தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 20 november 2014

ஜனாதிபதி வருகையின் போது துப்பாக்கி ரவைகள் வைத்திருந்த மத்திய வங்கி பாதுகாப்பு அதிகாரி கைது!

உயிருக்கு ஆபத்து பாதுகாப்பு கோரும் ரத்தன தேரர்
[ வியாழக்கிழமை, 20 நவம்பர் 2014, 01:58.09 PM GMT ]
உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் பொலிஸ் மா அதிபரிடம் பாதுகாப்பு கோரியுள்ளார்.
கொள்கை ரீதியாக எடுத்த அரசியல் தீர்மானங்களை அடிப்படையாக கொண்டு தானும் தன்னை சார்ந்தவர்கள் வசித்து வரும் ராஜகிரிய கோதமி வீதியில் உள்ள விகாரைக்கு அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பியுள்ள கடிதம் ஒன்றில் ரத்தன தேரர் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு வெளிநாட்டு பிக்குமார் கல்வி பயிலும் இந்த விகாரைக்கு சேதங்கள் ஏற்பட்டால் அது சர்வதேச ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தும்.
அவ்வாறான நிலைமைக்கு செல்லவிடாது தான் உட்பட விகாரையில் இருக்கும் சகலரது பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் ரத்தன தேரர் கோரிக்கை விடுத்துள்ளார்.
விகாரை மீது தாக்குதல் நடத்தப்படவில்லை! அதுரலியே ரத்ன தேரர்
தான் தங்கியிருக்கும் சதஹம் செவண விகாரை மீது தாக்குதல் நடத்தப்படவில்லை என்றும் அச்சுறுத்தல் மாத்திரம் விடுக்கப்பட்டுள்ளதாகவும் ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகாநாயக்கர்களை சந்தித்து ஆசி பெறுவதற்காக தனது கட்சியின் முக்கியஸ்தர்கள் சகிதம் அதுரலியே ரத்ன தேரர் இன்று கண்டிக்கு சென்றிருந்தார்.
இந்நிலையில் அவர் தங்கியிருக்கும் விகாரை தாக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்தியை அடுத்து கொழும்புக்கு விரைந்த அவர், தற்போது சதஹம் செவணவில் இருந்து கொண்டு ஊடகங்களுடன் தொடர்பு கொண்டு வருகின்றார்.
இதன்போது கருத்துத் தெரிவித்துள்ள ரத்ன தேரர், இன்று நண்பகல் குண்டர்கள் விகாரையைச் சுற்றிலும் நின்று கொண்டு அச்சுறுத்தல் விடுத்துள்ளார்கள். மேலும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலையடுத்து பட்டாசுகளை கொளுத்தி விகாரைக்குள்ளும் எறிந்துள்ளார்கள்.
மற்றபடி விகாரைக்கு எதுவித தாக்குதல்களோ,பாதிப்புகளோ இல்லை.
இருந்தும் இந்தச் சம்பவம் எனக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலாகவே கருத வேண்டியுள்ளது. இவற்றுக்கு அஞ்சி நான் எனது அரசியல் நடவடிக்கைகளை கைவிட மாட்டேன்.
கட்சியின் ஏனைய முக்கியஸ்தர்களுடன் கலந்தாலோசித்த பின்னர் இதுகுறித்த மேலதிக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBRUKYho7.html
உயர்நீதிமன்ற சட்டவிளக்கம் பொதுமக்களுக்கு அவசியம் இல்லை: நிமல் சிறிபால டி சில்வா
[ வியாழக்கிழமை, 20 நவம்பர் 2014, 02:05.47 PM GMT ]
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ன்றாவது முறையாகவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடலாம் என்று உயர்நீதிமன்றம் சட்டவிளக்கம் கொடுத்திருக்கிறது 
எனவே உயர்நீதிமன்றத்தின் முழுமையான சட்டவிளக்கத்தையும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பிக்க ண்டிய அவசியம் இல்லை என்று அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
குறித்த உயர்நீதிமன்ற சட்டவிளக்கம் பொதுமக்களுக்கு அறியத்தரப்பட வேண்டும் என்று ஐக்கிய தேசியக்கட்சி தொடர்ந்தும் கோரி வருகிறது.
இந்தநிலையில் குறித்த சட்டவிளக்கம் ஜனாதிபதிக்கே தெரியப்படுத்தப்பட்டது. எனவே அது பொதுமக்களுக்கு அவசியம் இல்லை என்று அமைச்சர் இன்று நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டார்.
http://www.tamilwin.com/show-RUmszBRUKYhpy.html
