[ ஞாயிற்றுக்கிழமை, 02 நவம்பர் 2014, 04:47.44 PM GMT ]
எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்பட வேண்டும் என்ற வேண்டுகோளுடன் நேற்று மாலை அவரை சந்திக்க வந்திருந்த கட்சி முக்கியஸ்தர்களிடம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் வேட்பாளர் ஒருவர் போட்டியிட்டே ஆகவேண்டும்.
அது நானாகவும் இருக்கலாம். அல்லது நான் போட்டியிட முடியாத பட்சத்தில் சஜித் பிரேமதாச போட்டியிடுவார். அதனைத் தவிர பொது வேட்பாளர் என்ற கருத்துடன் உடன்படவில்லை என்றும் ரணில் வலியுறுத்தியுள்ளார்.
எனினும் ஜனாதிபதித் தேர்தலில் யார் போட்டியிடுவது என்பது குறித்து ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு இதுவரை முடிவெடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszBTWKXir5.html
மங்கள சமரவீர அரசாங்கத்துக்குப் பாராட்டு? சொல்வது அமைச்சர் விமல்
[ ஞாயிற்றுக்கிழமை, 02 நவம்பர் 2014, 04:36.14 PM GMT ]
கடந்த வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய மங்கள சமரவீர, இன ஒற்றுமை இல்லாமல், தேசிய நல்லிணக்கம் இல்லாமல் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது என்று தெரிவித்திருந்தார்.
அவ்வாறான ஒரு நிலை ஏற்படும் வரை நாட்டின் அபிவிருத்திக்கான திட்டங்கள் தீட்டப்பட்டாலும் நடைமுறைப்படுத்துவது கடினமானது என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
கடந்த ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக நாட்டில் தேசிய நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்குப்பதில் வரவு செலவுத்திட்ட அறிக்கை நாட்டின் அபிவிருத்தியை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டிருந்ததாக மங்கள சமரவீர சுட்டிக் காட்டியிருந்தார்.
அது கடலோர மணல் மாளிகை கட்டுவதற்கு ஒப்பானது என்று விமர்சித்திருந்த மங்கள, அரசின் இந்த வரவு செலவுத்திட்டமும் ஒரு தற்காலிக திருப்தியை மட்டுமே தரும் என்றும் சாடியிருந்தார்.
எனினும் இவ்வளவு விடயங்களையும் விட்டுவிட்டு, நாட்டின் அபிவிருத்திக்கான வரவு செலவுத்திட்டம் என்ற ஒன்றை மட்டும் அமைச்சர் விமல் வீரவன்ச தூக்கிப் பிடித்துள்ளார்.
அதன் மூலம் அரசாங்கம் சரியான பாதையில் பயணித்துக் கொண்டிருப்பதாக மங்கள சமரவீர பாராட்டியுள்ளார் என்றும் அமைச்சர் விமல் வீரவன்ச தனது நாடாளுமன்ற உரையில் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBTWKXir4.html
Geen opmerkingen:
Een reactie posten