தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 20 november 2014

மஹிந்த ராஜபக்ஷ கொலைகாரன், கொள்ளைக்காரன்! சரத் என் சில்வா சாடல்!



வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் தலைமை அலுவலகம் ஜனாதிபதியால் திறந்து வைப்பு
[ வியாழக்கிழமை, 20 நவம்பர் 2014, 01:13.06 PM GMT ]
பெருந்தெருக்கள் மற்றும் துறைமுக அமைச்சின் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் புதிய தலைமை அலுவலகமான மகநெகும மாமெதுர கட்டடத்தை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இன்று திறந்து வைத்தார்.
பத்தரமுல்லை டென்சில் கொப்பேகடுவ மாவத்தையில் 9 மாடிகளை கொண்ட கட்டிடமாக இது நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
கட்டிடத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள கூட்டுறவு மொத்த விற்பனை நிலையத்தின் கிளையையும் ஜனாதிபதி திறந்து வைத்தார்.
http://www.tamilwin.com/show-RUmszBRUKYho3.html
மாணவர்கள் மீது ஜனாதிபதிக்கு திடீர் அக்கறை ஏற்பட்டுள்ளது: அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்
[ வியாழக்கிழமை, 20 நவம்பர் 2014, 01:31.47 PM GMT ]
பல்கலைக்கழக மாணவர்கள் மீது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு திடீரென அக்கறை ஏற்பட்டுள்ளதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் நஜீத் இந்திக தெரிவித்துள்ளார்.
கொழும்பு மருதானை சீ.எஸ்.ஆர் மண்டபத்தில் இன்று மதியம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
பல்கலைக்கழக மாணவர்களின் விடுதி பிரச்சினைகளை தீர்ப்பதாக ஜனாதிபதி தற்பொழுது கூறி வருவதுடன் நிர்மாணித்து முடிக்கப்பட்ட விடுதிகள் தனது முயற்சியில் மேற்கொள்ளப்பட்டது எனக் தெரிவித்து வருகிறார்.
பல்லைக்கழக மாணவர்களின் சகல பிரச்சினைகளும் தீர்க்கப்படும் என்று தொலைக்காட்சியில் விளம்பரங்கள் செய்யப்படுகிறது.
விடுதி பிரச்சினைகள் இருக்கவில்லை. விடுதி பிரச்சினைகளை தீர்ப்பதாக கூறி பிரச்சினைகளை ஆட்சியாளர்களே ஏற்படுத்தினர்.
இந்த அரசாங்கத்திடம் கல்வியை விற்பனை செய்யும் கொள்கையே உள்ளது. விடுதி வசதிகளை வழங்குவது சமூக உதவி என காட்ட முயற்சித்தாலும் அது அரசாங்கத்தின் பொறுப்புகளில் ஒன்று.
அரசாங்கம் கடந்த 4 வருடங்களில் 3 பல்கலைக்கழக மாணவர்களை கொலை செய்துள்ளது. ஆயிரத்து 500 மாணவர்களுக்கு வகுப்பு தடைவிதித்துள்ளது.
மாணவர்களுக்கு கொலை அச்சுறுத்தல்களை விடுத்து இராணுவ ஒற்றர்களை பல்கலைக்கழகத்திற்குள் அனுப்பி முன்னெடுத்த அடக்குமுறையை நாங்கள் நன்கு அறிவோம்.
தொடர்ந்தும் கல்வியை வர்த்தக பொருளாக்கும் கொள்கையை செயற்படுத்தி பல்கலைக்கழக பிரச்சினை தீர்க்க முயற்சிப்பதை கண்டிப்பதாகவும் நஜீத் இந்திக்க குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBRUKYho4.html
ஜாதிக ஹெல உறுமய அரசாங்கத்தை கண்டித்துள்ளது
[ வியாழக்கிழமை, 20 நவம்பர் 2014, 01:33.13 PM GMT ]
ராஜகிரியவில் உள்ள ‘சதாஹம் செவன’ சர்வதேச பௌத்த நிலையத்தின் முன்னால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்துக்கு அரசாங்கமே காரணம் என்று ஜாதிக ஹெல உறுமய குற்றம் சுமத்தியுள்ளது
