யுஎஸ்- பிலடெல்பியா வீதியில் வைத்து கடத்தப்பட்ட 22-வயது பெண்ணை கண்டுபிடிக்க பொலிசார் பொது மக்களின் உதவியை நாடியுள்ளனர். இச்சம்பவம் கண்காணிப்பு கமராவில் பதிவாகியுள்ளது.
ஞாயிற்றுகிழமை இரவு 9.40-மணியளவில் Carlesha Freeland-Gaither என்ற பெண் பலவந்தமாக 4-கதவுகளை கொண்ட வாகனமொன்றிற்குள் தள்ளப்பட்டதை கண்டதாக சாட்சி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்டவரின் கண்ணாடி மற்றும் கைத்தொலைபேசி இரண்டும் நெடுஞ்சாலையில் விழுந்து கிடந்துள்ளது. கார் அவ்விடத்தை விட்டு அகல்வதற்கு முன்னர் அப்பெண் சாரதியின் பின் கண்ணாடி மற்றும் பயணிகளின் பக்க பின் கண்ணாடி இரண்டையும் உடைத்ததாகவும் சாட்சியங்கள் தெரிவித்துள்ளனர்.
முழுச்சம்பவமும் கண்காணிப்பு கமராவில் பிடிபட்டுள்ளது. இதனை பிலடெல்பியா பொலிசார் யுரியுப்பில் வெளியிட்டுள்ளனர்.
வாகனத்தில் இருந்து இறங்கிய மனிதன் வீதியை கடந்து சிறிது தூரம் நடந்து பாதிக்கப்பட்ட பெண்ணை அணுகியுள்ளான். வீதியை கடந்து தப்பித்து ஒட முயன்ற பெண்ணை துரத்திச் சென்று பிடித்துள்ளான்.
இந்த போராட்டத்தின் போது சந்தேக நபரின் காரை அணுகிய இன்னுமொரு வாகனம் திடீரென யு-ரேனில் திரும்பி கடத்தல்காரனையும் பாதிக்கப்பட்டவரும் வெளியேற இடமளித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
கடத்தப்பட்டவர் ஒரு தாதியாக கடமையாற்றுபவர்.
இவர் பின்தொடரப்பட்டிருக்கலாம் என நம்பபடுகின்றது.
சம்பவம் நடந்த இடத்தில் ஒரு கையுறை மற்றும் ஒரு கத்தி என்பன கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
பொலிசார் மாநில சட்ட அமுலாக்க பிரிவு மற்றும் FBI அதிகாரிகளுடன் சேர்ந்து கடத்தப்பட்ட பெண்ணையும் கடத்தியவரையும் கண்டு பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
தனது மகளை தீங்குகள் ஏதுமின்றி விடும்படி கடத்தியவரை தாதியின் தந்தை கேட்டுள்ளார்.
கடத்தல் காரரை கைது செய்ய தகுந்த தகவல் தெரிவிப்பவர்களிற்கு 10,000 டொலர்கள் பரிசு வழங்கப் படுமென அறிவிக்கப் பட்டுள்ளது.
news7newsnews1news2news3news4news6
 - See more at: http://www.canadamirror.com/canada/33567.html#sthash.zJKLgDqN.dpuf