een reactie posten