பொன்சேகா கட்சியினருடன் பொலிசார் மோதல்! கடும் வாக்குவாதம்
[ வியாழக்கிழமை, 20 நவம்பர் 2014, 02:25.19 PM GMT ]
சரத் பொன்சேகா கட்சியினருக்கும் பொலிசாருக்கும் இடையில் இன்று கடும் மோதல் நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
சரத் பொன்சேகாவின் குடியுரிமை மீள வழங்குமாறு கோரி பத்து லட்சம் கையொப்பங்களை பெறும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இதன் ஒரு கட்டமாக நிட்டம்புவையில் பொதுமக்களின் கையொப்பங்களைப் பெறும் நடவடிக்கையில் ஜனநாயகக் கட்சி முக்கியஸ்தர்கள் இன்று ஈடுபட்டிருந்தனர்.
நேற்று நிட்டம்புவையில் குண்டர்களின் தாக்குதலுக்கு இலக்கான அதே இடத்தில் அவா்களுக்கு சவால் விடும் வகையில் பொன்சேகா தரப்பினர் கையொப்பம் சேகரிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.
இதன்போது அவர்கள் சிறிய ரக ஒலிபெருக்கியொன்றின் மூலம் பொதுமக்களுக்கு அழைப்பு விடுப்பதை பொலிசார் எதிர்த்துள்ளனர்.
ஒலிபெருக்கி பயன்படுத்த தாம் அனுமதி பெற்றிருப்பதாக பொன்சேகா தரப்பினர் தெரிவித்தும் பொலிசார் ஒலிபெருக்கி பயன்படுத்தப்படுவதை கடுமையாக ஆட்சேபித்துள்ளனர்.
இதனையடுத்து இருதரப்பினருக்கும் இடையில் கடும் மோதல் நிலை ஏற்பட்டுள்ளது. காரசாரமான முறையில் இருதரப்பினரும் வாக்குவாதங்களில் ஈடுபட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
http://www.tamilwin.com/show-RUmszBRUKYhpz.html
ஜனாதிபதி வருகையின் போது துப்பாக்கி ரவைகள் வைத்திருந்த மத்திய வங்கி பாதுகாப்பு அதிகாரி கைது
[ வியாழக்கிழமை, 20 நவம்பர் 2014, 02:39.43 PM GMT ]
ஜனாதிபதியின் வருகையின் போது துப்பாக்கி ரவைகளை தன்வசம் வைத்திருந்த மத்திய வங்கி பாதுகாப்பு அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
மத்தியின் வங்கியின் ஏற்பாட்டில் பத்து ரூபா நாணயக் குற்றிகளை அறிமுகப்படுத்தும் நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அண்மையில் கலந்து கொண்டிருந்தார். இந்த நிகழ்வு மத்திய வங்கியின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றிருந்தது.
ஜனாதிபதியின் வருகைக்கு சற்று முன்னர் அவரது பாதுகாப்புப் பிரிவினர் மத்திய வங்கி ஊழியர்கள் மற்றும் அவர்களின் உடைமைகளை பரிசோதனை செய்தனர். அதன்போது வங்கியின் பாதுகாப்பு அதிகாரியொருவரின் பையில் இருந்து நான்கு துப்பாக்கி ரவைகள் கண்டுபிடிக்கப்பட்டன. ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட அவர், அங்கிருந்து உடனடியாக அழைத்துச் செல்லப்பட்டார்.
இதன் பின்னர் பொலிசாரிடம் கைது செய்யப்பட்ட குறித்த பாதுகாப்பு அதிகாரி இன்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார். அதன்போது சந்தேக நபர் எதுவித பயங்கரவாத அமைப்புகளுடனும் தொடர்பைக் கொண்டிருக்கவில்லை என்றும், எனினும் அவரது அறைக்குள் இருந்து சந்தேகத்துக்குரிய சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிசார் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளனர்.
எனினும் அதற்கு முந்திய தினம் துப்பாக்கி சுடுதல் பயிற்சிக்காக சென்றிருந்தபோது கீழே விழுந்து கிடந்த நான்கு துப்பாக்கி ரவைகளை உயரதிகாரிகளிடம் கையளிப்பதற்காகவே சந்தேக நபர் எடுத்து வைத்திருந்ததாக அவர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சந்தேக நபரை எதிர்வரும் டிசம்பர் மாதம் 04ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர் முன்னர் கடற்படையில் இணைந்து பணியாற்றிய ஒருவர் என்றும் மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.
http://www.tamilwin.com/show-RUmszBRUKYhp0.html

Geen opmerkingen:

Een reactie posten