அரசாங்கத்தில் இருந்து வெளியேறியுள்ள ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் உட்பட்ட 25 பௌத்த பிக்குகள் இந்த நிலையத்தில் தங்கியுள்ளனர்.
இந்த நிலையத்துக்கு முன்னால் இன்று பகல் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது.
இதன்போது அரசாங்கக்கட்சியின் கோட்டே மாநகர முதல்வர் உட்பட்டவர்கள் அதில் பங்கேற்றிருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் பௌத்த பிக்குகளை நிந்திக்கும் வகையில் செயற்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszBRUKYho5.html
மஹிந்த ராஜபக்ஷ கொலைகாரன், கொள்ளைக்காரன்! சரத் என் சில்வா சாடல்
[ வியாழக்கிழமை, 20 நவம்பர் 2014, 01:42.56 PM GMT ]
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒரு கொலைகாரன், கொள்ளைக்காரன் என்று முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா கடுமையாக சாடியுள்ளார்.
சிங்கள இணையத்தளமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
குறித்த நேர்காணலில் அவர் தொடர்ந்தும் தெரிவித்திருப்பதாவது, மஹிந்த ராஜபக்ஷ நீதிமன்றத்தின் கருணை காரணமாக பல தடவைகள் தண்டனையிலிருந்து தப்பித்துக் கொண்டுள்ளார்.
1979ம் ஆண்டு கலவானை தொகுதி இடைத் தேர்தலின் போது சரத் முத்தெட்டுவேகம சுதந்திரக் கட்சி வேட்பாளராக போட்டியிட்டார். அவருக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த மஹிந்த ராஜபக்ஷ, அரசியலமைப்புக்கு விரோதமான கருத்துக்களை வெளியிட்டிருந்தார். அதற்காக அவரது குடியுரிமை பறிக்கப்பட்டது. எனினும் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து நீதிமன்றத்தின் கருணை காரணமாக அந்தத் தண்டனையிலிருந்து தப்பித்துக் கொண்டார்.
அதே போன்று 83ம் ஆண்டு பெலியத்தைத் தொகுதி இடைத்தேர்தலின் போது ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் மூவர் மீது மஹிந்த ராஜபக்ஷ துப்பாக்கிச் சூடு நடத்தியிருந்தார். இதில் இரண்டு பேர் உயிரிழந்திருந்தனர். ஒருவர் படுகாயங்களுடன் உயிர் பிழைத்திருந்தார். இந்தச் சம்பவத்திலும் நீதிமன்றத்தின் கருணை மஹிந்த ராஜபக்ஷவுக்கு சாதகமாக அமைந்தது. எனினும் அவர் ஒரு கொலைகாரன் என்ற விடயம் மட்டும் இன்றளவும் மக்கள் மனங்களில் இருந்து மாறவில்லை.
அதேபோன்று ஹெல்பிங் ஹம்பாந்தோட்டை விவகாரத்தில் அவர் கோடிக்கணக்கில் ஊழல் புரிந்திருந்தார். இந்த விவகாரம் தொடர்பான விசாரணை குறித்து தன்மீது அரசியல் ரீதியாக பழிவாங்கப்படுவதாக நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த மனுவும் நீதிமன்றத்தின் கருணை காரணமாக மஹிந்தவுக்கு சாதகமான முறையில் தீர்ப்பை பெற்றுக்கொடுத்தது. எனினும் அவர் கொள்ளைக்காரன் என்பது உண்மை. அதனை யாராலும் மறுக்க முடியாது.
இந்த வகையில் மஹிந்தவின் ஆரம்பம் கொலை, கொள்ளை என்பதாகத் தான் இருந்துள்ளது. இப்படிப்பட்ட ஒருவரை இன்னொரு தடவை ஜனாதிபதியாகத் தெரிவு செய்தால் தற்போது குற்றுயிரும், குலையுயிருமாக போராடும் ஜனநாயகம் முழுமையாக செத்துவிடும் என்றும் சரத் என் சில்வா தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBRUKYho6.html

Geen opmerkingen:

Een reactie posten