தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 7 november 2014

இலங்கை- இந்திய கிரிக்கட் போட்டிக்காக தெலுங்கானாவில் கடும் பாதுகாப்பு!

வடமாகாண முதலமைச்சர் இந்தியாவுக்கு புறப்பட்டு சென்றார்!
[ வெள்ளிக்கிழமை, 07 நவம்பர் 2014, 04:00.16 AM GMT ]
வடமாகாண முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரன் இன்று காலை இந்தியாவுக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.
இந்தியாவின் அரச சார்ப்பற்ற அமைப்பு ஒன்று ஏற்பாடு செய்துள்ள சொற்பொழிவு நிகழ்வு ஒன்றில் பங்கேற்பதற்காகவே அவர் இந்தியாவுக்கு சென்றுள்ளார்.
விக்னேஸ்வரன் பங்கேற்கும் சொற்பொழிவு சென்னையில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது.
இதேவேளை இந்த பயணத்தில் இணைந்துக்கொள்ளும் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா நேற்றே இந்தியாவுக்கு சென்றுள்ளார்,எம்.ஏ. சுமந்திரன் நாளை இந்தியாவுக்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தநிலையில் இந்தப்பயணத்தின்போது விக்னேஸ்வரன் குழுவினர் இந்திய பிரதமரை சந்திப்பார்களா? என்பது குறித்து தெளிவான தகவல்கள் எவையும் வெளியாகவில்லை.
http://www.tamilwin.com/show-RUmszBTbKXfo3.html
சிவாஜிலிங்கம் திடீர் சுகயீனம்: தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!
[ வெள்ளிக்கிழமை, 07 நவம்பர் 2014, 04:49.49 AM GMT ]
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய அரசியல்வாதிகளில் ஒருவரான எம்.கே. சிவாஜிலிங்கம் நேற்று மாலை யாழ். மருத்துவமனை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த சில நாட்களாகவே வட மாகாண சபை உறுப்பினரான சிவாஜிலிங்கம் கடுமையான சுகவீனம் காரணமாக அவதிப்பட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று அவரது நிலைமை வழமையை விட மோசமடைந்த நிலையில், யாழ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்துள்ளனர்.
சிவாஜிலிங்கத்துக்கு இன்று முக்கியமான சத்திரசிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட இருப்பதாகவும் யாழ். மருத்துவமனை வட்டாரங்களிலிருந்து தெரிய வந்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszBTbKXfo5.html

இலங்கை- இந்திய கிரிக்கட் போட்டிக்காக தெலுங்கானாவில் கடும் பாதுகாப்பு!
[ வெள்ளிக்கிழமை, 07 நவம்பர் 2014, 04:11.42 AM GMT ]
இலங்கை கிரிக்கட் அணிக்கும் இந்திய கிரிக்கட் அணிக்கும் இடையில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமையன்று ஹைதராபாத் உப்பால் ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெறவுள்ள சர்வதேச ஒருநாள் கிரிக்கட் போட்டிக்காக தீவிரபாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதன்பொருட்டு மைதானத்தை சுற்றி 56 கமராக்கள் பொருத்தப்படவுள்ளன.
இவையாவும் சிசிடிவியின் ஊடாக கண்காணிப்படவுள்ளதுடன், சுமார் 1500 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
பார்வையாளர்கள் பைகள் ,கைத்தொலைபேசி,கமரா ,தொலைக்காட்டி மற்றும் போத்தல்களை கொண்டு வரமுடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அவசர தேவைகளின் நிமித்தம் கொமாண்டோக்களின் உதவியும் பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.
இந்தப்போட்டியின் ஆரம்ப நிகழ்வில் தெலுங்கானா மாநில முதல்வர் கே.சந்திரசேகரராவ் பங்கேற்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது
http://www.tamilwin.com/show-RUmszBTbKXfo4.html

Geen opmerkingen:

Een reactie posten