தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 22 november 2014

பேஸ்புக்கை கட்டுப்படுத்தும் வேலைத்திட்டம் – நாராஹேன்பிட்டியில் விசேட கணனி பிரிவு

அரசாங்கத்திற்கு தலைச்சுற்றும் கிரக பெயர்ச்சி எதிர்காலத்தில்: மேர்வின் சில்வா ஆரூடம்
[ சனிக்கிழமை, 22 நவம்பர் 2014, 01:02.31 PM GMT ]
நாட்டில் நடக்க போகும் கிரகபெயர்ச்சி குறித்து தான் கூறியது பலித்துள்ளதாக அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
சிங்கள இணையத்தளம் ஒன்றிடம் தொலைபேசியில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,

எப்படி இருக்கிறது மேர்வின் கூறிய கிரகபெயர்ச்சி. இலங்கையில் இருக்கும் சிறந்த ஜோதிடன் வேறு யாருமல்ல மேர்வின் சில்வாதான்.
அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சியின் தலைவிதி மேர்வின் கையிலேயே உள்ளது. நேற்று பெரிய கிரகம் ஒன்றும் சிறிய கிரகங்களின் பெயர்ச்சியும் இடம்பெற்றது.
அரசாங்கத்திற்கு தலைச்சுற்று ஏற்படும் கிரகபெயர்ச்சி எதிர்காலத்தில் இடம்பெறும்.
ஜனாதிபதிக்கு இந்த சகல கிரக பெயர்ச்சிகளையும் நிறுத்த முடியும். எனினும் அவரை சுற்றியுள்ள தவளைக் கிரகங்கள் அதற்கு இடமளிப்பதில்லை.
இந்த தவளைக் கிரகங்கள் இணைந்து ஒரு நாள் அவருக்கு முடிவு கட்டிவிடும்.
எனது மகனை வேண்டுமென்றே சிறையில் தடுத்து வைத்துள்ளனர். அவர் திருமணம் செய்து இரண்டு வாரங்கள்தான். அடி வாங்கியது எனது மகன்.
எனது மகனை சிறையில் அடைத்து இவர்கள் தேர்தலில் வெற்றி பெற பார்க்கின்றனர். எனது பொறுமைக்கும் எல்லையுண்டு. இப்படியே சென்றால் நானும் தீர்மானம் ஒன்றை எடுக்க நேரிடும்.
ஆனால் நான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை விட்டுச் செல்ல போவதில்லை. சிறையில் இருந்த அனுபவங்கள் எனக்கு பழக்கமானது. அடுத்த வருடம் எனது 72 வயது.
ஒன்றை மனத்தில் வைத்து கொள்ளுங்கள். ஜே.ஆர்.72 வயதியேயே பதவிக்கு வந்தார் என மேர்வின் சில்வா கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBRWKYgsz.html
மட்டக்களப்பில் கடும் மழை: முகத்துவாரம் வெட்டும் பணி ஆரம்பம்
[ சனிக்கிழமை, 22 நவம்பர் 2014, 01:26.50 PM GMT ]
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் நிலையேற்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களாக தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக மட்டக்களப்பின் குளங்கள் நிரம்பிவருவதுடன் மட்டக்களப்பு வாவியும் பெருகிவருகின்றது.
இதன் காரணமாக வாவியினை அண்டிய பகுதிகள் நீரில் மூழ்கும் நிலையேற்பட்டு வருகின்றது.
அத்துடன் மட்டக்களப்பு நகரின் பிரதான பஸ் நிலையம் வாவிக்கு அருகில் இருப்பதன் காரணமாக அவையும் மூழ்கும் ஆபத்துகள் ஏற்பட்டுள்ளன.
இதன் காரணமாக மக்கள் போக்குவரத்துகள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகவேண்டியுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேபோன்று வெல்லாவெளி, ஏறாவூர்ப்பற்று ஆகிய பகுதிகளில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் ஆபத்துகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
வெள்ள அனர்த்தம் ஏற்படும்போது அவற்றினை எதிர்கொள்ளும் வகையில் பிரதேச செயலகங்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் மாவட்ட செயலகம் அறிவித்துள்ளது.
இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ள அனர்த்தம் ஏற்படாத வகையில் தடுக்கும் வகையில் வெள்ள நீரை கடலுக்குள் வெளியேற்றும் நடவடிக்கைகளில் மட்டக்களப்பு மாவட்ட செயலகம் மற்றும் கடற் தொழில் திணைக்களம் மேற்கொண்டு வருகின்றது.
மட்டக்களப்பு நாவலடிப் பகுதியில் வாவிக்கும் கடலுக்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ள நீர் வெளியேற்றும் முகத்துவாரம் பகுதியில் தோண்டும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸின் பணிப்புரைக்கமைய மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன்,மாவட்ட செயலக கணக்காளர் நேசராசா மற்றும் கடற் தொழில் திணைக்கள மாவட்ட உதவி பணிப்பாளர் டொமிங்கோ ஜோர்ஜ் ஆகியோர் நாவலடிப்பகுதிக்கு சென்று அங்கு மேற்கொள்ளவேண்டிய பணிகள் தொடர்பில் ஆய்வுகளை மேற்கொண்டனர்.
இதனைத்தொடர்ந்து இன்று பிற்பகல் முகத்துவாரம் வெட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக கடற் தொழில் திணைக்கள மாவட்ட உதவி பணிப்பாளர் டொமிங்கோ ஜோர்ஜ் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmszBRWKYgs0.html

பேஸ்புக்கை கட்டுப்படுத்தும் வேலைத்திட்டம் – நாராஹேன்பிட்டியில் விசேட கணனி பிரிவு
[ சனிக்கிழமை, 22 நவம்பர் 2014, 01:38.58 PM GMT ]
அரசாங்கத்திற்கு மிகவும் சவாலான ஊடகங்களாக இருக்கும் இணையத்தளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்தும் விசேட வேலைத்திட்டம் ஒன்றை ராஜபக்ஷவினர் மேற்கொண்டுள்ளதாக தெரியவருகிறது.
இந்த திட்டத்திற்காக கொழும்பு நாராஹேன்பிட்டியில் ஒரு இடத்தில் விசேட கணனி பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தனியார் வானொலி ஒன்றின் பொறுப்பதிகாரியாக பணியாற்றிய ஒருவரின் கீழ் இயங்கும் இந்த கணனிப் பிரிவில் கடந்த காலத்தில் ஜே.வி.பி மற்றும் முன்னிலை சோசலிசக் கட்சியில் இருந்து விலகி கணனி மற்றும் பிரசார பிரிவுகளில் பணியாற்றியவர்கள் சிலரும் இதில் இணைந்து செயற்படுகின்றனர்.
அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் வழிநடத்தலின் கீழ் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இந்த கணனி பிரிவின் மூலம் சில போலி பேஸ்புக் கணக்குகளை ஆரம்பித்து மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக சேறுபூசும் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தோல்வியால் பைத்தியம் பிடித்து போயுள்ள ராஜபக்ஷ அரசாங்கம் இணையத்தளங்களையும் சமூக வலைத்தளங்களையும் இவ்வாறு கட்டுப்படுத்த முயற்சித்து வருவதாக த இண்டிபெண்டன் இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszBRWKYgs1.html

Geen opmerkingen:

Een reactie posten