தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 7 november 2014

மாலக்க சில்வா, வெளிநாட்டவர்களை தாக்கிய சம்பவம்: அமைச்சு பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் தொடர்பு!

ஆங்கிலேயர் கால நாணங்களை விற்பனை செய்ய முயன்ற இருவர் கைது
[ வெள்ளிக்கிழமை, 07 நவம்பர் 2014, 03:03.48 AM GMT ]
பெருந்தொகையான ஆங்கிலேயர் கால நாணயங்களை விற்பனை செய்ய முயன்ற இருவர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் நேற்று குருநாகல் மாவட்டம், குளியாப்பிட்டியவில் நடைபெற்றுள்ளது.
தொல்பொருள் மதிப்புள்ள ஆங்கிலேயர் காலத்து வீ.ஓ.சி. நாணயங்கள் 498 ஐ விற்பனை செய்வதற்கு இரண்டு நபர்கள் முயற்சிப்பதாக பொலிசாருக்குத தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து குறித்த இரண்டுபேரையும் கைது செய்த பொலிசார் குளியாப்பிட்டிய நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர்.
சந்தேக நபர்களைப் பிணையில் செல்ல அனுமதித்த நீதவான், அவர்களிடமிருந்த பழங்கால நாணயங்களை பறிமுதல் செய்து திறைசேரியில் சேர்க்க உத்தரவிட்டுள்ளார்.
மேலும் குறித்த நாணயங்கள் அவர்களுக்கு எப்படிக் கிடைத்தன? எங்கிருந்தாவது திருடினார்களா என்பது குறித்து விசாரணை நடத்துமாறும் பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBTbKXfoy.html
கொழும்பு பிரதான சுடுகாட்டின் நிலத்துக்கான விலை 10 மடங்கால் அதிகரிப்பு!
[ வெள்ளிக்கிழமை, 07 நவம்பர் 2014, 03:40.24 AM GMT ]
இலங்கையில் பிரதான சுடுகாட்டில் மனித உடல்களை அடக்கம் செய்வதற்கான நிலத்தின் விலை 10 மடங்கால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த சுடுகாடு பிரித்தானியர் ஆட்சி செய்த 1866 ஆம் ஆண்டு காலத்தில் அமைக்கப்பட்டதாகும். இந்த சுடுகாட்டை கொழும்பு மாநகர சபை பராமரித்து வருகிறது.
இந்தநிலையில் தமக்கு பாரிய இடப்பற்றாக்குறை பிரச்சினை தோன்றியுள்ளதாக கொழும்பு மேயர் ஏ ஜே எம் முஸம்மில் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து சந்தைப்பெறுமதிக்கு ஏற்ப இந்த சுடுகாட்டில் அடக்கம் செய்யப்படும் உடல்களுக்கான இடம் மீள்மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
கொழும்பு மாநாகரசபை எல்லைக்குள் உள்ள 550000 பேர் இந்த சுடுகாட்டில் தமது உடல்களை அடக்கம் செய்வதற்கு தகுதியுடையவர்களாக உள்ளனர்.
வெளியிடங்களில் உள்ளவர்களும் இங்கு உடல்களை அடக்கம் செய்ய முனைகின்றனர்.
இந்தநிலையில் குறித்த சுடுகாட்டின் 0.37 சதுரமீற்றர் அளவான நிலம் 132 டொலர்கள் முதல் 1300 டொலர்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த சுடுகாட்டிலேயே விஞ்ஞானியான ஆர்தர் சி கிளார்க்கின் கல்லறையும் அமைந்துள்ளது
http://www.tamilwin.com/show-RUmszBTbKXfo1.html
மாலக்க சில்வா, வெளிநாட்டவர்களை தாக்கிய சம்பவம்: அமைச்சு பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் தொடர்பு
[ வெள்ளிக்கிழமை, 07 நவம்பர் 2014, 03:51.12 AM GMT ]
வெளிநாட்டவர்கள் இருவர் மீது அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் மாலக்க சில்வா தாக்குதல் நடத்திய சம்பவத்தின்போது அமைச்சு பாதுகாப்பு பிரிவை சேர்ந்த இரண்டு அலுவலர்களும் இருந்தாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்தக்குற்றச்சாட்டை பொலிஸ் பேச்சாளரும் ஏற்றுக்கொண்டுள்ளார்.
எனினும் சம்பவத்தின்போது குறித்த இரண்டு அலுவலர்களும் இரவு கேளிக்கை அரங்கில் வெளியில் நின்றதாகவும் மாலக்க சில்வாவும் ஏனைய ஐந்துபேரும் உள்ளே சென்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் குறித்த இரண்டு அலுவலர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் மாலக்க சில்வாவும் நண்பர்களும் நீதிமன்றக்காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmszBTbKXfo2.html

Geen opmerkingen:

Een reactie posten