தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 22 november 2014

பொது வேட்பாளராக போட்டியிட இணக்கம் தெரிவித்த நிமால் சிறிபால டி சில்வா!

ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிட அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவும் இணக்கம் வெளியிட்டிருந்தாக தெரியவருகிறது.
ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்த மாதுளுவாவே சோபித தேரர் உட்பட முன்னணி செயற்பட்டாளர்கள் முயற்சித்து கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் அவர் இந்த இணக்கத்தை வெளியிட்டிருந்தார்.
எனினும் ஊவா மாகாண சபைத் தேர்தலின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் ரணில் விக்ரமசிங்க வேட்பாளராக நிறுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டதும் நிமால் சிறிபால டி சில்வா அந்த எண்ணத்தை கைவிட்டதாக கூறப்படுகிறது.
இந்த விடயம் ஜனாதிபதிக்கு தெரியவந்ததன் காரணமாவே பிரதமர் பதவி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவி என்பன சிறிபால டி சில்வாவுக்கு வழங்கப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் பொதுவேட்பாளர் நிலைப்பாட்டுக்கு பின்னால் சர்வதேச சக்திகள்- ஆளும் கட்சியின் வழமையான குற்றச்சாட்டு ஆரம்பமாகியது.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி எந்த சவாலையும் எதிர்கொள்ள தயார் என்று அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். பொதுவேட்பாளர் நிலைப்பாட்டுக்கு பின்னால் சர்வதேச சக்திகள் ஒன்றிணைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக்கட்சி இன்று பயங்காரணமாகவே தேர்தலில் இருந்து விலகிக்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்
இதேவேளை ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமை அதன் அங்கத்தவர்களுக்கு துரோகம் இழைப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உபதலைவர் அமைச்சர் டளஸ் அழகப்பெரும இதனைக்குறிப்பிட்டுள்ளார்
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் ஐக்கியதேசியக்கட்சியும் இலங்கையில் ஜனநாயகத்தை காத்துவரும் கட்சிகள் இந்தநிலையில் அந்தக்கட்சி தனி ஒருவரை தேர்தலில் போட்டியிட வைக்காமல் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஒருவரை ஆதரிப்பது அந்தக்கட்சியின் அங்கத்தவர்களுக்கு செய்யும் துரோகம் என்று அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை ஜேவிபி இந்த தேர்தலை புறக்கணிக்கவிருப்பது குறித்து அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தமது கருத்துக்களை வெளியிட்டார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் சட்டவிரோதமானது என்ற அடிப்படையில் அந்தக்கட்சி செயற்படுவது பொருத்தமானது அல்ல என்று அவர் கூறினார்.
அதேபோல சுனாமியின் பின்னர் விடுதலைப்புலிகளுடன் கட்டமைப்பு ஒன்றை ஏற்படுத்துவது தொடர்பில் முரண்பட்டு சந்திரிக்கா ஆட்சியில் வெளியேறிய ஜாதிக ஹெல உறுமய தற்போது அவருடன் கூட்டணியில் இணைவது எவ்வாறு என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
பொதுவேட்பாளருக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமது ஆதரவை அளித்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் பொதுவேட்பாளர் நிலைப்பாட்டுக்கு அந்தக் கூட்டமைப்பும் ஒத்துழைப்பை வழங்கியுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் பொதுவேட்பாளர் என்ற நிலைப்பாடு மலேசியாவில் இடம்பெற்ற மாநாடு ஒன்றில் தீர்மானிக்கப்பட்டதாகவும் அதில் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரனும் வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரனும் பங்கேற்றதாகவும் அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBRWKYgr4.html

Geen opmerkingen:

Een reactie posten