அண்மைய நாட்களாக யாழ்.பல்கலைக்கழக சூழலில் இலங்கை இராணுவத்தின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. பல்கலைக்கழககத்திற்குல் செல்லும் மாணவர்கள் கண்காணிக்கப்படுவதாக கூறப்படுகிறது. பல்கலைக்கழகத்தின் பிரதான வாயிலில் நிற்கும் படையினர் பல்கலைக்கழகத்திற்குள் என்ன நடக்கிறது என்று நோட்டமிட்படியுள்ளனர். விரிவுரை முடித்து வரும் மாணவர்களிடம் உள்ளே என்ன நடக்கிறது என விசாரிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நவம்பர் மாதம் தொடங்கியுள்ளதால் யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் மாவீரர் தினத்தை கொண்டாடும், வகையில் நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருக்கலாம் என்ற அச்சம் காரணமாகவே இவ்வாறு இராணுவத்தினர் நிற்பதாக கூறப்படுகிறது. இந்த நடவடிக்கைகளே நவம்பர் மாதத்தையும் மாவீரர் நாளையும் தமக்கு நினைவுபடுத்துவதாக யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கூறுகின்றனர். இதேவேளை இவ்வாறான இராணுவ செயற்பாடுகள் பல்கலைக்கழக செயற்பாடுகளை பாதிப்பதாக, பெயர் குறிப்பிட விரும்பாத பேராசிரியர் ஒருவர் குறிப்பிட்டார்.

Geen opmerkingen:
Een reactie posten