தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 7 november 2014

பிரதமர் ஜயரத்ன இந்தியாவிற்கு விஜயம்! கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள்!

மீரியாபெத்தயில் பெற்றோரை இழந்த பிள்ளைகளை வடமாகாணசபை பொறுப்பேற்கக்கூறுவது அரசியலாகும்!- அரசாங்கம்
[ வெள்ளிக்கிழமை, 07 நவம்பர் 2014, 01:03.14 AM GMT ]
கொஸ்லாந்தை மீரியாபெத்த மண்சரிவின்போது பெற்றோரை இழந்த பிள்ளைகளை வடமாகாணசபை பொறுப்பேற்கப்போவதாக தெரிவிக்கப்பட்ட கருத்து அரசியல் நோக்கத்தை கொண்டது என்று அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர இந்த குற்;றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
இதேவேளை பெற்றோரை இழந்த பிள்ளைகள் தொடர்பில் தொடர்ந்தும் முரண்பட்ட தகவல்கள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.
முன்னதாக 75 பிள்ளைகள் தமது பெற்றோரை இழந்ததாக தெரிவிக்கப்பட்டது.
தற்போது 3 பிள்ளைகள் மாத்திரமே தமது பெற்றோர் இருவரையும் இழந்துள்ளதாகவும் ஏனைய பிள்ளைகள் பெற்றோரில் ஒருவரையே இழந்துள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.
இந்தநிலையில் குறித்த பிள்ளைகளை பராமரிக்க அரசாங்கம் முழுமையான ஆளுமையை கொண்டிருப்பதாக அமரவீர தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBTbKXgx0.html
கொஸ்லாந்த புதிய வீடமைப்புத் திட்டம்! பதினைந்தாம் திகதி ஆரம்பம்
[ வெள்ளிக்கிழமை, 07 நவம்பர் 2014, 01:06.58 AM GMT ]
கொஸ்லாந்தையில் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான புதிய தொடர்மாடி வீடமைப்புத் திட்டத்தின் பணிகள் வரும் 15ம் திகதி தொடங்கவுள்ளது.
மத்திய மாகாணத்தின் இராணுவ கட்டளைத் தளபதி மனோ பெரேராவை மேற்கோள்காட்டி திவயின பத்திரிகை இது தொடர்பான செய்தியொன்றை வெளியிட்டுள்ளது.
தற்போதைய நிலையில் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட 75 குடும்பங்களுக்கு மட்டுமே புதிய வீடுகள் கட்டிக்கொடுக்கப்படவுள்ளது. இதற்காக பதுளை ஹம்பிடிகந்த பிரதேசத்தில் காணியொன்று இனம் காணப்பட்டுள்ளது.
இந்தக் காணி தோட்ட உரிமையாளரினால் கையளிக்கப்பட்டவுடன் இராணுவத்தினரைக் கொண்டு நிர்மாணப்பணிகள் உடனடியாக முன்னெடுக்கப்படும் என்றும் மனோ பெரேரா தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBTbKXgx1.html
சீனாவின் அணுஆயுத நீர்மூழ்கிக்கப்பல் இலங்கை வரவில்லை! மறுக்கும் கடற்படை
[ வெள்ளிக்கிழமை, 07 நவம்பர் 2014, 01:33.46 AM GMT ]
சீனாவின் அணுஆயுதம் தாங்கிய நீர்மூழ்கிக்கப்பல் எதுவும் கொழும்புத் துறைமுகத்துக்கு வருகை தரவில்லை என்று கடற்படையினர் மறுத்துள்ளனர்.
அண்மையில் சீனாவின் அணுஆயுத ஏவுகணைகளுடன் கூடிய நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று கொழும்புத் துறைமுகத்துக்கு வந்து சென்றதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இது தொடர்பாக இந்தியாவில் கடும் எதிர்ப்பலை எழுந்திருந்தது.
இந்நிலையில் இந்தச் செய்தியை இலங்கைக் கடற்படை மறுத்துள்ளது.
சீனாவின் நீர்மூழ்கிக்கப்பல் கொழும்புக்கு வந்தது உண்மை என்றாலும் அது நீர்மூழ்கிக்கப்பல் கிடையாது. வெறும் டீசலில் இயங்கும் சாதாரண நீர்மூழ்கியொன்றே வந்து சென்றுள்ளது.
கொழும்புத் துறைமுகத்துக்கு எந்தவொரு நாட்டின் யுத்தக் கப்பல்களும் எரிபொருள் பெற்றுக் கொள்வதற்காக வந்து செல்லலாம்.
இதுவரை பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 206 போர்க் கப்பல்கள் அவ்வாறு வந்து சென்றுள்ளன. இதனை யாரும் தவறு என்று கூறமுடியாது.
