யாழ்ப்பாணத்தின் வலிகாமம் மேற்கே, பொன்னாலைச் சந்திக்கு அண்மித்த கடற்கரையை அண்டிய காட்டுப்பகுதியில் நேற்று மாலை(08) ஆண் ஒருவரின் உடலம் அழுகிய நிலையில் பொதுமக்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பொன்னாலைச் சந்தியிலிருந்து சம்பில்துறை செல்லும் பிரதான வீதிப் பக்கமாக, ஒரு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள காட்டுப் பகுதியைக் கொண்ட கடற்கரையிலேயே மேற்படி சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் இது உயிரிழந்து சில வாரங்களாக இருக்கலாமென்றும் வட்டுக்கோட்டைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். (இளகிய மனம் கொண்டவர்கள் பார்க்கவேண்டாம்)



Geen opmerkingen:
Een reactie posten