இந்தியாவில் எதிர்ப்பலை ஒன்றை உருவாக்குவதற்காகவே சீனாவின் அணுஆயுதம் தாங்கிய நீர்மூழ்கிக்கப்பல் இலங்கை வந்து சென்றதாக புரளி கிளப்பி விடப்பட்டுள்ளது.
அதில் எள்ளளவும் உண்மையில்லை என்று பெயர் குறிப்பிடாத கடற்படை உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளதாக திவயின பத்திரிகையின் செய்தியொன்று தெரிவிக்கின்றது.
http://www.tamilwin.com/show-RUmszBTbKXgx2.html
கொஸ்லாந்த மண்சரிவு! அரசாங்க நிறுவனங்களின் அறிக்கைகளில் முரண்பாடு
[ வெள்ளிக்கிழமை, 07 நவம்பர் 2014, 02:16.15 AM GMT ]
கொஸ்லந்தை அனர்த்தம் தொடர்பாக அரசாங்க நிறுவனங்களின் அறிக்கைகளில் முரண்பாடு காணப்படுகின்றது.
பொலிஸார், இடர் முகாமைத்துவ நிலையம் மற்றும் மாவட்டச் செயலகம் என்பன இவ்வாறு முரண்பட்ட அறிக்கைகளை வெளியிட்டுள்ளன.
பிரதேசத்தில் வாழ்ந்தவர்களின் எண்ணிக்கை மற்றும் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை என்பன பற்றிய தகவல்களில் வித்தியாசம் காணப்படுகின்றது.
பதுளை மாவட்டச் செயலாளர் ரோஹண திசாநாயக்க வெளியிட்டுள்ள அறிக்கையில், 64 குடும்பங்கள் வாழ்ந்து வந்ததாகவும் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை 340 என தெரிவித்துள்ளார்.
12 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. முகாம்களில் தங்கியிருக்கும் மக்களின் எண்ணிக்கை 296, காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 22 என குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இடர்முகாமைத்துவ மத்திய நிலையத்தின் புள்ளி விபரங்கள் மாறுபட்ட தகவல்களையே வெளிப்படுத்துகின்றது.
பிரதேசத்தில் 57 குடும்பங்கள் வாழ்ந்து வந்ததாகவும் இந்தக் குடும்பங்களைச் சேர்ந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 330 எனவும் தெரிவித்துள்ளது.
காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 22 ஆகும். வேறு பிரதேசங்களில் வசித்து வரும் நபர்களின் எண்ணிக்கை 44 ஆகும்.
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 எனத் தெரிவித்துள்ளது.  இந்த புள்ளி விபரத் தகவல்கள் உறுதிப்படுத்தப்படாதவை என தெரிவித்துள்ளது.
இதேவேளை, காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 28 என பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மீரியபெத்த பிரதேசத்தில் வாழ்ந்த மக்களின் எண்ணிக்கை காணாமல் போனவாகள் மற்றும் உயிரிழந்தவர்கள் பற்றிய சரியான தகல்களை வழங்க மூன்று அரசாங்க நிறுவனங்களினாலும் முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszBTbKXgx4.html
பிரதமர் ஜயரத்ன இந்தியாவிற்கு விஜயம்! கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள்
[ வெள்ளிக்கிழமை, 07 நவம்பர் 2014, 03:36.54 AM GMT ]
இலங்கையின் பிரதமர் டி.எம்.ஜயரத்ன நாளை இந்தியாவுக்கு செல்லவுள்ளார். இதனை முன்னிட்டு இந்தியாவில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மணிப்பால் பல்கலைக்கழகத்தின் வருடாந்த பட்டமளிப்பு நிகழ்வில் பங்கேற்பதற்காகவே அவர் இந்தியா செல்கிறார்.
இதன்போது பிரதமர் மங்களூர் விமானத் தளத்தில் இருந்து மணிப்பாலுக்கு எதிர்வரும் 8 ஆம் திகதியும், பின்னர் 9ஆம் திகதி மணிப்பாலில் இருந்து மங்களூர் திரும்பும்போதும் இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் ஹொட்டல்கள் மற்றும் தங்குமிடங்கள் ஆகியவற்றில் தங்கியிருப்போரின் விபரங்கள் திரட்டப்படுகின்றனெ.
அத்துடன் வாகனங்கள் தரித்து நிற்பதற்கும் சில இடங்களில் தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszBTbKXfo0.html

Geen opmerkingen:

Een reactie posten